தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 28 maart 2015

ஆயுதப் போராட்டத்தின் வெற்றியே இன்றைய அரசியல்! கே.வி.தவராசா

ஆசியா உலக பொருளாதாரத்தி்ன் நெறியாளன்!- போஹா மாநாட்டில் ஜனாதிபதி உரை
[ சனிக்கிழமை, 28 மார்ச் 2015, 12:34.22 PM GMT ]
ஆசிய பிராந்தியமே உலக பொருளாதார அபிவிருத்தியின் பிரதான நெறியாளன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
உலகில் 60 வீதமான மக்கள் ஆசிய பிராந்தியத்தில் வாழ்கின்றனர். வறுமையிலும் ஆசியா பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
சீனாவின் ஷங்காய் நகரில் நடைபெற போஹா மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை கூறியுள்ளார்.
பொது விதியை நோக்கி பயணிக்கும் ஆசிய பிராந்தியமும் அதன் எதிர்காலமும் என்ற தொனிப்பொருளில் இந்த போஹா மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் அவுஸ்திரேலியா, ஒஸ்திரியா, சுவிடன், ரஷ்யா உட்பட 15 நாடுகளில் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.


பலாலி மற்றும் காங்கேசன்துறைக்கு ரணில் விஜயம்! முப்படைத் தளபதிகளுடன் கலந்துரையாடல்
[ சனிக்கிழமை, 28 மார்ச் 2015, 02:44.19 PM GMT ]
வடகிழக்கு தமிழ் மக்கள் போர் நிறைவடைந்த பின்னர் தங்களுடைய சொந்த நிலங்களில் உடனடியாக மீள்குடியேற்றுங்கள் என கேட்கிறார்கள். அவர்கள் கேட்பதற்கு உரித்துள்ளவர்கள் என்பதை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முப்படை தளபதிகளிடம் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
நேற்றைய தினம் யாழ்.வந்திருந்த பிரதமர் இன்று பலாலி மற்றும் காங்கேசன்துறை பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டு அங்கு முப்படை தளபதிகளையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். 
குறித்த சந்திப்பின் இறுதியில் கருத்து தெரிவித்தபோதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் போருக்குப் பின்னர் மக்களுக்கிடையில் சமாதானத்தை உருவாக்க என்ன வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை பார்ப்பதற்காகவே நான் இங்கே வந்திருந்தேன்.
இதனடிப்படையில் எதிர்காலத்தில் நாங்கள், என்ன செய்ய வேண்டும் என தீர்மானிக்க வேண்டிய கடப்பாடு எமக்குள்ளது.
தேசிய பாதுகாப்புக்குக்கு குந்தகம் விளைவிக்காத வகையில் தங்களுடைய நிலங்களில் மீள்குடியேற்றுங்கள் என தமிழ் மக்கள் எங்களிடம் கேட்கிறார்கள். அவ்வாறு கேட்பதற்கு அவர்களுக்கு முழுமையான உரித்து உள்ளது என்பதை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
எனவே பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்டுள்ள நிலங்களை பகுதி பகுதியாக விடுவிப்பதற்கான ஒரு பொறிமுறையை நாங்கள் உருவாக்கிக் கொள்ளவும் அதனடிப்படையில் நிலத்தை இழந்த மக்களுக்கு அவர்களுடைய நிலங்களை மீளவும் வழங்குவதற்கும் நாங்கள் எம்மாலான நடவடிக்கைகளை நிச்சயமாக மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறான அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் இந்த நாட்டில் இனங்களுக்கிடையில் பிரிவினைவாத யுத்தம் மீள உருவாகும் ஒரு நிலையினை நாம் உருவாக்கி விடக்கூடாது.
அதனை நாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதுமில்லை. இதற்காக நேற்றைய தினம் மீள்குடியேற்றம், மீனவர் பிரச்சினை, மற்றும் விதவைகளுடைய பிரச்சினை தொடர்பாக மக்களுடனும், அரசியல் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றேன்.
எனவே எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் 1000 ஏக்கர் நிலத்தில் மக்களை முழுமையாக மீள்குடி யேற்றம் செய்துவிட வேண்டும். அதற்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குங்கள், தற்போது நீங்கள் வழங்கும் ஒத்துழைப்புக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
2ம் இணைப்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருந்த தடையை ஒன்றியம் மீண்டும் நீடித்திருக்கின்றமைக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம் நன்றி தெரிவித்துள்ளதுடன், குறித்த தடையை நீக்க வேண்டாம் என தாம் ஒன்றியத்திற்கு கடிதம் மூலம் சுட்டிக்காட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் மாலை யாழ்.பலாலியில் முப்படை தளபதிகளைச் சந்தித்த பிரதமர் அங்கு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
விடுதலைப் புலிகளின் பெயரில் வெளிநாடுகளில் தொடர்ந்தும் பணம் சேகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்து. எனவே ஆபத்துள்ளது.
இந்நிலையில் குறித்த தடையை நீக்குவதற்கு பல்வேறுபட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் நாம் அந்த தடையை நீக்கவேண்டாம் என கேட்டதற்கு அமைவாக அவர்கள் தடையை நீடித்திருக்கின்றார்கள். எனவே அதற்காக நன்றி கூறுகின்றேன்.
மேலும் ஜெனீவாவில் இலங்கை மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியில் எமக்கு வெற்றி கிடைத்திருக்கின்றது. அதாவது நாங்கள் உள்ளக விசாரணை ஒன்றை செய்வதற்கு எமக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கின்றது.
எனவே உள்ளே உருவாகும் பிரச்சினைகளை எம்மால் தீர்த்துக்கொள்ள முடியும். ஆனால் வெளியிலிருந்து வரும் ஆபத்துக்களை எதிர்கொள்ள, நீங்கள் திடமாக இருக்கின்றீர்களா? என்ற கேள்வி இருக்கின்றது.  எனவே அவ்வாறான ஆபத்துக்களை எதிர்கொள்ள தயாராகிக் கொள்ளுங்கள் என ரணில் முப்படைகளுக்கும் கூறினார். 
http://www.tamilwin.com/show-RUmtyDRcSUlw2I.html


