தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 29 maart 2015

"சேம் சைட் கோல்" போடும் மேர்வின்: கோட்டபாய கொலைகள் பற்றி தகவல் வெளியிட்டார் !

இப்படியான தகவல்களை எப்படி தான் மேர்வின் வெளியிடுகிறார் என்று தெரியவில்லை. ஒரே கட்சிக்குள் இருந்துகொண்டு , மேர்வின் சில்வா போடும் ஆட்டமே தனி. அதுபோக அவரை ஐக்கிய தேசிய கட்சி நன்றாகவே பாவித்தும் வருகிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையுடன் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவிற்கு தொடர்பு உண்டு என முன்னாள் பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். இதுவும் பரபரப்பாக பேசப்படும் விடையம்.
உள்நாட்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்த சகல விபரங்களையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். லசந்தவுடன் கோதபாய கடும் கோபம் கொண்டிருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வதந்திகளின் அடிப்படையில் கோதபாய செயற்படுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கடந்த ஜனவரி மாதம் 17ம் திகதி முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஸ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ ஆகியோருக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்துள்ளார். 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி லசந்த அத்திட்டிய என்னும் இடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
http://www.athirvu.com/newsdetail/2699.html

Geen opmerkingen:

Een reactie posten