தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 25 maart 2015

அமைச்சுப் பதவியை மூன்று பேர் நிராகரித்தனர்!



ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்ட போது அந்த வாய்ப்பை மூன்று பேர் நிராகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மொனராகல நாடாளுமன்ற உறுப்பினர் சுமேதா ஜெயசேன, ஜி ஜெயசேன மற்றும் குருநாகல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயரத்ன ஹேரத் ஆகியோர் வாய்ப்புக்களை நிராகரித்தவர்களாவர்.
இவர்கள் மூவரும் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கி வருகின்றமை காரணமாகவே இந்த வாய்ப்பை நிராகரித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சää இன்னும் மக்கள் மனதில் இருப்பதாக ஜெயசேன சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில் மேலும் சில ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
புதிய நியமனங்கள்
சட்ட ஆணைக்குழுவின் புதிய தலைவராக ருமேஸ் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் ஜனாதிபதியிடமிருந்து தனது நியமன கடிதத்தை பெற்று கொண்டுள்ளார்.
இதேவேளை பதில் பிரதம நீதியரசராக சந்திரா ஏக்கநாயக்க இன்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமன கடிதத்தை வழங்கியுள்ளார்.
அது்துடன் இவர் உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyDRZSUlu1G.html

Geen opmerkingen:

Een reactie posten