தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 31 maart 2015

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை குறித்து தீர்மானமில்லை: அஜித் பி பெரேரா

தடைக்கற்களை படிக்கற்களாக்கிய மைத்திரி அரசு
[ செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015, 04:31.48 AM GMT ]
மைத்திரிபால அரசாங்கம் தடைகளையும் தாண்டி சில வெற்றி படிகளை அடைந்துள்ளது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி இதனைத் தெரிவித்துள்ளார்.
இங்கிரியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நேற்று கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
மைத்திரி அரசாங்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் பரவலான கருத்துக்கள், விமர்சனங்கள் இருந்த போதும், அரசாங்கத்திடமிருந்து பொது மக்கள் வெற்றியடைந்த சில விடயங்களும் காணப்படுகிறன.
ஐக்கிய தேசிய கட்சியின் மோசடியான சில உறுப்பினர்கள் தற்போது அமைச்சுப் பதவிகளை பெற்றுள்ள போதிலும் தற்போதைய அரசாங்கத்திடமிருந்து பொது மக்கள் சிற் சில நன்மைகளையும் பெற்றுள்ளனர்.
கடந்த காலங்களில் தமது சுய கருத்துக்களை வெளியிட முடியாமலும், விரும்பிய அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாமலுமான ஒரு அச்ச நிலை நாட்டில் காணப்பட்டது.
எனினும் தற்போது அந்த நிலைமை மாறி மக்கள் அச்சமின்றி தமது கருத்துக்களை வெளியிட்டு சுதந்திரமான ஒரு வாழ்வை வாழ்வதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் முறை மாற்றம் தொடர்பான பேச்சுவார்த்தை! தீர்வின்றி முடிவு
[ செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015, 04:37.28 AM GMT ]
புதிய தேர்தல் முறைமை குறித்து இடம்பெற்ற பேச்சுவார்த்தை தீர்மானங்கள் எதுவுமின்றி நிறைவு பெற்றதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மகிந்த தேசப்பிரிய தலைமையில் நேற்று அலரி மாளிகையில் இப்பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ளனர்.
தேர்தல் முறைமை மாற்றம் குறித்து கருத்து பரிமாற்றங்கள் செய்யப்பட்ட போதிலும் உடனடியாக தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
எனவே எதிர்வரும் பொது தேர்தல் நடைமுறையிலுள்ள தேர்தல் முறைமையிலேயே நடத்த வேண்டும் என சில அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும் இந்த கோரிக்கையை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட சில முக்கிய கட்சி தலைவர்கள் நிராகரித்துள்ளதுடன், இதற்கு எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையிலேயே தேர்தல் முறையில் மாற்றம் தொடர்பிலான பேச்சுவார்த்தை தீர்மானங்கள் எதுவுமின்றி நிறைவு பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இது குறித்து தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyDQVSUkozE.html

19வது அரசியலமைப்புக்கு எதிராக 8 மனுக்கள் தாக்கல்
[ செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015, 05:05.01 AM GMT ]
அரசியலமைப்பின் 19வது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 8 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்கள் நேற்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
19வது அரசியலமைப்பை அமுல்படுத்துவதற்கு பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள அல்லது சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்த வேண்டும் என உத்தரவிடுமாறு வலியுறுத்தியே இம்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
பிரபல சட்டவுரைஞர் கொமின் தயாசிரி, பிவிதுரு ஹெல உறுமய செயலாளர் உதய கம்பன்பில மற்றும் நுகேகொடையைச்சேர்ந்த எல்.பி.ஐ பெரேரா, தலவத்து கொடையைச் சேர்ந்த தர்ஷன வீரசேகர, சங்கைக்குரிய பெங்கமுவே நாலக்க தேரர், கோட்டை வீதியைச் சேர்ந்த வணிகசேகர, சங்கைக்குரிய மாத்தறை ஆனந்த சங்கர தேரர் மற்றும் அத்துருகிரியவைச் சேர்ந்த வீரதுவ ஆகியோரே இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளார்கள்.
குறித்த மனு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 19வது திருத்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி கொள்வதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டியதில்லை என ஜனாதிபதி அரசியல் விவகாரங்களுக்கான ஆலோசகர் ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyDQVSUkozG.html

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை குறித்து தீர்மானமில்லை: அஜித் பி பெரேரா
[ செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015, 05:57.41 AM GMT ]
புலம்பெயர் அமைப்புக்களை தடை செய்வது தொடர்பில் அரசாங்கம் இதுவரை எவ்வித தீர்மானங்களையும் எடுக்கவில்லை என பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.
இது உணர்வுபூர்வமான பிரச்சினை என்பதினால் மிகவும் நிதானமான முறையிலேயே கையாள வேண்டும் எனவும், இதற்கு பாராளுமன்றத்தின் ஆதரவும் அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த அரசாங்கம் கடந்த காலத்தில் பெருமளவிலான புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனிப்பட்ட நபர்களை தடை செய்யப்பட்ட பட்டியலில் அறிவித்திருந்தது.
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புகளை வைத்திருந்ததாக தெரிவித்தே குறித்த தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஐ.நா பேரவையின் பிரகடனமொன்றின் படி 16 புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் 424 தனிப்பட்ட நபர்கள் தடைசெய்யப்பட்ட பட்டியலில் இணைக்கப்பட்டிருந்தனர்.
புலிகளுடன் தொடர்புகளை கொண்டிருந்தமைக்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லாத அமைப்புக்கள் மற்றும் தனிப்படட நபர்களை இந்த பட்டியலிலிருந்து நீக்குவது குறித்து கவனம் செலுத்தப்படும் என தற்போதைய அரசாங்கம் தெரிவித்திருந்தது என பிரதி வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyDQVSUko0C.html

Geen opmerkingen:

Een reactie posten