ஆயுதப் போராட்டத்தின் வெற்றியே இன்றைய அரசியல்! கே.வி.தவராசா
[ சனிக்கிழமை, 28 மார்ச் 2015, 02:50.26 PM GMT ]
ஆயுதப் போராட்டத்தின் வெற்றிதான் இன்றைய அரசியல் என்பதனை மறந்து விடக்கூடாது. போராட்டத்தினை நடத்தியவர்களும் நாங்கள். அனைத்தையும் இழந்தவர்களும் நாங்களே.
ஆனால் இன்று பலனை அடைந்தவர்கள் யார்? கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் ஒரு முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர் என்பதனை அனைவரும் அறிந்து வைத்திருக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என சிரேஸ்ட சட்டத்தரணியும், தமிழரசிக் கட்சியின் கொழும்புக்கிளை தலைவருமான கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.
இன்று நீலன் அறக்கட்டளை நிதியத்தின் ஏற்பாட்டில் கிழக்கு அம்பாறை மாவட்டத்தில்  உள்ள கல்முனை, காரைதீவு, நாவிதன்வெளி, மல்வத்தை பாண்டிருப்பு, நீலாவணை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, சம்மாந்துரை, ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய அனைத்து விளையாட்டு கழகங்களுக்கும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும்,
ஆரம்பகாலம் தொட்டு இன்று வரை தமிழரசுக் கட்சிக்காக உழைத்த பெரியார்களை பொன்னாடை போர்த்தி கௌரவிக்கும் நிகழ்வும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தலைமையில் நடைபெற்றது.
அந்நிகழ்வில்  கலந்து கொண்டு உரையாற்றும்போதே சட்டத்தரணி தவராசா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
வடக்கையும் கிழக்கையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் போராட்டத்தில் அதிகம் பங்கெடுத்தவர்கள் கிழக்கு மாகாணத்தில் உள்ளவர்கள். அதிலும் குறிப்பாக அம்பாறை மாவட்டம் முக்கியத்துவம் பெறுகின்றது.
இவ்வாறான நிலையிலேயே ஜெனிவா செல்வதனை நிறுத்திவிட்டு அம்பாறை மாவட்ட மக்களை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கின்றேன்.
அம்பாறை மாவட்டம் தமிழ் மக்களின் கட்டுப்பாட்டில் இருந்த மாவட்டம். ஆனால் தற்போதும், எதிர்காலத்தில் தமிழ் மக்கள் இந்த மாவட்டத்தில் வாழ்ந்தார்களா? என்ற வினாவை கேட்க வேண்டியிருக்கிறது.
தமிழர்களாகிய நாங்கள் சிறுபான்மையினம் அல்ல. சிறுபான்மை என்பது மொழி, இனம் அற்றவனே சிறுபான்மையினராக கனிக்கப்படுவான்.
தமிழர்களாகிய எங்களுக்கு இனம், மொழி ஆகிய இரண்டும் இருக்கின்றது. நாங்கள் வடக்கிலும் கிழக்கில் தொன்று தொட்டே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆகவே நாங்கள் சிறுபான்மையினர் அல்ல என்பதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ. யோகேஸ்வரன் மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள், தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள், விளையாட்டுக் கழகங்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.












 http://www.tamilwin.com/show-RUmtyDRcSUlw2J.html


Geen opmerkingen:

Een reactie posten