தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 26 maart 2015

ஆஸி.யில் தமிழ் புலம்பெயர்வாளர்களுடன் ஜூலி சந்திப்பு

தடையை மீறி மகிந்த ஆதரவு கூட்டத்தில் கலந்து கொண்ட சுதந்திரக் கட்சி எம்.பிக்கள்
[ வியாழக்கிழமை, 26 மார்ச் 2015, 12:53.08 PM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வரவேண்டும் என வலியுறுத்தி இரத்தினபுரியில் இன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 26க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
வெற்றி கொண்ட சுதந்திரம் ஆபத்தில், தேசிய சவாலை வெற்றி கொள்ள அணிதிரள்வோம் என்ற தெனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கூட்டம் இரத்தினபுரி சீவலி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
தேசிய சுதந்திர முன்னணி, மக்கள் ஐக்கிய முன்னணி, பிவித்துரு ஹெல உறுமய, ஜனநாயக இடதுசாரி முன்னணி என்பன இணைந்து மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இந்த கூட்டத்தை நடத்தி வருகின்றன.
மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தன, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார, பந்துல குணவர்தன, ரோஹித்த அபேகுணவர்தன, மகிந்தானந்த அளுத்கமகே, லொஹான் ரத்வத்தே, காமினி லொக்குகே, மனுஷ நாணயக்கார, உதித்த லொக்குபண்டார உட்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 26க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
இவர்களை தவிர மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில, வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் உட்பட மாகாண சபை உறுப்பினர்களும் கலைஞர்களும், புத்திஜீவிகள் சிலரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmtyDRaSUlu7F.html

மகிந்த ராஜபக்சவின் தோல்வி சிலருக்கு புரியாத புதிர்: ஜாதிக ஹெல உறுமய
[ வியாழக்கிழமை, 26 மார்ச் 2015, 02:10.32 PM GMT ]
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்து கொண்டு தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஒரே நபர் மகிந்த ராஜபக்ச என ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளரான மேல் மாகாண சபை உறுப்பினர் நிஷாந்த வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
குருணாகல் பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மகிந்த ராஜபக்ச தோற்றுப்போனரா என்பது அனைவருக்கும் புரியாத புதிராகவே உள்ளது. பாரிய விபத்து போன்றதாக இந்த தோல்வி அமைந்துள்ளது.
நாடு ஸ்தம்பித்து விட்டதா என சிலர் கேட்கின்றனர். இதுதான் ஜனநாயகத்தின் விசித்திர தன்மை. அரச ஊடகங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஊடகவியலாளர்களுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது.
சகல கட்சிகளும் ஒரே மேடைக்கு வந்து தமது கருத்துக்களை அச்சமின்றி கூற சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதுதான் நாட்டின் ஜனநாயகத்தில் ஏற்பட்ட புரட்சி எனவும் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

ஆஸி.யில் தமிழ் புலம்பெயர்வாளர்களுடன் ஜூலி சந்திப்பு
[ வியாழக்கிழமை, 26 மார்ச் 2015, 03:40.46 PM GMT ]
இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஜூலி பிஸப் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடனும், தமிழ் புலம்பெயர்வாளர்களுடனும் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்பை அடுத்து கருத்துரைத்துள்ள ஜூலி, குறித்த சந்திப்பு காத்திரமானதாக இருந்ததாக குறிப்பிட்டார்.
இந்தநிலையில் இலங்கையின் நல்லிணக்கத்துக்காக அவுஸ்திரேலியா உதவியளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன், உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் ஆகியோரும் உள்ளடங்கியிருந்தனர்.
http://www.tamilwin.com/show-RUmtyDRaSUlvyJ.html

Geen opmerkingen:

Een reactie posten