[ செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015, 09:16.53 AM GMT ]
பத்தரமுல்ல பிரதேசத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பங்கேற்ற கட்சியின் பேச்சாளர் முஸாம்மில் தெரிவித்துள்ளார்.
பிரதான கட்சிகள் தொடர்பில் அதிருப்தி அடைவோரை தம்பால் ஈர்த்துக் கொள்ளும் முற்சியில் இந்த இரண்டு கட்சிகளும் ஈடுபட்டுள்ளன.
இதற்கான நடிப்பு வேலைகளிலேயே ஜாதிக ஹெல உறுமயவும், ஜே.வி.பியும் மேற்கொண்டு வருகின்றது என தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை இந்தியாவின் முன்னிலையில் மண்டியிட்டுள்ளதாகவும், இது ஆரோக்கியமான நிலைமை கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கடல் எல்லை இந்தியாவிற்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது!– மொஹமட் முஸமில்
இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடல் எல்லையில் மீன்பிடிக்க சுதந்திரமாக அனுமதி வழக்கப்பட்டிருப்பதன் ஊடாக நாட்டின் கடல் வலயம் இந்தியாவிற்கு தாரை வார்க்கப்பட்டுள்ளதாகவும் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸமில் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தற்போதைய அரசாங்கம் இந்தியாவிடம் மண்டியிட்டு கொண்டிருப்பதாகவும் தயவு செய்து அதனை தவிர்த்துக் கொள்ளளுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதாக மொஹமட் முஸமில் மேலும் தெரிவித்துள்ளார்.
மகிந்தவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
[ செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015, 09:19.02 AM GMT ]
முன்னிலை சோசலிச கட்சியினால் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக உச்ச நீதிமன்றல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
25 மாவட்டங்களில் இராணுவத்தினரை நிலை நிறுத்தியமை பொதுமக்களின் உரிமைகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை பரிசீலனை செய்த உச்ச நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
மைத்திரியின் நேர்மையை கண்டு வியக்கும் மகிந்த சமரசிங்க
[ செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015, 09:26.10 AM GMT ]
ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசியலமைப்பின்படி ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரம் கொண்டவர்.
ஆனால் இந்த அதிகாரத்தை குறைக்க வேண்டும் என தெரிவித்து வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நாம் போற்றி துதிக்க வேண்டும் எனவும், தனது சொந்த விருப்பத்திற்கு தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை குறைத்து கொள்ளும் எந்தவொரு தலைவரையும் தான் சந்தித்ததில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்த நடவடிக்கை அவருக்கு வாக்களித்த மக்கள் பெற்ற வெற்றி என அவர் தெரிவித்துள்ளதுடன்,
தற்போதைய அரசு ஒரு சிறுபான்மை அரசு என்பதினாலேயே தேசிய அரசாங்கம் ஒன்று நிறுவப்பட்டது, இது ஒரு நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டே நிறுவப்பட்டது, இதனை யாராலும் எதிர்க்க முடியாது.
பிற நாடுகளின் முதலீடுகளை திரட்டும் நோக்கில் முதலீட்டாளர்களின் ஊடாக ஒப்பந்தங்களை கைச்சாத்திடுவது ஒரு நாட்டின் அரசியல் ஸ்தீரத்தன்மையை புலப்படுத்துகிறது என அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மத்திய குழு தீர்மானித்த பின்னரே தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொண்டதுடன், அதன் அமைச்சு பதவிகளையும் ஏற்று கொண்டது என விளக்கமளித்த அமைச்சர்,
நான் ஜனாதிபதியை தனிப்பட்ட முறையில் சந்தித்து எனக்கு அமைச்சு பதவி வழங்குமாறு கேட்கவில்லை, இதனை யாரும் ஏற்று கொள்ளவும் மாட்டார்கள், இந்த முடிவு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாம் மத்திய செயற்குழு கூட்டத்தின் போது தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்வது தொடர்பில் மும்முறை கருத்துக்களை கேட்டறிந்தோம், இதற்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மாத்திரமே எதிர்ப்பு தெரிவித்த போதிலும் ஏனையவர்கள் ஆதரவளித்தனர்.
அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனும் நோக்கிலேயே தற்போதைய அரசாங்கத்திற்கு மக்கள் வாக்களித்துள்ளனர்.
எனவே இம்மக்களுக்கு தம்மாலான சேவைகளை வழங்குவதற்காகவே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் குறித்த அமைச்சு பொறுப்புக்களை ஏற்று கொண்டனர் எனவும்,
தற்போது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை காணப்படுவதினால் 19வது அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கு எவ்வித சிக்கல் நிலையும் ஏற்படாது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் ஆட்சி காலத்தின் போதும் தேசிய அரசாங்கமொன்றை நிறுவுவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சிகளுக்கிடையில் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது எனினும் ஐக்கிய தேசிய கட்சி திடீரென இதிலிருந்து தன்னை விலக்கி கொண்டது.
