“சீ.வி” ரணில் சண்டை சும்மாவாம்! கண்டுபித்தர் செல்வம்.
ஒரு சில தர்க்கங்களை பிரிவினையாக கருதக்கூடாது என தெரிவிக்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வன்னி, மன்னார் பகுதிகளில் இராணுவத்தின் பிடியில் உள்ள காணிகளையும் விடுவிக்க கோரி பிரதமரிடம் வலியுறுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.
வடமாகாணத்திற்காக விஜயத்தினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டுள்ள நிலையில் கூட்டமைப்பு உடனான சந்திப்பு தொடர்பிலும் வடமாகாண முதலமைச்சர் மற்றும் பிரதமருக்கு இடையில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் கருத்து முரண்பாடுகள் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,பிரதமரின் யாழ். விஜயம் மிக ஆரோக்கியமானதென்றே நாம் கருதுகின்றோம். கடந்த வாரம் வடக்கில் காணி விடுவிப்பு நிகழ்வில் பிரதமர் கலந்து கொண்டிருந்த போதும் அவருடனான சந்திப்பினை மேற் கொள்ள முடியவில்லை.
எனினும் நாளை (29ஆம் திகதி) நாம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கிளிநொச்சியில் சந்திக்கவுள்ளோம்.இச்சந்திப்பின் போது மன்னார், வன்னி பகுதிகளில் இராணுவ வசமிருக்கும் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பிலும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலும் எம் பக்க கருத்துக்களை முன்வைப்போம்.
வடக்கில் காணிகள் விடுவிக்கப்பட்ட போதிலும் மக்களின் நிலங்கள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. வன்னி, மன்னார் முள்ளிக்குளம், பகுதிகளில் மக்களின் நிலங்கள் இன்றும் இராணுவத்தினர் பிடியிலேயே உள்ளது.
எனவே இவ்விடயங்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்திற்கு கொண்டு வரவுள்ளோம்.அதேபோல வடமாகாண முதலமைச்சர் மக்களின் உண்மை நிலைமையினை வெளிப்படுத்தியுள்ளார்.
அவரின் கருத்துக்களில் நியாயமான கோரிக்கைகளே உள்ளடங்கியிருக்கின்றது. அதேபோல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் வடமாகாண சபைக்கும் எவ்வித முரண்பாடுகளும் இல்லை.
ஒரு சில கருத்து முரண்பாடுகளை பிரிவி னைக்கான சண்டையென சித்தரிப்பது தவறானது. வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் கருத்துக்களினால் அர சாங்கத்துடன் முரண்பாடுகள் ஏற்பட போவ தில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும், வடக்கு முதல்வர் விக்னேஸ்வரனிற்குமிடையில் மாதலொன்றுமில்லை, அது சும்மா பகிடியென்ற சாரப்பட, நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் பாணியில் பேசியுள்ளார் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்.
ஒரு சில தர்க்கங்களை பிரிவினையாக கருதக்கூடாது என கூறும்அடைக்கலநாதன், வன்னி, மன்னார் பகுதிகளில் இராணுவத்தின் பிடியில் உள்ள காணிகளையும் விடுவிக்க கோரி பிரதமரிடம் வலியுறுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.
பிரதமரின் வடக்கு விஜயம், கூட்டமைப்புடனான, வடமாகாண முதலமைச்சர் மற்றும் பிரதமருக்கு இடையில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் கருத்து முரண்பாடுகள் தொடர்பில் வினவியபோதே அவர் இப்படி பேசியுள்ளார்.
“பிரதமரின் யாழ். விஜயம் மிக ஆரோக்கியமானதென்றே நாம் கருதுகின்றோம். கடந்த வாரம் வடக்கில் காணி விடுவிப்பு நிகழ்வில் பிரதமர் கலந்து கொண்டிருந்த போதும் அவருடனான சந்திப்பினை மேற் கொள்ள முடியவில்லை.
எனினும் நாளை (29ஆம் திகதி) நாம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கிளிநொச்சியில் சந்திக்கவுள்ளோம்.
