தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 27 maart 2015

தற்போதைய அரசுக்கு ஆதரவளிப்பது அமைச்சுப்பதவிக்காக அல்ல: மாவை சேனாதிராஜா



அதியுயர் பாதுகாப்பு வலயங்களை விடுவிப்பதில் உடன்பாடில்லை: பேராசிரியர் வசந்த பண்டார
[ வெள்ளிக்கிழமை, 27 மார்ச் 2015, 11:36.27 AM GMT ]
அதியுயர் பாதுகாப்பு வலயங்களை நீக்கி விட்டு அவ்விடத்தினை மக்களுக்கு பகிர்ந்தளிப்பது தொடர்பில் தமக்கு உடன்பாடு இல்லையென தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தின் ஊடகப்பேச்சாளரும் பேராசிரியருமான வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண தமிழ் மக்களுக்கு காணி வழங்குவதற்கு எதிரான கருத்துக்களில் இருந்து ஒரு போதும் முரண்பட்டுக் கொள்ளவில்லை. சொந்தக் காணிகளை இழந்த அந்த மக்களுக்கு காணி வழங்க வேண்டிய கடமை ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்திற்கு உள்ளது என்ற கருத்திலும் நாம் உறுதியாகவேயுள்ளோம்.
வடக்கில் பல விவசாய நிலங்கள் உள்ளன. அது தொடர்பாக நாம் எந்த கருத்துக்களையும் தெரிவிக்கமாட்டோம். அவற்றை மக்களிடம் மீளக்கொடுப்பதனூடாக அம்மக்கள் பயனடைவார்கள். அவர்களது பொருளாதார தொழில் தேவைக்கான சூழலையும் உருவாக்கிக் கொள்வார்கள்.
இப்படி இருக்க அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்ட இடங்களிலுள்ள காணிகளை மக்களுக்கு வழங்குவதால் நாட்டின் தேசிய பாதுகாப்பு சீர்குலைவது மட்டுமன்றி, மக்களுக்கு பொருத்தமானதொரு வாழ்க்கை சூழலை அமைத்துக்கொள்வது கடினமாயிருக்கும் என்றும் தெரிவித்துள்ள பேராசிரியர் பண்டார அமைச்சர், சுவாமிநாதன் சம்பூர் கடற்படை முகாமை நீக்கி பொது மக்களுக்கு அவ்விடங்களை கையளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதில் தமக்கு உடன்பாடில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இப்படியான சூழலில் இவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.கடற்படை தளங்களோ அல்லது அதியுயர் பாதுகாப்பு வலயத்திலோ மக்களுக்கு சிறந்ததொரு வாழ்க்கை சூழலை அமைத்துக் கொடுக்க முடியாது. அத்துடன் அவர்கள் வாழ்வாதாரத்துக்கு தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அந்த சூழல் பொருத்தமானதாக அமையாது.
ஆனாலும் இப்போது ரணில் அதியுயர் பாதுகாப்பு வலயங்களை பிரித்து வழங்கியுள்ள காரணத்தால் அது தொடர்பில் பேசுவதில் பயனில்லை.ஆனால் இதன் பின்விளைவுகளை ரணில் சந்திப்பார் என்பது உறுதி என்றார்.
கொழும்பு பொரளை தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்போன்ற கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை அங்கு கருத்துத் தெரிவித்த தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் உறுப்பினர் பெங்கமுவே நாலக்க தேரர்,
தேசிய அரசு என்ற பெயரில் ரணில் - மைத்திரி கூட்டாட்சியில் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டவர்கள் சுதந்திரக்கட்சியின் துரோகிகள் என தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத்தெரிவித்த அவர்,
தேசிய அரசாங்கத்தை உருவாக்கியிருக்கும் ரணிலின் அரசாங்கத்தில் இணைந்து கொண்ட இவர்கள் நாட்டின் நலன்கருதி ஆட்சிக்கு வந்தவர்கள் அல்ல. தமது சொந்த தேவைகளை நிறைவேற்றி கொள்ளவே அமைச்சுப்பதவிகளை பெற்றுக்கொண்டுள்ளனர். இவர்கள் தேசியத்தின் துரோகிகளாக கருதப்பட வேண்டியவர்களாவர்.
அத்துடன் ஐனாதிபதிக்கான அதிகார குறைப்பானது பிரிவினைவாதிகளை வலுவடையச் செய்யும். இதனை உணர்ந்து கொண்டுள்ள மக்களுக்காக மஹிந்த மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டியது அவசியம் என அவர் மேலும் தெரிவித்தார்.
அதேவேளை வடக்கு மாகாணத்தில் இருந்து வெளியேறிய 2400 சிங்களவர்களுக்கான காணிகளை மீண்டும் வழங்க வேண்டும் எனவும் அங்கு அவர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRbSUlv4E.html

