[ ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2015, 12:13.00 AM GMT ]
பொதுத் தேர்தலுக்காக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் அனுராதபுரத்தில் நடத்தப்படவுள்ள பாரிய கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி பங்கேற்பார்.
இது தொடர்பில் ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்கும் நோக்கில் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
மஹிந்தவை பிரதமராக்கும் நோக்கில் நடைபெற்று வரும் கூட்டத்தொடரின் அடுத்த கூட்டம் குருணாகலில் நடைபெறவுள்ளது.
ஏப்ரல் மாதம் 23ம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படாவிட்டால் பாரிய போராட்டங்களை நடத்த நேரிடும் என உதய கம்மன்பில சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRdSUlw3J.html
முன்னாள் அமைச்சர்கள் இருவரும், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் கைது செய்யப்படவுள்ளனர்!
[ ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2015, 12:08.53 AM GMT ]
சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை குவித்த குற்றச்சாட்டின் பேரில் இவ்வாறு கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
சட்டவிரோத சொத்துக் குவிப்பு தொடர்பில் கடந்த சில வாரங்களாக கையூட்டல் மற்றும் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு விசாரணை நடத்தி வந்தது.
இவர்கள் மூவரும் ஏற்கனவே ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கக் கூடிய சாட்சியங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
மேல் மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்யும் திட்ட அமைச்சர் ஒருவர், மத்திய மாகாணத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் அமைச்சரவை அமைச்சர் மற்றும் தெற்கைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்படவுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைமை எமக்கென இருந்தால் யார் தடுத்தாலும் அது வந்தே தீரும்! இரா.சம்பந்தன்
[ ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2015, 12:02.19 AM GMT ]
எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்தால் அந்தப் பதவியை தாங்கள் ஏற்பீர்களா என்று இரா. சம்பந்தன் எம்.பி.யிடம் வினவிய போது அவர் தெரிவித்ததாவது:-
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை நாம் நாடவும் இல்லை அந்தப் பதவி வேறொரு கட்சியில் உள்ளவருக்குச் சென்றடையக்கூடாது என்று நாம் எண்ணவும் இல்லை. வேறொரு கட்சியில் உள்ளவர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பொறுப்பேற்றால் அதனை நாம் எதிர்க்கவும் மாட்டோம்.
ஆனால், பாராளுமன்ற விதிமுறைகளின்படி எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே என்ற நிலைமை வருமானால் அந்தப் பதவியை நாம் ஏற்பதா, இல்லையா என்று எமது கட்சி கூடி ஆராய்ந்து இறுதி முடிவெடுக்கும்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவி விடயத்தில் முன்னாள் அமைச்சர்களான தினேஷ் குணவர்த்தன, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ஸ, மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில மற்றும் தற்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருக்கும் நிமால் சிறிபால டி சில்வா ஆகியோரின் தனிப்பட்ட கருத்துகளோ அல்லது கூட்டுக் கருத்துகளோ ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.
பாராளுமன்றத்துக்கென விதிமுறைகள் உள்ளன. அந்த விதிமுறைகளே எதிர்க்கட்சித் தலைவர் பதவி யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும். எனவே, தனிப்பட்டவர்களின் கருத்துக்கள் செல்லுபடியற்றதாகும் எனவும் சம்பந்தன் தெரிவித்தார்.
அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசு அமைத்துள்ள நிலையில் சுதந்திரக் கட்சி ஆளும் கட்சியாக மாறிவிட்டது. இந்நிலையில், நிமால் சிறிபால டி சில்வா ஆளும் கட்சியில் இருந்துகொண்டு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அவர் அந்தப் பதவியில் தொடரமுடியாத நிலை ஏற்பட்டால் நாடாளுமன்றத்தில் மூன்றாவது பலம் பொருந்திய கட்சியாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி. எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்க வேண்டிய நிலை ஏற்படும்.
இதேவேளை, தானே எதிர்க்கட்சித் தலைவர் என்றும் இதனை எவராலும் மாற்ற முடியாது என்றும் தற்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருக்கும் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRdSUlw3H.html
Geen opmerkingen:
Een reactie posten