இந்நிலையில் மனோ, மாலிக் பேச்சுவார்த்தைகளின் போது தேசிய அரசாங்கமொன்றை நிறுவுதல் பிரபல்யமடைந்தது.
ஐக்கிய தேசிய கட்சி இந்த உடன்படிக்கையிலிருந்து விலகி கொண்டமையினால் தேசிய அரசாங்கம் நிறுவப்படவில்லை. ஆனால் தேசிய அரசாங்கம் குறித்து ஒருமித்த கருத்துக்களே காணப்பட்டன என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய செயற்குழு கூட்டம் நடைபெறும் போது தேசிய அரசாங்கத்திற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட முடியும்.
எனினும் தேசிய அரசாங்கத்திற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என இரத்தினபுரி கூட்டங்களுக்கு செல்வதில் எவ்வித நியாயமும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளதுடன்,
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மூத்த உறுப்பினர்களான நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா, ஆகியோர் தொடர்ந்தும் எதிர்கட்சியில் இருக்க தீர்மானித்தமையினாலேயே அமைச்சு பதவிகளை பொறுப்பேற்கவில்லை என தெரிவித்தார்.
இது அவர்களின் சுய விருப்பத்துடன் எடுக்கப்பட்ட முடிவு என்பதுடன் அரசாங்கத்திலிருந்தாலும், எதிர்கட்சியிலிருந்தாலும் மக்களுக்கு சேவையாற்ற முடியும் என அவர் தெரிவித்ததுடன்,
அதில் ஏதும் தவறு இருப்பதாக கூறமுடியாது என குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 30 வருட யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்தவர், அவர் வரலாற்றில் கீழே போகமாட்டார், நாட்டில் பயங்கரவாதத்தை முறியடித்து நாட்டின் மகத்தான வளர்ச்சிக்கு அரும்பாடுப்பட்ட ஒரு தலைவர் எனினும் மைத்திரிபால சிறிசேனவும் நேர்மை மிக்க தலைவர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்கிறார் அமைச்சர் மகிந்த சமரசிங்க.
சில காரணங்களினால் முன்னாள் ஜனாதிபதிக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தினரின் வாக்குகளை பெற்று கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
நாட்டில் மாற்றம் தேவை என எண்ணிய குறிப்பிட்ட சிலரின் நடவடிக்கை.
தற்போது அமைச்சு பதவிகளை பெற்று கொண்டவர்கள் நாட்டில் மக்களின் சேவைகளை கருத்திற்கொண்டு செயற்பட்டால் எதிர்வரும் பொது தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்வரும் பொது தேர்தலில் போட்டியிட விரும்பினால் தனிப்பட்ட முறையில் அதற்கான விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும் என அமைச்சர் மகிந்த சமரசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDQVSUko1H.html
ரத்கம பிரதேச சபை தலைவரின் கொலையுடன் தொடர்புடைய நபர் பொலிஸில் சரண்
[ செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015, 09:29.26 AM GMT ]
பொடி லெசி என்ற சந்தேக நபரே இவ்வாறு களுத்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
கொலையுடன் தொடர்புடையவர் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மற்றுமொரு நபர் நேற்று காலி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
குறித்த சந்தேக நபரை விளக்க மறியலில் வைக்குமாறு காலி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
கடந்த 23ம் திகதி மனோஜ் மெண்டிஸ் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்: மனோ கணேசன்
[ செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015, 09:54.52 AM GMT ]
இன்று தேர்தல் ஆணையாளரை நேரில் சந்தித்து தனது ஆவணத்தினை கையளித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தவை,
புதிய தேர்தல் முறையில் பாராளுமன்ற உறுப்பினர் தொகை 250 ஆக உயர்த்தப்படுமானால், மத்திய, மேல், ஊவா மாகாணங்களில் பெரும்பான்மை இனத்து மக்கள் மத்தியில் கலந்து வாழும் தமிழ் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
இந்த அடிப்படையில் நுவரெலிய மாவட்டத்தில் ஐந்து, கொழும்பில் மூன்று, பதுளையிலும், கண்டியிலும் தலா இரண்டு என்ற குறைந்தபட்ச எண்ணிக்கையில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட இடமிருக்க வேண்டும்.
இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தவை,
புதிய தேர்தல் முறையில் பாராளுமன்ற உறுப்பினர் தொகை 250 ஆக உயர்த்தப்படுமானால், மத்திய, மேல், ஊவா மாகாணங்களில் பெரும்பான்மை இனத்து மக்கள் மத்தியில் கலந்து வாழும் தமிழ் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
இந்த அடிப்படையில் நுவரெலிய மாவட்டத்தில் ஐந்து, கொழும்பில் மூன்று, பதுளையிலும், கண்டியிலும் தலா இரண்டு என்ற குறைந்தபட்ச எண்ணிக்கையில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட இடமிருக்க வேண்டும்.