இச்சந்திப்பின் போது மன்னார், வன்னி பகுதிகளில் இராணுவ வசமிருக்கும் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பிலும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலும் எம் பக்க கருத்துக்களை முன்வைப்போம்.
வடக்கில் காணிகள் விடுவிக்கப்பட்ட போதிலும் மக்களின் நிலங்கள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. வன்னி, மன்னார் முள்ளிக்குளம், பகுதிகளில் மக்களின் நிலங்கள் இன்றும் இராணுவத்தினர் பிடியிலேயே உள்ளது.
எனவே இவ்விடயங்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்திற்கு கொண்டு வரவுள்ளோம்.
அதேபோல வடமாகாண முதலமைச்சர் மக்களின் உண்மை நிலைமையினை வெளிப்படுத்தியுள்ளார்.
அவரின் கருத்துக்களில் நியாயமான கோரிக்கைகளே உள்ளடங்கியிருக்கின்றது. அதேபோல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் வடமாகாணசபைக்கும் எவ்வித முரண்பாடுகளும் இல்லை.
ஒரு சில கருத்து முரண்பாடுகளை பிரிவினைக்கான சண்டையென சித்தரிப்பது தவறானது. வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் கருத்துக்களினால் அரசாங்கத்துடன் முரண்பாடுகள் ஏற்பட போவ தில்லை” எனவும் கூறினார்.
http://www.jvpnews.com/srilanka/102946.html
தமிழர் அழிவை காக்குமா! அல்லது அழிக்குமா “TNA”
அரசாங்கத்தினால், இராணுவத்தின் ஊடாகவும், வேறு வழிகளிலும் அபகரிக்கப்பட்டுள்ள காணிகளை மீட்டெடுத்தல், காணாமல் போனவர்களைக் கண்டறிதல், விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், எல்லை தாண்டி வந்து மீன்வளங்களைச் சுரண்டி செல்கின்ற இந்திய மீனவர்களின் வருகையைத் தடுத்தல் அல்லது அவர்களின் மீன்பிடி தொழிலை சீர் செய்தல், மாகாண மட்டத்தில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள நிர்வாகச் செயற்பாடுகளுக்கான அதிகாரங்களை வலுப்படுத்தி மேம்படுத்துதல் என பல்வேறு பிரச்சினைகளாக இன்று தமிழ் மக்கள் மத்தியில் இனப்பிரச்சினை விஸ்வரூபமெடுத்து நிற்கின்றது.
மறுக்கப்பட்டுள்ள உரிமைகளுக்காகத் தமிழ் மக்களும் தமிழ் அரசியல் கட்சிகளும், நாடு அந்நியரிடமிருந்து சுதந்திரம் பெற்ற நாள் முதலாக, கடந்த ஆறு தசாப்தங்களுக்கு மேலாகப் போராடி வருகின்றார்கள் என்பது, தமிழ் அரசியல்வாதிகளின் வாய்ப்பாடாக இருக்கின்றது.
இந்தப் போராட்டம் நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றபோதிலும், பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு, பிரச்சினைகளின் எண்ணிக்கை குறைந்தபாடாகத் தெரியவில்லை. மாறாக பிரச்சினைகள் பரந்துபட்டு, பூதாகரமாக வளர்ச்சியடைந்து வருவதையே வரலாறு பதிவு செய்து கொண்டிருக்கின்றது.
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுத்து போராடி வருகின்ற, அரசியல் தலைமைகள், தீர்க்கதரிசனத்துடன் விடயங்களை அணுகாமையும், அந்தப் பிரச்சினைகளை அரசியல் சாணக்கியத்துடன் கையாளத் தவறியுள்ளமையுமே இதற்குக் காரணம் என ஆய்வாளர்களும், அரசியல் அவதானிகளும் சுட்டிக்காட்டியுள்ளார்கள். தமிழ் அரசியல் தலைமைத்துவத்திற்கிடையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்ற அரசியல் தலைமைக்கும், அந்தத் தலைமையுடன் கூடிய பாராளுமன்ற பிரதிநிதித்துவத்துக்குமான போட்டியே, இந்த அரசியல் போராட்டத்தின் வலுவற்ற தன்மைக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகின்றது.