தற்போதைய அரசுக்கு ஆதரவளிப்பது அமைச்சுப்பதவிக்காக அல்ல: மாவை சேனாதிராஜா
[ வெள்ளிக்கிழமை, 27 மார்ச் 2015, 11:29.22 AM GMT ]
புதிய அரசுக்கு ஆதரவளிப்பது அமைச்சுப்பதவிக்காக அல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்டத்தில் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதில் கலந்து கொண்டு ஊடகவியளாலர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இக்கலந்துரையாடலில் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், சுன்னாகத்தை அண்டிய பிரதேச நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் நீரில் கலந்த விவகாரம், பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் பேசப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
படையினர் எமது நிலங்களை விடுவிக்க விரும்ப மாட்டார்கள்: ரணிலிடம் த.தே.கூட்டமைப்பினர் எடுத்துரைப்பு
யாழ்ப்பாணம் வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்படும் என அடையாளப்படுத்தப்பட்ட இடங்கள் எவையும் விடுவிக்கப்படவில்லை.
இந்நிலையில் மீள்குடியேற்றம் தொடர்பில் அரசாங்கம் ஒரு தீர்மானத்தை எடுக்காமல் படையினரிடம் மீள்குடியேற்றத்திற்காக கேட்டுக்கொண்டிருப்பது பொருத்தமற்ற செயற்பாடாகும்.
படையினர் தங்களுடைய பாஷையில் ஒரு கிலோமீற்றர் முன்னரங்கத்தை பின்நகர்த்தியிருக்கிறோம். இரு கிலோமீற்றர் முன்னரங்கத்தை பின்நகர்த்தியிருக்கிறோம் என சொல்வார்களே தவிர, அவர் கள் எங்களுடைய மக்களுடைய நிலங்களை விடுவிக்க விரும்பமாட்டார்கள் எங்கள் நிலத்தை அவர்கள் பொருளாதார வலயமாகவே பயன்படுத்துகிறார்கள்.
மேற்கண்டவாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நேரடியான குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றது.
இன்றைய தினம் யாழ்.மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற மீள்குடியேற்றம் மற்றும் மீனவர் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடலின்போதே கூட்டமைப்பு இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் கூட்டமைப்பு மேலும் குறிப்பிடுகையில்,
1100 ஏக்கர் நிலத்தில் மக்கள் மீள்குடியேற்றப்படுவார்கள் என கூறப்பட்டது. எனினும் வளலாய் பகுதியில் ஒரு மீள்குடியேற்ற அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வசாவிளான் பகுதியில் ஜே.244 கிராமசேவகர் பிரிவில் 260 குடும்பங்கள் மீள்குடியேற வேண்டிய இடத்தில் 22குடும்பங்கள், மீள்குடியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் தேவையற்ற விதமான ஜே.252 கிராமசேவகர் பிரிவினை விடுவித்துள்ளார்கள். இது பொருத்தமற்ற இடம் அங்கே மக்கள் மீள்குடியேற முடியாது அது மக்களுடைய விவசாய நிலங்கள். எனவே ஜே 244 மற்றும் ஜே245 ஆகிய கிராமசேவகர் பிரிவுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்.
மேலும் படையினரிடம் எங்களுடைய மீள்குடியேற்றம் தொடர்பாக கேட்டுக் கொண்டிருப்பதில் எவ்விதமான பயனும் இல்லை. அவர்கள் எங்கள் நிலங்களை விடுவிக்கப் போவதில்லை. பாதுகாப்பு என்ற பெயரில் விவசாயம் செய்கிறார்கள், மாடுகளை வளர்க்கிறார்கள், ஹோட்டல்களை அமைத்திருக்கிறார்கள், ஹோல்ப் விளையாட்டு மைதானங்களை அமைத்திருக்கிறார்கள்.
எனவே எங்களுடைய நிலம் அவர்களுக்கு பொருளாதார வலயம். எனவே அவர்கள் அதனை விடுவிக்கப்போவதில்லை. 
மீள்குடியேற்றம் தொடர்பில் முழுமையான தீர்மானத்தை அரசாங்கம் எடுக்கவேண்டும் என கூட்டமைப்பினர் வலியுறுத்தியிருக்கின்றனர். 
கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பாக.
மேற்படிக் கூட்டத்தில் யாழ்.மாவட்டக் கடற்றொழிலாளர்களும் கலந்து கொண்டு தங்கள் குறைகள் தொடர்பாக சுட்டிக்காட்டியிருந்தனர்.
இதில் குறிப்பாக இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பாக எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை. மாறாக நல்லெண்ணம் என்னும் நிலைப்பாட்டில் மீனவர்களும், இழுவை படகுகளும் விடுவிக்கப்படுகின்றன.
இது ஒருவகையில் அவர்களை அத்துமீறுவதற்கு ஊக்குவிக்கும் ஒரு செயற்பாடாகவே நாங்கள் பார்க்கிறோம். எனவே இந்த நடவடிக்கைகளில் இறுக்கம் வேண்டும். மேலும் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்களினால் எமது மீனவர்கள் பலர் கடன் தொல்லையினால் தலைமறைவாகியிருக்கின்றார்கள், பலர் தற்கொலை செய்யும் நிலையில் உள்ளனர் என சுட்டிக்காட்டினர்.
இதற்குப் பதிலளித்த பிரதமர், இந்த விடயத்தில் இரு நாடுகளுக்கிடையிலும் தொடர்ந்தும் பேச்சு வார்த்தை இடம்பெறுகின்றது. எனவே அனைத்து விடயங்களையும் பேசி ஒரு தீர்மானத்தை எடுப்போம் என தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRbSUlv4D.html


Geen opmerkingen:

Een reactie posten