தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 24 maart 2015

லண்டனில் உள்ள தமிழர்கள் இனி இலங்கை குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் !

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவரை காணவில்லை !

[ Mar 24, 2015 06:56:37 AM | வாசித்தோர் : 4175 ]
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் ரஷ்யாவில் இலங்கையின் தூதுவராக இருந்த உதயங்க வீரதுங்க, கிழக்கு யுக்ரெய்னில் உள்ள பிரிவினைவாத கிளர்ச்சியாளரக்ளுக்கு ஆயுதவிற்பனை செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு முன்னாள் இலங்கைத் தூதுவர் ஆயுதம் விநியோகித்துள்ளதாக யுக்ரெய்னின் ஜனாதிபதி பெட்ரோ பொரொஷென்கோவின் அரசாங்கம் இலங்கை வெளியுறவு அமைச்சிடம் புகார் செய்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
அரசியல் நியமனமாக ரஷ்யாவுக்கான தூதுவராக பணியாற்றியிருந்த உதயங்க வீரதுங்க, அண்மையில் புதிய அரசாங்கத்தால் நாட்டுக்கு திருப்பி அழைக்கப்பட்டிருந்ததாக இலங்கையின் பிரதி வெளியுறவு அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார். ஆனால், அவர் நாட்டுக்கு திரும்பியதாகத் தெரியவில்லை என்றும் வெளியுறவு அமைச்சினால் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் அஜித் பெரேரா கூறினார்.அவர் காணாமல்போயிருக்கிறார். இலங்கைக்கு வந்ததாகவும் தகவல் இல்லை. உலகில் எங்கிருக்கிறார் என்றும் கூறமுடியவில்லை. அவரைக் காணவில்லை´ என்றார் அமைச்சர் அஜித் பெரேரா.
முன்னாள் ஜனாதிபதியின் நெருங்கிய உறவினர் என்று உதயங்க வீரதுங்க-வை விபரித்த பிரதி வெளியுறவு அமைச்சர், அவர் தொடர்பிலான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டுவருவதாகக் கூறினார். சாதாரணமாக மூன்று ஆண்டுகள் தான் ஒருவர் ஒருநாட்டில் தூதுவராக இருப்பார். ஆனால், இவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய உறவினர் என்ற காரணத்திற்காக, இவருக்கு அதனையும் தாண்டிய வாய்ப்பு கிடைத்திருந்தது´ என்றார் அஜித் பெரேரா. ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவரது கருத்துக்களைப் பெற எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.
http://www.athirvu.com/newsdetail/2672.html

லண்டனில் உள்ள தமிழர்கள் இனி இலங்கை குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் !

[ Mar 24, 2015 01:28:48 PM | வாசித்தோர் : 11035 ]
இலங்கையில் ராகபக்ஷ ஆட்சியில் இருந்தவேளை , கோட்டபாய ராஜபக்ஷ ஒரு அதிரடி உத்தரவை போட்டார். அதன் பிரகாரம் , பொதுவாக வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் இலங்கை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியாது என்பதாகும். இதனால் பல தமிழர்கள் இரட்டை குடியுரிமையை விண்ணப்பிக்க முடியாது தவித்தார்கள். ஒன்பது நாடுகளின் பிரஜைகள் இரட்டைக் குடியுரிமை பெற்றுக் கொள்ள தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் முதல் இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, பிரித்தானியா, ஜப்பான், சுவீடன், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுககளின் பிரஜைகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட உள்ளது. இரட்டைக் குடியுரிமை பெற்றுக்கொள்ள விரும்பும் பிரதம குடியிருப்பாளர் 250,000 ரூபாவினை செலுத்த வேண்டும், அவரது மனைவி 50000 ரூபாவினை செலுத்த வேண்டும், 22 வயதுக்கும் குறைந்த திருமணமாகாத பிள்ளைகள் 50000 ரூபா செலுத்தி இரட்டைக் குடியுரிமையை பெற்றுக்கொள்ள முடியும்.
இரட்டைக் குடியுரிமையை பெற்றுக் கொள்வது தொடர்பில் சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டியது அவசியமானது. இதேவேளை, இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டிருந்த காலப்பகுதியில் 2000 பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டிருந்ததாகவும் இது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
http://www.athirvu.com/newsdetail/2673.html

Geen opmerkingen:

Een reactie posten