அரசியல் தலைமை, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் (இப்போது அது மாகாண அமைச்சர், மாகாண சபை உறுப்பினர், உள்ளூராட்சி சபைகளின் தலைவர், உறுப்பினர் என்று விரிவடைந்திருக்கின்றது) என்ற அதிகாரத்துக்குமான அரசியல் ஆவலும், பேராசையும் இப்போது பெருகிச் செல்வதையும் காண முடிகின்றது. யுத்த நெருக்கடிகள் மிகுந்திருந்த காலப்பகுதியில் உள்ளூராட்சிசபைகள் முதல், பாராளுமன்ற தேர்தல் வரையில் வேட்பாளர்களைக் கண்டு பிடிப்பது மிகவும் கடினமான காரியமாக இருந்தது. இப்போது, இராணுவ நெருக்கடிகள் குறைந்துள்ளதையடுத்து, பலரும் அரசியலில் இடம் பிடித்துவிட வேண்டும் என்பதற்காக ஆலாய்ப் பறந்து கொண்டிருக்கின்றார்கள்.
பழையன கழிதலும், புதியன புகுதலும் இயற்கையின் நியதியாகும். இந்த நியதி அரசியலுக்கும் பொருத்தமானதே. ஆயினும், வலிந்து கழிப்பதுவும், வலிந்து புகுவதும் அதிகமாகியிருப்பதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. தலைமைகள் உருவாக வேண்டும். வலிந்து உருவாக்கப்படுகின்ற தலைமைகள் தகுதியானவையாக, மக்களின் உண்மையான தேவைகளை அறிந்து சேவையாற்றத் தக்கவையாக இருக்கமாட்டாது, என்பதில் சந்தேகமில்லை.
இது ஒரு புறமிருக்க,இலங்கை அரசாங்கமும், அயல்நாடாகிய இந்தியா உள்ளிட்ட வெளிச்சக்திகளான சர்வதேச சக்திகளும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை கையாள்கின்ற முறைமைகள், அவ்வாறு கையாள்வதன் நோக்கம் என்பவற்றை, சரியாக இனம் கண்டு, அதற்கேற்ற வகையில் தமது அரசியல் வியூகங்களை வகுத்து, இந்தத் தலைமைகள் செயற்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்களும் இருக்கவே செய்கின்றன. தமிழ் மக்களுடைய அரசியல் சக்தியானது, அவசியமான கட்டமைப்புக்களுடன் இறுக்கமாகக் கட்டி வளர்க்கப்படவில்லை, பேணப்படவில்லை என்பதும் பலராலும் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது.
கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்ற போக்கில் தமிழர் தரப்பில் அரசியல் செய்யப்படுகின்றது என்ற குற்றச்சாட்டும் இதன் காரணமாகவே எழுந்திருக்கின்றது என்பதைக் குறிப்பிட வேண்டியிருக்கின்றது.
யுத்தத்தின் பின்னரான நிலைமைகள்
ஆயுதப் போராட்டமே தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை சர்வதேச மட்டத்திற்கு இட்டுச் சென்று, அதற்குத் தீர்வு காண வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியிருந்தது.
தமிழ் இளைஞர்கள், ஆயுதக் குழுக்களாகச் செயற்பட்டு பிரச்சினைக்குத் தீர்வு காண முற்பட்டது முதல், தாங்களே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என பிரகடனப்படுத்தி போராட்டத்தை முன்னெடுத்து சர்வதேச மட்டத்தில் பல பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்ட விடுதலைப்புலிகள் வரையில், தமிழர் தரப்பில் தீர்க்கதரிசனத்துடன் கூடிய அரசியல் போராட்ட கட்டமைப்பு கட்டி வளர்க்கப்படவில்லை என்ற பாரிய குறைபாடு சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.
