[ புதன்கிழமை, 25 மார்ச் 2015, 10:20.50 AM GMT ]
கடந்த 2009ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு செங்கலடியைச் சேர்ந்த கனகசூரியம் லோகேஸ்வரன் என்பவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மேல்நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் இந்தத் தீர்ப்பை வழங்கினார்.
குறித்த சந்தேக நபர் மீது மூன்று குற்றச்சாட்டுக்களின் பேரில் சட்டமா அதிபரால் மட்டக்களப்பு மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
சந்தேகநபர் மீது (அப்பொழுது வயது 27) 2011 மார்ச் மாதம் பயங்கரவாதத் தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
கைக்குண்டு எறிந்து ஜகத், குசுமசிறி எனனும் இரு இராணுவ வீரர்களைக் கொலை செய்ய எத்தனித்தாரென இரு குற்றச்சாட்டுக்களும், கைக்குண்டை வைத்திருந்தாரென மூன்றாவது குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டு சட்டமா அதிபரால் மட்டக்களப்பு மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.
எனினும் மூன்றாவது குற்றச்சாட்டுத் தொடர்பில் விசாரணையின் போது குற்றச்சாட்டுத் தொடர்பான தரவுகள், பதிவுகள் கொண்ட ஆவணங்கள் ஏறாவூர் பொலிஸாரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.
இந்த ஆவணங்கள் பொலிஸ் நிலையத்தில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டதால் சந்தேகநபர் மீதான குற்றச்சாட்டுப் பத்திரத்தைத் திருத்தி மாற்றியமைக்க நீதிமன்றம் அனுமதித்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சந்தேகநபரான கனகசூரியம் லோகேஸ்வரன் இராணுவத்தினர் இருவரைக் கொலை செய்ய எத்தனித்தமை தொடர்பான இரு குற்றச்சாட்டுக்களுடன் - திருத்தப்பட்ட மூன்றாவது குற்றச்சாட்டான தீங்குவிளைவிக்கும் ஆயுதம் வைத்திருந்தமை (சுடு படைக்கலன்கள் சட்டத்தின் கீழ் ) தொடர்பான குற்றச்சாட்டையும் தாம் ஒப்புக்கொள்கிறார் எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் சந்தேகநபர் ஆறரை வருடகாலமாக விளக்கமறியலில் இருந்து வருவதையும், முன்குற்றமில்லாமையையும் கவனத்திற் கொண்டு தீர்ப்பு வழங்கினார்.
இதன்படி மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் ஏககாலத்தில் அனுபவிக்கத் தக்கதும், பத்துவருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட தலா இரு வருட கடூழியச்சிறையும் ஒவ்வொரு குற்றத்துக்கும் தலா 10ஆயிரம் ரூபா தண்டமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
தண்டப்பணம் செலுத்தத் தவறினால் தலா ஒரு வருட கடூழிய சிறை அனுபவிக்க வேண்டுமெனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyDRZSUluyJ.html
வடக்கு விவசாய அமைச்சில் 61 பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம்
[ புதன்கிழமை, 25 மார்ச் 2015, 10:27.24 AM GMT ]
இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்ச்சி திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டு நிரந்தர நியமனம் பெற்றவர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் உரையாற்றும் போது, அவரது அமைச்சுக்கு உட்பட்ட திணைக்களங்களில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறை பற்றிய விபரங்களைப் பூரணமாகத் தெரிவித்துள்ளார். வடமாகாண விவசாயத் திணைக்களத்துக்கு அனுமதிக்கப்பட்ட ஆளணியின் எண்ணிக்கை 510 ஆனால், 361 பேரே தற்போது சேவையில் உள்ளனர்.
இன்னும் 149 வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது, கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்துக்கென அங்கீகரிக்கப்பட்ட ஆளணியின் எண்ணிக்கை 571,ஆனால் 315 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். 256 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதேபோன்று, நீர்ப்பாசனத் திணைக்களத்தில் 124 வெற்றிடங்களும், கூட்டுறவு திணைக்களத்தில் 40 வெற்றிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளணிப்பற்றாக்குறை பற்றிய விபரங்களை வெளியிட்ட அமைச்சர் பொ.ஐங்கரநேசன், ஆளணிப்பற்றாக்குறைவு அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குப் பாரிய தடையாக இருப்பதாகவும், இவற்றை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை திணைக்களத் தலைவர்களும் அமைச்சின் செயலாளரும் மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்துள்ளார்.
19வது அரசியலமைப்பை ஆதரிக்கும் ஜே.வி.பி
[ புதன்கிழமை, 25 மார்ச் 2015, 10:29.35 AM GMT ]
பத்தரமுல்லையிலுள்ள கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அக்கட்சியின் பொது செயலாளர் ரில்வின் சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் சமர்பிக்கப்பட்ட 19வது திருத்த சட்டமூலத்தில் பெருமளவிலான அதிகாரங்கள் குறைக்கப்படாத போதிலும், குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டதே தற்போதைய அரசாங்கம் பெற்று கொண்ட மாபெரும் வெற்றி என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அரசியலமைப்பு திருத்த சட்டம், தேர்தல் முறை மாற்றத்துடன் சபையில் சமர்பிக்கப்படாத பட்சத்தில் அதற்கெதிராக வாக்களிக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் தெரிவித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன்,
தேர்தல் காலத்தில் நிறைவேற்று அதிகார முறைமையை இல்லாதொழிப்பதற்காக முதலாவது போராட்டத்தை ஆரம்பிக்கும் நோக்கில் ஜாதிக ஹெல உறுமய 19வது அரசியலமைப்பிற்கு எதிராக வாக்களிப்பதாக தெரிவித்துள்ளதன் அர்த்தம் என்ன என ரில்வின் சில்வா கேள்வியெழுப்பியுள்ளார்.
அரசாங்கம் தற்போது தான் ஆட்சிக்கு வந்ததன் இலக்கை நோக்கி செல்லாமல் கடந்த அரசாங்கத்தின் வழியில் சென்று கொண்டிருக்கின்றது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சம்பூர் காணிகளுக்கு உயர் கட்டுப்பாட்டு வலயத்தில் இருந்து விடுதலை!
[ புதன்கிழமை, 25 மார்ச் 2015, 10:40.24 AM GMT ]
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கிழக்கு மாகாணம் திருகோணமலையிலுள்ள சம்பூரில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 818 ஏக்கர் பரப்பளவு கொண்ட காணிகளை விடுவிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இது தொடர்பான விசேட கூட்டமொன்று நேற்று திருகோணமலையிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் மீள்குடியேற்ற மற்றும் இந்துசமய விவகார அமைச்சர் டீ.எம். சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இக்கூட்டத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாதக்கடைசிக்குள் குறித்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக தீர்மானம் எடுக்கப்பட்டதுடன், திருகோணமலை கடற்படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள 234 ஏக்கர் காணிகளையும் விடுவிக்கவுள்ளதாகவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.
அதேவேளை கடந்த 23ஆம் திகதி யாழ். வலி.கிழக்கு பிரதேச எல்லைக்குட்பட்ட 233 ஏக்கர் காணிகள் ஐனாதிபதியினால் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyDRZSUluzC.html
Geen opmerkingen:
Een reactie posten