[ ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2015, 06:55.53 AM GMT ]
யேமன் தற்பொழுது இடம்பெற்று வரும் மோதல்களில் 120ற்கும் அதிகமான இலங்கையர்கள் சிக்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. யேமன் தலைநகர் சானாவை அண்மித்த பகுதியில் இலங்கையர்கள் சிக்கியுள்ளார்கள்.
மோதல்களில் சிக்கியவர்கள் கம்பஹா, கந்தானை, தொம்பே, பிலியந்தலை, நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஒழுங்குகளை வெளிவிவகார அமைச்சு மேற்கொண்டு வருவதாக துறைசார் அமைச்சு பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யேமனில் மோதல்களில் சிக்கியுள்ள மூவாயிரத்து 500 இற்கும் மேற்பட்ட இந்தியப் பிரஜைகளை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக இந்திய அரசாங்கம் கப்பல்களை அனுப்பி வைக்க தீர்மானித்துள்ளது.
மோதல்களில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்குமாறு, அவர்களது உறவினர்கள் தொடர்ந்து அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பசில் ராஜபக்சவின் நாடு திரும்பும் அறிவிப்பால் பீதியடைந்துள்ள மகிந்த மற்றும் விமல் கோஷ்டி
[ ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2015, 06:58.11 AM GMT ]
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதற்காக இலங்கைக்கு வரவுள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, வீமல் வீரவன்ஸ உள்ளிட்டோர் பெரும் பீதியில் இருப்பதாக அவர்களுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மகிந்த ராஜபக்ச கடும் பீதியில் இருப்பதே இதில் முக்கியமான விடயமாகும். பசில் ராஜபக்ச வெளியிடும் தகவல்களின் அடிப்படையில் மகிந்த ராஜபக்சவின் அரசியல் எதிர்காலம் தீர்மானிக்கப்படலாம் என அவருக்கு நெருக்கமான தரப்பு வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சில சந்தர்ப்பங்களில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் பெயரை குறிப்பிடாமல் அவரை கடுமையாக தாக்கி பேசியிருந்தார்.
ஓய்வில் இருக்கும் போதுதான் வஞ்சகர்கள் யார், இரண்டகம் செய்பவர்கள் யார், அழகான வார்த்தைகளை பேசி வேலை செய்தவர்கள் என்பதை அறிந்து கொள்ள முடிந்ததாக முன்னாள் ஜனாதிபதி அண்மையில் கூறியிருந்தார். பசில் ராஜபக்சவை பற்றியே அவர் இவ்வாறு கூறியிருந்தாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை மகிந்த ராஜபக்சவை அடுத்த பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என கூறிவரும் விமல் வீரவன்ஸ உள்ளிட்டோரும் மகிந்த ராஜபக்சவின் தோல்விக்கு பசில் ராஜபக்சவே காரணம் என பகிரங்கமாக கூறியுள்ளனர்.
தற்போது மகிந்த ராஜபக்சவை சூழ இருக்கும் பல நபர்களின் இரகசிய தகவல்கள் பசில் ராஜபக்ச ஊடாக வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடபகுதிக்கு விசேட பிரதிநிதி நியமனம்
[ ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2015, 07:08.33 AM GMT ]
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட போதே இதனை தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகத்தினால் இவரை நியமிப்பதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளதுடன்,
வட மாகாணத்தில் நிலவும் அனைத்து விடயங்கள் தொடர்பிலும் ஆராயும் நோக்கத்திற்காகவே புதிய விசேட பிரதிநிதி நியமிக்கப்படவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyDRdSUlw6D.html
Geen opmerkingen:
Een reactie posten