தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 28 maart 2015

சவூதியில் எரியூட்டப்பட்ட திருமலை பெண்! தப்பியோடிய பெண் பலி

முருகனிடம் ரணில்.

??????????????????????????????????????????????????????????????

மைத்திரி பேஸ்புக் பக்கத்தில் நுளைந்தாரா மஹிந்த…??

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் போலியான தகவல்கள் போலியான புகைப்படங்களை பேஸ்புக் மூலம் பிரச்சாரம் செய்திருந்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இம்முறை எனது வாக்கு மஹிந்த ராஜபக்சவிற்கே எனக் குறிப்பிட்டு முகப்புத்தகத்தில் பிரச்சாரம் செய்துள்ளார்.
பதுளையைச் சேர்ந்த சுஜித் நிலந்த என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தேர்தல் சட்டங்களை கடுமையாக மீறிச் செயற்பட்டுள்ளதுடன் குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்கப்படக்கூடிய குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்தேக நபர் நேபாளத்திலிருந்து கடந்த 25ம் திகதி நாடு திரும்பிய போது  பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் கொரியாவிற்கான இலங்கை தூதரகத்தில் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு சேறு பூசும் நோக்கில் பேஸ்புக்கில் புகைப்படப் பிரச்சாரங்களில் ஈடுபட்டதாக சந்தேக நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் 1ம் திகதி வரையில் சந்தேக நபரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய நேற்று உத்தரவிட்டுள்ளார்.MS Face
http://www.jvpnews.com/srilanka/102983.html

சவூதியில் எரியூட்டப்பட்ட திருமலை பெண்! தப்பியோடிய பெண் பலி

இவ்விருவரில் ஒருவர் விபத்திலும் மற்றவர் எரியூட்டப்பட்ட நிலையிலும் மரணமடைந்துள்ளனர் என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் ஒருவர் திருகோணமலை உப்புவேலியை வசிப்பிடமாக கொண்ட நசுரா என்றும் அவர் ஐந்து பிள்ளைகளின் தாயாவார்.  ஆறு மாதங்களுக்கு முன்னரே பணிப்பெண்ணாக அவர் சவுதிக்கு சென்றுள்ளார்.
தான், பணிப்பெண்ணாக இருந்த எஜமானின் வீட்டு எஜமானி தன்னை தாக்கியதுடன் பல்வேறான துன்புறுத்தல்களுக்கும் உட்படுத்தினார். அத்துடன் சில நாட்களுக்கு முன்னர் பெற்றோல் அல்லது வேறு ஏதாவது எரிபொருட்களை ஊறி, அறைக்குள் போட்டு பூட்டி எரியூட்டியிட்டினார் என்று அஸர் வைத்தியசாலையின் ஊழியரிடம் அந்த பணிப்பெண் தெரிவித்துள்ளார்.
அஸர் வைத்தியாசாலைக்கு வெளியே உயிருக்காக துடித்துகொண்டிருந்த அப்பெண்ணை, வைத்தியசாலை ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதித்ததாக அந்நாட்டில் இருக்கின்ற இலங்கை சமூக சேவையாளரான நிமல் எடேரமுல்ல தெரிவித்துள்ளார் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஸர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இலங்கை பணிப்பெண்களை பார்வையிடுவதற்காக சென்றிருந்த போதே வைத்தியசாலை ஊழியர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் அந்த பெண், 25ஆம் திகதி புதன்கிழமை மரணமடைந்துள்ளார். அவருடைய சடலம் அஸர் வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அந்த பெண் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அராபிமொழியில் எழுதப்பட்ட ஆவணமொன்றில் அவருடைய பெருவிரல் அடையாளம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இதற்கிடையில் அபா பிரதேசத்திலிருந்து 60 கிலோமீற்றர் தூரத்தில் இருக்கின்ற அரப் மலை பிரதேசத்தில் பணியாற்றிய இலங்கை பணிப்பெண்ணான மற்றுமொரு பெண், எஜமானின் வீட்டிலிருந்து தப்பியோடிய போது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார் என்று ஜேடா கவுன்சிலர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
அவர், இலங்கை பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும் அவர் தொடர்பிலான மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்று அந்த காரியாலயம் தெரிவித்துள்ளது.
அப்பெண்ணின் சடலம், ஜிசாத் வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/102992.html

Geen opmerkingen:

Een reactie posten