இலங்கை இராணுவத்துக்கு அவதூறு ஏற்படும் வகையில் தயாரிக்கப்பட்ட காணொளி ஒன்றையும் அதற்கு பங்களிப்பு வழங்கிய நபர்களையும் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
படையினருக்கு இழுக்கை ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த காணொளி இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
சிங்களத்தில் மொழி பெயர்த்து குரல்களை பதிவு செய்வதற்காக இந்த காணொளி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை போன்றதொரு அமைப்பிடம் சமர்ப்பிக்கும் நோக்கில் இக்காணொளி தயாரிக்கப்பட்டுள்ளது.
நாரஹென்பிட்டியில் அமைந்துள்ள வீடொன்றில் காணொளிக்கான பின்னணி பேசும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது இன்று பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர்.
ஐந்து தமிழர்களும் மூன்று சிங்களவர்களும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ் பிணையில் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பின்னணி பேசுவதற்காக பயன்படுத்திய கருவிகளை பொலிஸார் மீட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி உள்ளனர்.
தமிழின அழிப்பின் புதிய ஆவணப்படம்! ஐ.நா மண்டபத்தில் கண்ணீர் சிந்திய பிரதிநிதிகள்
ஐ.நா மண்டபத்தில் கடந்த புதன்கிழமை திரையிடப்பட்ட தமிழின அழிப்பு தொடர்பான ஆவணப்படத்தினை பார்வையிட்ட தமிழ் மற்றும் வேற்றின பிரதிநிதிகள் கண்ணீர் சிந்தி கலங்கினர்.
இந்த ஆவணப்படத்தினை தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னனி இயக்குநர் கௌதமன் பலத்த சிரமத்தின் மத்தியில் இயக்கியுள்ளார்.
கடந்த புதன்கிழமை ஐ.நா மனித உரிமைச் சபையில் இலங்கையில் தமிழ் பெண்களும் குழந்தைகளும் தலைப்பில் “OCAPROCE INTERNATIONAL” என்ற அமைப்பின் சார்பாக மாநாடு இடம்பெற்றது.
இம்மாநாடு OCAPROCE INTERNATIONAL அமைப்பின் தலைவி தலைமையில் இடம்பெற்றதுடன், இதில் பெண்கள் உரிமைகள் செயற்பாட்டாளரான செல்லத்துரை ரஜனி, தமிழ் நாட்டில் இருந்து பேராசிரியர் இராமு.மணிவண்ணன், உயர் நீதிமன்ற சட்டத்தரணி திருமதி. அங்கயக்கன்னி, செல்வி உமாசங்கரி நெடுமாறன் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டிலேயே இனவழிப்புத் தொடர்பான ஆவணப்படம் திரையிடப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmtyDRcSUlw3G.html
Geen opmerkingen:
Een reactie posten