ஆயுதப் போராட்டம் நசுக்கப்பட்டு, யுத்தத்திற்கு முடிவு காணப்பட்டதன் பின்னரும். அதே நிலைமை தொடர்கின்றது என்பது மிகவும் துரதிஷ்ட வசமாகும். யுத்தம் முடிவடைந்த பின்னர் நெருக்கடிகள் குறைந்து ஜனநாயக ரீதியில் ஓரளவுக்குச் செயற்படக் கூடிய சூழல் உருவாகியிருக்கின்ற போதிலும், பன்முகப்படுத்தப்பட்ட போராட்டச் செயற்பாடுகளைக் கொண்டதாக தமிழ் அரசியல் கட்டமைப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படவில்லை என்பது துயரத்திற்குரியதாகியிருக்கின்றது.
காணி மீட்பு, காணாமல் போனோரைக் கண்டறிதல், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை, அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள மாகாண சபைக்கான அதிகாரங்களைப் பெறுவதற்கான செயற்பாடுகள் என பலதரப்பட்ட செயற்பாடுகளை சமாந்தரமாக முன்னெடுக்க வேண்டிய தேவை இப்போது எழுந்திருக்கின்ற போதிலும், கட்டமைக்கப்பட்ட வகையில் அரசியல் செயற்பாடுகள், தமிழ் அரசியல் தலைமைகளினால் மேற்கொள்ளப்படவில்லை என்பது மிகவம் கவலை தரத்தக்கதாகும்.
முன்னைய ஆட்சிக் காலத்தில் கடந்த வருட இறுதிப்பகுதியில், 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்ற அறிவித்தல் வெளியாகி, அந்தத் தேர்தலுக்கான எதிர்பார்ப்புக்கள் மிகுந்திருந்த வேளை, தமிழர் பிரதேசங்களில் குறிப்பாக வன்னிப்பிரதேசம் உள்ளிட்ட வடபகுதியில் நிலவிய இராணுவ நலன் சார்ந்த நெருக்கடி நிலைமைகளுக்கு டிசம்பர் மாதத்திற்கிடையில் முடிவேற்படாவிட்டால் தை மாதம் தொடக்கம் பரந்துபட்ட அளவில் போராட்டங்கள் வெடிக்கும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக்கட்சியின் தலைவருமாகிய மாவை சேனாதிராஜா எச்சரிக்கை விடுத்திருந்தார்.
ஆயினும், ஜனாதிபதி தேர்தலின் ஊடாக நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தமிழ் மக்களை அழுத்தும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என்ற எதிர்பார்ப்பு மிகுந்திருந்தது. ஆட்சி மாற்றத்திற்கும், புதிய ஜனாதிபதியாகிய மைத்திரிபால சிறிசேனவை வெற்றியடையச் செய்வதற்கும் தமிழ் மக்கள் ஏகோபித்த வகையில் தேர்தலில் வாக்களித்திருந்தமையே இதற்குக் காரணமாகும். ஆயினும் அந்த எதிர்பார்ப்பும் வழமைபோல ஏமாற்றத்தைத் தருவதாகவே மாறிவிட்டது.
மறுபக்கத்தில் புதிய ஆட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி, இணக்க அரசியலுக்குள் புகுந்துள்ள தமிழ்த்தலைமைகள், மக்களின் இந்த ஏமாற்றத்தை சரியாக உள்வாங்கி, அவர்கள் மக்கள் எதிர்பார்க்கின்ற வகையில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பின்வாங்கியிருக்கின்ற ஒரு போக்கையே இப்போது காண முடிகின்றது. காணாமல் போனவர்களைக் கண்டறிதல், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணி மீட்பு போன்ற பிரச்சினைகளை முன்வைத்து, சிவில் சமூகத்தினர் வீதியில் இறங்கி போராட்டங்களை நடத்தி வருவதை, இதற்கு முக்கிய உதாரணமாகக் காட்டலாம்.
