நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியில் இலங்கையில் வன்முறைகள் அதிகரித்துள்ளதாக கூறியுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவிடம் செல்வாரா என கேள்வி எழுப்பட்டுள்ளது
சுட்டுக்கொல்லப்பட்ட ரத்கம பிரதேச சபையின் தலைவர் மனோஜ் மெண்டிஸின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி, நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் வன்முறைகள் அதிகரித்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
அத்துடன் இலங்கையில் நடைபெற்று வரும் வன்முறை குறித்து முறைப்பாடு செய்வதற்காக மகிந்த ராஜபக்ச ஜெனிவா செல்லவுள்ளதாகவும் தெரியவருவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
மகிந்த இதற்கு முன்னரும் இலங்கையில் இடம்பெற்ற கொலைகள் குறித்து ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவிற்கு சென்று முறைப்பாடு செய்துள்ளார்.
25 வருடங்களுக்கு முன்னர் அதாவது 1987ம் 1989ம் ஆண்டுகளில் இடம்பெற்ற இளைஞர்களின் கொலைகள் தொடர்பாக சர்வதேசத்திடம் முறைப்பாடு செய்வதற்காக அன்று நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மகிந்த ராஜபக்ச ஜெனிவாவுக்கு சென்றார்.
இது இலங்கை மக்களுக்கு நன்கு நினைவில் உள்ளது. எனினும் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தான் ஜெனிவா சென்றதை மகிந்த மறந்து போனவர் போல் செயற்பட்டார்.
ஜெனிவா சென்றதை அவர் மறக்கவில்லை என்றால், லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டமை, பிரகீத் எக்னெலியகொட காணாமல் போனமை, லலித் மற்றும் குகன் ஆகியோர் காணாமல் போன சம்பவங்கள் பற்றி முறைப்பாடு செய்ய அவர் ஜெனிவா சென்றிருக்க வேண்டும்.
இதனைத் தவிர வெள்ளை வான் வன்முறை, நீதித்துறையில் தலையீடுகள், பிரதம நீதியரசரை பதவியில் இருந்து நீக்கியமை ஆகிய சம்பவங்கள் தொடர்பாகவும் மகிந்த சர்வதேச மனித உரிமை அமைப்புகளுக்கு தெளிவுபடுத்தியிருக்க வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற குற்றச் செயல்கள் சம்பந்தமாக மகிந்த ராஜபக்ச, ஜெனிவா சென்று முறைப்பாடு செய்திருந்தால், தினமும் இரண்டு மூன்று தடவைகள் அவர் ஜெனிவாவுக்கு சென்று வர வேண்டிய நிலமை ஏற்பட்டிருக்கும்.
எனினும் மகிந்த ராஜபக்ச தனது ஆட்சிக்காலத்தில் ஜெனிவா என்ற நகரம் இருப்பதை அறியாதவர் போல் செயற்பட்டார். அல்லது 87ம் 89ம் ஆண்டுகளில் அப்படியான முறைப்பாட்டை செய்யாதவர் போல் நடந்து கொண்டார்.
தற்போது ஆட்சி அதிகாரம் கைவிட்டு போன நிலையில் அவருக்கு மீண்டும் ஜெனிவா நகரம் நினைவுக்கு வந்துள்ளது.
இழந்த அதிகாரத்தை மீண்டும் பெறவும் மக்களின் ஈர்ப்பை வென்றெடுக்கவும் கடந்த காலங்களில் ஏற்றிருந்த மனித உரிமை பாதுகாவலன் என்ற பாத்திரத்திற்கு மீண்டும் உயிரூட்ட மகிந்த தற்போது முயற்சித்து வருகிறார்.
எனினும் நாட்டு மக்கள் இந்த பிசாசை பற்றி பல வருடங்களாக நன்கு அறிந்து கொண்டார் என்பதால், எந்த உருவில் அந்த பிசாசு வந்தாலும் ஏமாறப் போவதில்லை என்பது உறுதியானது எனவும் அந்த சிங்கள இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyDRdSUlxzD.html
Geen opmerkingen:
Een reactie posten