தமிழ் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை முழுமையாக பயன்படுத்தி தங்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யாவிட்டால் நாம் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், நுவரெலியா, கொழும்பு, கண்டி, பதுளை மாவட்டங்களில் தமது சனத்தொகைக்கு ஏற்ப தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்துகொள்ள புதிய தேர்தல் முறைமையில் இடமிருக்க வேண்டும்.
இன்றைய தேர்தல் முறைமை மாற்றப்பட்டு, விருப்பு வாக்கு முறைமை ஒழிக்கப்பட வேண்டும், தொகுதிக்கு என்று ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற யோசனைகளை நாம் ஏற்றுக்கொள்கிறோம்.
ஆனால், அந்த மாற்றங்கள் ஒருபோதும் இன்று சிறுபான்மை இனம் அனுபவிக்கும் பிரதிநிதித்துவங்களை குறைத்து கூடாது. விருப்பு வாக்கு முறைமை ஒழிக்கப்பட வேண்டும்.
தொகுதிக்கு என்று ஒரு பிரதிநிதி தெரிவு செய்யப்பட வேண்டும் என்று இன்று குரல் எழுப்பும் பெரும்பான்மை கட்சிகளுக்கு சிறுபான்மை இனம் இன்று அனுபவிக்கும் பிரதிநிதித்துவங்கள் தொடர்பில் அக்கறை இருப்பதாக தெரியவில்லை.
புதிய தேர்தல் முறை மாற்றத்தின் போது, இந்நாட்டில் கடந்த பத்தாண்டுகளில் நடைபெற்றுள்ள சனத்தொகை வளர்ச்சி, இடம்பெயர்வு, குடியேற்றம் ஆகியவை கணக்கில் எடுக்கப்பட வேண்டும்.
புதிய தேர்தல் முறை மாற்றத்தின் போது, இந்நாட்டில் கடந்த பத்தாண்டுகளில் நடைபெற்றுள்ள சனத்தொகை வளர்ச்சி, இடம்பெயர்வு, குடியேற்றம் ஆகியவை கணக்கில் எடுக்கப்பட வேண்டும்.
மத்திய, மேல், ஊவா மாகாணங்களில் பெரும்பான்மை இனத்து மக்கள் மத்தியில் கலந்து வாழும் தமிழ் பேசும் தமிழ், முஸ்லிம் சிறுபான்மை மக்களே உத்தேச தேர்தல் முறை மாற்றங்கள் காரணமாக அதிகம் பாதிப்பு அடையும் அபாயத்தை எதிர்நோக்குகின்றார்கள்.
எனவே தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் நாம் அதிக அச்சம் கொண்டுள்ளோம்.இந்த அச்சம் புரிந்துகொள்ளப்பட வேண்டும். இந்நாட்டின் சமீப கால வரலாற்றில் தற்போதைய நடப்பு தேர்தல் முறையே தமிழ், முஸ்லிம் சிறுபான்மை மக்களுக்கு அதிகபட்ச பிரதிநிதித்துவங்களை வழங்கியுள்ளது.
எனவே இந்த தேர்தல் முறையை மாற்றுவதானால் எங்களது குறைந்தபட்ச உரிமை உறுதி செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால் புதிய தேர்தல் முறை மாற்றத்துக்கு நாம் உடன்பட முடியாது.
இந்த அடிப்படையில் நுவரெலிய மாவட்டத்தில் ஐந்து, கொழும்பில் மூன்று, பதுளையிலும், கண்டியிலும் தலா இரண்டு என்ற குறைந்தபட்ச எண்ணிக்கையில் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படக்கூடிய ஜனநாயக சூழல் ஏற்பட வேண்டும்.
இந்த அடிப்படையில் நுவரெலிய மாவட்டத்தில் ஐந்து, கொழும்பில் மூன்று, பதுளையிலும், கண்டியிலும் தலா இரண்டு என்ற குறைந்தபட்ச எண்ணிக்கையில் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படக்கூடிய ஜனநாயக சூழல் ஏற்பட வேண்டும்.
தமிழ் வாக்காளர்களுக்கு தமது சனத்தொகைக்கு ஏற்ப தமிழ் பிரதிநிதிகளை தெரிவு செய்துகொள்ள புதிய தேர்தல் முறைமையில் இடமிருக்க வேண்டும். தமிழ் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை முழுமையாக பயன்படுத்தி தங்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யாவிட்டால் நாம் ஒன்றும் செய்ய முடியாது. அது நமது இனத்தின் தலையெழுத்து. ஆனால், சட்டத்தில் இடமிருக்க வேண்டும்.
என தாம் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவை நேரில் சந்தித்து கையளித்த ஆவணத்தில் கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyDQVSUko2B.html
Geen opmerkingen:
Een reactie posten