இந்தப் போராட்டங்களில் அரசியல் தலைமைகள் பின் தள்ளப்பட்டிருப்பதுவும், அவர்களின் மறைமுகமான ஆலோசனைகளைக்கூட சிவில் சமூகத்தினர் பெற்றுக்கொள்ளாதிருப்பதுவும் மிக மிக முக்கியமானதாகும். அது மட்டுமல்லாமல், காணாமல் போயிருப்பவர்கள் தொடர்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையும், சிவில் சமூகத்தினரும் முரண்பாட்டு தோற்றமுடைய நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதைத் தெளிவாக அவதானிக்க முடிகின்றது.
உள்ளக விசாரணை வேண்டாம், அவற்றில் பங்குபற்ற மாட்டோம் என்பது பாதிக்கப்பட்ட மக்கள் மயமாகிய சிவில் சமூகத்தினருடைய நிலைப்பாடாக உள்ளது. ஆனால், கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் போன்றோர் உள்ளக விசாரணைகளில் மக்கள் பங்கு கொள்ள வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்த விடயத்தில் அரசியல் தலைவர்களின் கருத்தும், வீதிகளில் இறங்கி போராட்டங்களை நடத்தி வருகின்ற பாதிக்கப்பட்ட மக்களின் நிலைப்பாடும் ஒன்றுக்கொன்று முரண்பாடானதாக அமைந்திருக்கின்றது. இந்த முரண்பாட்டை களையவோ அல்லது இதுவிடயத்தில் இணக்கப்பாட்டுடன் கூடிய ஒன்றிணைந்த ஒரு நிலைப்பாட்டை உருவாக்குவதற்கோ அரசியல் தலைமைகள் முயற்சிகளை மேற்கொண்டதாகத் தெரியவில்லை.
பொதுத் தேர்தல் ஒன்றுக்கு முகம் கொடுக்க வேண்டிய சூழலில், இவ்வாறு மக்களை ஒன்றிணைத்துள்ள சிவில் சமூகத்தினரும், தமிழ் அரசியல் தலைமைகளும் இருவழிப் போக்கில் அரசியல் பயணத்தைத் தொடங்கியிருப்பது, தமிழ் மக்களின் உடனடி எதிர்காலச் செயற்பாடுகளுக்கு ஆரோக்கியமானதல்ல. போராட்டங்கள்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வும் வெவ்வேறு திகதிகளில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்கள்.
இரண்டு விஜயங்களுமே வரலாற்று முக்கியத்துவம் மிக்க சம்பவங்களாகும். இந்த விஜயங்களின்போது, பாதிக்கப்பட்ட மக்கள், இந்தத் தலைவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.
இந்தியப் பிரதமர் வட மாகாணத்திற்கு விஜயம் செய்த அன்று, தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைக்கு, நியாயமான தீர்வு காணப்பட வேண்டும், காணாமல் போனவர்களைக் கண்டு பிடிப்பதற்கும், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கும் இலங்கை அரசுக்கு இந்தியப் பிரதமர் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக் கோரி, ஆர்ப்பாட்டம் செய்து, யாழ்.பேருந்து நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அலுவலகத்திற்கு, நகர வீதிகளில் பேரணியாகச் சென்று, அங்கு அழுது புலம்பி மகஜர் ஒன்றைக் கையளித்திருந்தார்கள்.
அதேநேரம், அதியுயர் இராணுவ பாதுகாப்பு வலயத்தில் இராணுவத்தின் பிடியில் உள்ள காணிகளில் ஒரு சிறிய பகுதியை அதன் உரிமையாளர்களாகிய இடம்பெயர்ந்த மக்களிடம் கையளிப்பதற்காக வளலாய் கிராமத்திற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்தை ஈர்ப்பதற்காக யாழ் நகரில், காணாமல் போனோரின் குடும்ப உறவினர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தியிருந்தார்கள்.
