தேசிய அரசாங்கம் சிறுபான்மையினருக்கு ஏற்படும் அபிவிருத்தி முன்னேற்றங்களுக்கு வரப்பிரசாதம்: கே.வேலாயுதம்
[ திங்கட்கிழமை, 30 மார்ச் 2015, 09:11.25 AM GMT ]
இதன் எதிர்காலம் வெற்றிகரமாக அமையுமிடத்து இதன் விஸ்தரிப்புகள் மேலோங்கி நாட்டினுடைய அனைத்து விடையங்களிலும் அனைவரும் ஒன்றித்து செயற்படும் நிலைமை உருவாகும் என பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கே.வேலாயுதம் தெரிவித்தார்.
அண்மையில் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த விசேட செவ்வியின் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
கடந்தகால அரசியல் போக்கினையும், சுதந்திரத்திற்கு பின்னரான இதுவரையிலான அரசியல் நடவடிக்கைகளோடும் ஒப்பிட்டு பார்க்கையில் தற்போது நமது நாடு மேற்கொண்டு வரும் அரசியல் கலாச்சார மாற்றங்கள் மற்றும், மக்கள் பிரதிநிதிகளின் தெளிவான அரசியல் விஞ்ஞாபனங்களும் நாட்டின் வளர்ச்சிக்கும் நல்லாட்சிக்கும் பாரிய பங்காற்றும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை.
தேசிய ரீதியில் நாட்டுக்கும் மக்களுக்கும் பயன்தரக்கூடிய தீர்மானங்களை எடுப்பதற்கு கட்சிகளுக்கு இடையிலான இணக்கப்பாடு என்பது மிக முக்கியமானதொன்றாகும்.
இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் அரசியல் ரீதியாகவும் கல்வி,புதிய உற்பத்தி ரீதியாகவும் ஆரோக்கியமிக்க தெளிவான பாதையில் பயணிப்பதே சிறப்பானதாகும்.
எல்லாவற்றையும் விட நம்மை பொறுத்தவரைக்கும் சிறுபான்மையினருக்கு நல்லது நடக்கும் என்பதுவே போதுமானதாகும்.
தேசிய அரசாங்கத்தில் சிறுபான்மை கட்சிகள் பலவும் அங்கம் வகிக்கும் சாதகமான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் நீண்ட கால பிரச்சினைகளுக்கு தேசிய அரசாங்கத்தின் மூலமாக தீர்வுகள் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது ஏனெனில் எடுக்கப்படும் சகல தீர்மானங்களுக்கும் அனைவரும் இணைந்தே முடிவுகளை எடுப்பதால் இவற்றை எதிர்க்கும் வாய்ப்புகள் குறைவாகவே காணப்படும். ஆகவே இதனை சாதகப்படுத்திக்கொண்டு சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கு சரியான தீர்மானங்களை பெற்றுக்கொள்வது நமது கைகளிலே உள்ளது.
தேசிய அரசின் ஊடாக நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் அனைத்து விடையங்களிலும் ஒளிவு மறைவு என்பது இருக்காது வெளிப்பாட்டு தன்மையுடன் செயற்படக்கூடிய நிலைமை உருவாகும் என அவர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyDQUSUlx4A.html
புதிய அமைச்சர்களின் நியமனமானது மைத்திரி அரசை சீர்குலைக்கும் மகிந்த ராஜபக்சவின் திட்டம்
[ திங்கட்கிழமை, 30 மார்ச் 2015, 10:06.44 AM GMT ]
மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளரான திஸ்ஸ கரலியத்த தான் பெற்றுக்கொண்ட பிரதியமைச்சர் பதவியை கைவிட போவதாகவும் கட்சியினரும் மக்களும் பிரதியமைச்சர் பதவியை பெற்றது குறித்து அதிருப்தியில் இருப்பதே இதற்கு காரணம் எனவும் கூறியிருந்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதாக கூறி அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்ட 26 பேரில் பெரும்பாலானவர்கள் மகிந்த ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமானவர்கள்.
அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டுள்ள இவர்கள், மகிந்த ராஜபக்ச கலந்து கொண்ட நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
அமைச்சர் பதவிகளில் சில காலம் இருந்து விட்டு பல்வேறு காரணங்களை கூறி பதவிகளில் இருந்து விலகுவதே இவர்களின் திட்டமாகும்.
மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சி வியூகத்தில் சிக்கலை ஏற்படுத்துவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த செயற்பாடுகளின் பின்னணியில் மகிந்த ராஜபக்சவும் மேலும் சிலரும் இருப்பதாக கூறப்படுகிறது.
அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழக்கும் அறிகுறி
[ திங்கட்கிழமை, 30 மார்ச் 2015, 09:57.11 AM GMT ]
அடுத்த பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி குருணாகலில் நடைபெறவுள்ள கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 70 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது.
அத்துடன் இவர்கள் நாடாளுமன்றத்தில் தனி அணியாக இயக்கவும் அந்த அணியின் சிரேஷ்ட உறுப்பினரை எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யவும் தீர்மானித்துள்ளதாக இரத்தினபுரியில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten