தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 31 maart 2015

இலங்கை மேற்குலக நாடுகளின் எதிரியல்ல: மைத்திரிபால

கலைஞர்களுக்கு காணிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015, 04:05.05 AM GMT ]
நாட்டின் கலைஞர்களுக்கு காணித் துண்டுகளை வழங்க சமூக சேவைகள், நலன்புரி மற்றும் கால்நடைவள பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாசவுடன் இணைந்து இந்த திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
இதன் முதற்கட்டமாக பனாகொடை இம்புல்கொட பகுதியில் அமைந்துள்ள காணியொன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
கொடகம மற்றும் பனாகொடை ஊடாக இந்தப் பகுதிக்கு செல்ல முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த இடத்திலிருந்து கொழும்பிற்கு பயணம் செய்ய ஒரு மணித்தியாலம் தேவைப்படும்.
காணித் துண்டுகள் தேவைப்படும் கலைஞர்கள் தங்களது விபரங்கள் அடங்கிய விண்ணப்பம் ஒன்றை சமூக சேவைகள் மற்றும் கால்நடைவள அமைச்சுக்கு அனுப்பி வைக்க வேண்டுமென பிரதி அமைச்சர் கோரியுள்ளார்.

இலங்கை மேற்குலக நாடுகளின் எதிரியல்ல: மைத்திரிபால
[ செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015, 04:00.36 AM GMT ]
இலங்கை சர்வதேச நாடுகளுக்கு எதிராக ஒருபோதும் செயற்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சீன ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை பொருளாதார வளர்ச்சியில் அணிசேரா நாடுகளின் கொள்கையை கடைபிடித்து மேற்குலக நாடுகளின் ஒத்துழைப்பை பெற்று கொள்வதுடன், அதன் நட்புறவை நிலைநிறுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியாக பதவியேற்று முதல்தடவையாக சீனாவிற்கு மேற்கொண்ட விஜயம் வெற்றியை ஏற்படுத்தியுள்ளது எனவும்,
மருத்துவ சிகிச்சை, விவசாயம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்ளும் உடன்படிக்கைகளில் இரு நாடுகளும் கைச்சாத்திட்டுள்ளன என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை வளர்ச்சியடைவதற்கு மேற்குலக நாடுகளின் நட்புறவு அவசியப்படுகின்றது.
சர்வதேச நிலைமையில் சீன அரசாங்கம் இலங்கைக்கு வழங்கும் ஒத்துழைப்புக்கள் மிகவும் முக்கியமானவை எனவும் ஜனாதிபதி  குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDQVSUkozA.html

Geen opmerkingen:

Een reactie posten