கோடரியால் தாக்கப்பட்ட ஜனாதிபதியின் தம்பி பிரியந்த சிறிசேன அதிகாலை உயிரிழந்தார்! திங்கள் இறுதிச்சடங்கு
[ சனிக்கிழமை, 28 மார்ச் 2015, 12:55.24 AM GMT ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் பிரியந்த சிறிசேன நேற்று முன்தினம் பொலனறுவையில் வைத்து கோடரி தாக்குதலுக்கு இலக்கானார்.
தாக்குதலினால் பிரியந்த சிறிசேனவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது.
பொலனறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரியந்த பின்னர் வான் வழியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு , கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
தலையில் நான்கு மணி நேர சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அவரது பின் தலையில், மூளைக்குள் இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், இயந்திர உதவியுடனேயே அவர் சுவாசித்துக் கொண்டிருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
தாக்குதலில் படுகாயமடைந்த 43 வயதான பிரியந்த சிகிச்சை பலனளிக்காத நிலையில் இன்று அதிகாலை 4.00 மணியளவில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2ம் இணைப்பு
பிரியந்த சிறிசேனவில் இறுதி சடங்கு திங்கள் இடம்பெறும்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரரான பிரியந்த சிறிசேனவின் (வயது 43) இறுதி சடங்கு எதிர்வரும் 30ம் திகதி திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு, பொலன்னறுவை பொது மயானத்தில் இடம்பெறும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரரான பிரியந்த சிறிசேனவின் (வயது 43) இறுதி சடங்கு எதிர்வரும் 30ம் திகதி திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு, பொலன்னறுவை பொது மயானத்தில் இடம்பெறும்.
அவருடைய பூதவுடல், எத்துகல்பிட்டியவில் உள்ள அன்னாரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
தனது நண்பரொருவரினால் கடந்த 26ம் திகதி, கோடாரி தாக்குதலுக்கு இலக்கான இவர், இன்று சனிக்கிழமை அதிகாலை மரணமடைந்தார். இவர், மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
1972ம் ஆண்டு டிசெம்பர் 12ம் திகதி, பொலன்னறுவையில் பிறந்த இவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் குடும்பத்தில் இளைய சகோதரராவார்.
பொலன்னறுவை லக்ஷ உயன கனிஷ்ட வித்தியாலத்தில் ஆரம்ப கல்வியை பயின்ற இவர், கம்பஹா உடபில மகா வித்தியாலத்தில் சாதாரண தரம் வரையிலும், கம்பஹா கலஹிடியாவ மத்திய மகா வித்தியாலயம் மற்றும் பொலன்னறுவை நொபாவௌ மகா வித்தியாலயம் ஆகியவற்றியில் உயர்தரம் பயின்றுள்ளார்.
பொலன்னறுவை ரஜரட்ட பில்டர்ஸ் மற்றும் சில மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட ரஜரட்ட ஹால் தனியார் நிறுவனம் ஆகியவற்றின் உரிமையாளராவார்.
வர்த்தகத்துறையில் பிரபலமாக பேசப்படும் ஒருவரான இவர், சமூக சேவையாளர் மட்டுமன்றி ஒரு கொடையாளியாவர்.
http://www.tamilwin.com/show-RUmtyDRcSUlv6H.html
யாழில் இரவோடு இரவாக அகற்றப்பட்ட மகிந்தவின் கட்அவுட்
[ சனிக்கிழமை, 28 மார்ச் 2015, 03:53.31 AM GMT ]
கடந்த நவம்பர் மாதம் வீரசிங்கம் மண்டபம் புனரமைக்கப்பட்டு முன்னாள் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது.
அதன்போது ஜனாதிபதி மகிந்தவின் உருவப்படம் பொறிக்கப்பட்ட பெரியளவிலான கட்-அவுட் மண்டபத்துக்கு அருகே நிறுவப்பட்டது.
பின்னர் ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் அதிலிருந்த மகிந்தவின் உருவப்படம் மறைக்கப்பட்டது.அந்த மறைப்பு கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர் இனம் தெரியாதவர்களால் அகற்றப்பட்டது.
இந்த நிலையில் பிரதமர் ரணில் நேற்று வீரசிங்கம் மண்டபத்துக்கு நேற்று வந்திருந்தார்.
அதற்கு முன்னதாக நேற்று முன்தினம் இரவு மகிந்தவின் கட்-அவுட் முழுமையாக அகற்றப்பட்டுள்ளது.
மஹிந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை கண்டு பிடிப்பதில் சிக்கல்
[ சனிக்கிழமை, 28 மார்ச் 2015, 03:57.02 AM GMT ]
அதி நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சில மோசடிகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் கையூட்டல் ஊழல் மோசடிகளை கண்டு பிடிப்பதில் தற்போதைய அரசாங்கம் பல்வேறு தொழில்நுட்ப பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றது.
கடந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடிகளுக்கு கணனி ஹெக்கர்களின் உதவி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் ஊழல் மோசடிகள் தொடர்பிலான விபரங்களை பெற்றுக்கொள்வதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த சிக்கல்களுக்கு தீர்வு காண தேவை ஏற்பட்டால் வெளிநாட்டு கணனி நிபுணர்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
புலம்பெயர் அமைப்புக்கள்: மஹிந்த விதித்த தடையை நீக்க மைத்திரி அரசு முடிவு
[ சனிக்கிழமை, 28 மார்ச் 2015, 06:22.31 AM GMT ]
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளார்.
இதன்படி 16 புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் 424 நபர்கள் மீதான தடையை நீக்குவதற்கு மைத்திரிபால அரசாங்கம் தீர்மானித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் இது தொடர்பிலான அறிவிப்பொன்றை அண்மையில் பாராளுமன்ற அமர்வின் போதும் தெரிவித்திருந்தார். நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் பரவுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் போலியான வதந்திகளை பரப்பியிருந்தது.
இதனாலேயே குறித்த புலம்பெயர் அமைப்புக்களுக்கு கடந்த கால அரசாங்கத்தினால் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் முன்னாள் அரசாங்கத்தின் தவறான நிலைப்பாட்டை நீக்குவதென தீர்மானித்து தற்போதைய அரசாங்கம் இதுமாதிரியான ஒரு தீர்மானத்தை எட்டியுள்ளது.
இதன் அடிப்படையிலேயே குறித்த புலம்பெயர் மற்றும் நபர்கள் மீதான தடையை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரசாங்கத்தின் இத் தீர்மானத்தினால் தமிழ் மற்றும் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களும் ஆச்சரியமடைந்துள்ளனர்.
அத்துடன் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை ஜனாதிபதி மைத்திரிபால அரசாங்கம் சட்டபூர்வமாக்குவதற்கு தீர்மானித்துள்ளமை கனடிய வாழ் தமிழ் மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்ட போது உலக தமிழர்கள் பேரவை இத்தடையுத்தரவை நீக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyDRcSUlwyJ.html
Geen opmerkingen:
Een reactie posten