யாழ்ப்பாணத்தில் மட்டுமல்லாமல், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தழுவிய அளவில் இந்தப் போராட்டத்தை சிவில் சமூகத்தினர் ஒழுங்கு செய்து நடத்தியிருந்தனர்.
இரண்டு மாவட்டங்களிலும் உள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய 8 மாவட்டங்களில் இந்தப் போராட்டம் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு எழுதப்பட்ட மகஜரை, அந்தந்த மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களிடம் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்களின் பிரதிநிதிகள் கையளித்திருந்தார்கள்.
இந்த இரண்டு போராட்டங்களையும் முழுக்க முழுக்க சிவில் சமூகத்தினரே ஒழுங்கமைத்து நடத்தியிருந்தார்கள். வடக்கு கிழக்கு மாகாணங்களின் 8 மாவட்டங்களிலும் நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தில் அம்பாறையில் மாகாணசபை உறுப்பிணர் கலையரசன் தலைமையில் மாகாணசபை உறுப்பிணர் இராஜேஸ்வரன் உட்பட முக்கியஸ்தர்கள் மற்றும் முல்லைத்தீவு போராட்டத்தில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
உள்ளக விசாரணை எங்களுக்கு வேண்டாம். சர்வதேச விசாரணையே வேண்டும் என்பதே இந்தப் போராட்டத்தின் முக்கிய கோரிக்கையாக அமைந்திருந்தது. உள்ளக விசாரணையை தாங்கள் வெறுப்பதற்கான காரணம் என்ன என்பதை அவர்கள் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளருக்கு எழுதியிருந்த மகஜரில் மிகவும் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.
எத்தனையோ உள்ளக விசாரணைகள் நடத்தப்பட்டிருக்கின்றன. எல்எல்ஆர்சி, ஜனாதிபதி ஆணைக்குழு ஆகிய குழுக்களின் விசாரணைகள் மட்டுமல்லாமல், இராணுவத்தினர் மேற்கொண்ட விசாரணைகள், வவுனியாவில் பொலிசார் விசாரணைக்காக மேற்கொண்ட பதிவுகள் என பலதரப்பட்ட விசாரணைகள் நடைபெற்றிருக்கின்றன.
இந்த விசாரணைகள் எல்லாவற்றிலும் பாதிக்கப்பட்ட மக்கள் ஓடியோடி தமது வாக்குமூலங்களையும், சாட்சியங்களையும் விபரங்களையும் பதிவு செய்தார்கள். ஆனால், எந்தவிதமான பலனும் அதனால் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.
இது முன்னைய ஆட்சிக் காலத்தில் நடைபெற்றது. ஜனநாயகத்தையும், நல்லாட்சியையும் ஏற்படுத்தப் போவதாகவும், பிரச்சினைகள் பலவற்றிற்குத் தீர்வு காணப்படும் என்றும் உறுதியளித்து ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கம், சர்வதேச தரத்திற்கமைவாக பொறுப்பு கூறும் வகையில் நம்பகமான உள்ளக விசாரணை பொறிமுறையொன்றை அமைக்கப்படும் என ஐ.நா.வுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் உத்தரவாதமளித்திருந்தது.
அத்துடன், இந்த நாட்டில் தமிழ் மக்கள் சுய கௌரவத்துடன், கண்ணியமாக வாழத்தக்க வகையில் ஓர் அரசியல் தீர்வுக்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும், புதிய அரசு உறுதியளித்திருந்தது.
ஆனால், அவசரமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக இந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட 100 நாள் வேலைத்திட்டத்தில் தமிழ் மக்களைப் பாதிக்கத்தக்க நேரடியாகப் பாதிக்கத்தக்க விடயங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
அதேவேளை, புதிய ஜனாதிபதி பதவியேற்றதும், காணாமல் போனவர்கள் தொடர்பில் 18 மாதங்களாக விசாரணை நடத்தியுள்ள முன்னைய அரசாங்கத்தின் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகளை அடிப்படையில் எந்தவிதமான மாற்றங்களும் செய்யாமல், அதன் ஆயுட் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல், அந்த குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்கான நியமிக்கப்பட்டிருந்த சர்வதேச நிபுணர்கள் குழுவின் செயற்பாடுகளையும் தொடரச் செய்துள்ளார்.
