தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 25 maart 2015

19வது திருத்தத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றுக்கொள்ளப்படும்!- பாராளுமன்றத்தை அரசாங்கமாக மாற்றுவதே எனது தேவையாகும்: பிரதமர்

ஜனவரி 8ம் திகதி சூழ்ச்சித் திட்டம் இடம்பெற்றது தெரியும்! நிரூபிக்க சாட்சிகள் இல்லை!– ராஜித
[ புதன்கிழமை, 25 மார்ச் 2015, 12:09.53 AM GMT ]
கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி அரச விரோத சூழ்ச்சித் திட்டம் இடம்பெற்றதாக உறுதியாகவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற தினமன்று இரவு ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள அரச விரோத சூழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.
எனினும் இந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்கக்கூடிய சாட்சியங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
குறித்த நாளில் சூழ்ச்சித் திட்டம் இடம்பெற்றமை குறித்து எனக்கும், ஜனாதிபதிக்கும் தெரியும். எனினும் அதனை நிரூபிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இராணுவத்தினர் முக்கிய இடங்களில் நிலைநிறுத்தப்பட்டிருந்தனர், எனினும், பாதுகாப்பு மற்றும் மோதல்களை தவிர்க்க இவ்வாறு இராணுவத்தினர் நிலைநிறுத்தபபட்டனர் என ஒருவரினால் சொல்ல முடியும்.
இது தொடர்பில் சட்ட மா அதிபர் மற்றும் பாதுகாப்பு தரப்பு பிரதிநிதிகளும் தங்களது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளனர் என நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
சூழ்ச்சித் திட்டம் மூலம் ஆட்சியை கைப்பற்ற முயற்சிக்கப்படவில்லை என பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

19வது திருத்தத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றுக்கொள்ளப்படும்!- பாராளுமன்றத்தை அரசாங்கமாக மாற்றுவதே எனது தேவையாகும்: பிரதமர்
[ புதன்கிழமை, 25 மார்ச் 2015, 12:30.15 AM GMT ]
19 வது அரசியல் அமைப்பு திருத்தச்சட்ட யோசனை தொடர்பான விவாதம் எதிர்வரும் திகதி ஒன்றில் இடம்பெற்று அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றுக்கொள்ளப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் இந்த யோசனையை நிறைவேற்றிக் கொள்ள சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் நேற்று யோசனையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து பேசும் போது குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை 19வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் பல எதிர்ப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
எனவே அவை தொடர்பில் உயர்நீதிமன்றம் விரைவில் தமது சட்டவிளக்கத்தை வழங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் தேசிய அரசாங்கத்தின் பங்காளிக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர், இந்த யோசனையில் தமது கருத்துக்கள் உள்ளடக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தை அரசாங்கமாக மாற்றுவதே எனது தேவையாகும்: பிரதமர்
தமக்கு அவசியமாக இருப்பது எதிர்வரும் பொது தேர்தலுக்கு பின்னர் முழு பாராளுமன்றத்தையும் அரசாங்கமாக மாற்றுவதே என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பொது நிர்வாக அமைச்சின் அனுசரணையுடன் அரச அதிகாரிகளுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் நிகழ்வு, அலரி மாளிகையில் இன்று இடம்பெற்றது, குறித்த நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிபிட்டுள்ளார்.
பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் முழு பாராளுமன்றத்தையும் அரசாங்கமாக மாற்றுவதற்கான ஒத்திகை நடவடிக்கை தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் கூறியுள்ளார்.
மேலும் இது ஒரு புதிய அனுபவம், மேலும் 1951ஆம் ஆண்டிற்கு பின்னர் இரு கட்சிகளும் இணைந்து செயற்படும் முதல் சந்தர்ப்பம் இதுவெனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRZSUlt5H.html


Geen opmerkingen:

Een reactie posten