இந்தக் குழுவின் செயற்பாடுகள் நம்பகத்தன்மை குறித்து பலத்த விமர்சனங்கள் எழுந்திருந்தன. அதற்கு முன்னைய அரசு எந்த நடவடிக்கைகளையும் எடுக்காத நிலைமையிலேயே, புதிய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இந்தப் பின்னணியிலேயே சிவில் சமூகம் பாதிக்கப்பட்டவர்களின் ஒப்புதலுடன், இந்த குழுவின் விசாரணையைப் புறக்கணிப்பதற்கான தீர்மானத்தை மேற்கொண்டு அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றது.
ஐ.நா.வின் வலிந்து காணாமல் போகச் செய்யப்பட்டோர் தொடர்பிலான செயலணியின் அதிகாரிகள் இலங்கை வருவதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்.
அவர்கள் இங்கு வந்து பாதிக்கப்பட்டவர்களையும், சம்பந்தப்பட்ட அமைப்புக்களையும் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கும், விசாரணைகளில் பங்களிப்பு செய்வதற்கும் இடமளிக்கப்பட வேண்டும்.
இதன் ஊடாக காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பான விசாரணைகள் சர்வதேசத்தின் பங்களிப்புடன் இடம்பெற வேண்டும் என்பதே தமது கோரிக்கை என சிவில் சமூகத்தினர் ஐநா மனித உரிமை ஆணையாளருக்கு எழுதியுள்ள மகஜரில் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கோரிக்கை மட்டுமல்லாமல், காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பில் இராணுவம் உட்பட அரச படைகளின் செயற்பாடுகள் தொடர்பான ஆதாரங்கள் பலவற்றை காணாமல் போயுள்ளவர்களின் உறவினர்கள் விசாரணைகளில் சமர்ப்பித்தும்கூட இந்த விசாரணை குழுக்கள் அதுகுறித்து உரிய நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை.
இந்த நிலைமையில்தான், சிவில் சமூகத்துடன் தொடர்புடைய அல்லது அதன் வகைப்பட்ட மனித உரிமை அமைப்புக்களின் சட்டத்தரணிகள் இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் ஆட்கொணர்வு மனுக்களை நீதிமன்றத்தில் தாக்கல்செய்து காணாமல் போயிருப்பவர்களைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றனர்.
இந்தச் செயற்பாடுகளில் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் எதனையும் காண முடியவில்லை. வலிகாமம் வடக்கில் இராணுவம் பிடித்து வைத்துள்ள காணிகள் தொடர்பில் கூட்டமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளிலும் விசாரணைகள் தொடர்பாகவோ அல்லது அந்தக் காணிகளை மீட்பதிலோ முன்னேற்றம் எதனையும் காண முடியவில்லை.
எனவே, இத்தகைய அரசியல் செயற்பாடுகள் – திட்டமிட்டு முன்னெடுக்கப்படாத நடவடிக்கைகள் என்பன பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கோ, இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வொன்றை நோக்கி முன்னோக்கி நகர்ந்து செல்வதற்கோ உதவப் போவதில்லை.
எனவே, காலத்தின் தேவையையும் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யத்தக்க வகையிலும் அரசியல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
இதனை தமிழ் அரசியல் தரப்பினர் கவனத்திற் கொண்டு செயற்பாடுகளை மேற்கொள்ள முன்வர வேண்டும். சிவில் சமூகத்தினர் ஒருபக்கமும், அரசியல் செயற்பாடுகள் வேறு ஒரு பக்கமும் செயற்படுவதனால் பெரிய அளவில் நன்மைகள் விளையப் போவதில்லை.
செல்வரட்ணம் சிறிதரன்
http://www.jvpnews.com/srilanka/102959.html
Geen opmerkingen:
Een reactie posten