தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 23 maart 2015

ஒரே மேடையில் வைத்து சாட்டை அடி கொடுத்துள்ளார் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் !

ரணில் சந்திரிக்கா மற்றும் மைத்திரி ஆகிய மூவரும், திடீரென யாழ் சென்று, அதிரடியாக தமிழர்களை கவரும் வண்ணம் சில வேலைகளில் இறங்கி இருந்தார்கள். அது விபரீதத்தில் போய் முடிந்துள்ளது. அது என்னவென்றால் , வலி வடக்கில் ராணுவத்தினர் கைப்பற்றி வைத்திருந்த சில காணிகள் மீளவும் கையளிக்கப்பட இருந்து. அதனை சாட்டாக வைத்தே இந்த மூவரும் யாழ் சென்றார்கள். பெரும் மேடை அமைத்து , அதில் வைத்து சில பொதுமக்களின் காணிகளை மீளவும் கையளித்தார்கள். குறித்த இந்த விழா நடைபெற்றுக்கொண்டு இருக்கையில், மேடையில் அமர்ந்திருந்த முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஐயா எழுந்து, மீள் குடியேற்றம் என்று கூறுகிறார்கள் ஆனால் ஓசை படாமல் தமிழர்களது வீட்டை இடித்து தள்ளுகிறார்கள் என்று கூறிவிட்டார்.
அனைவரும் ஒரு கணம் திகைத்துப்போனார்கள் ! வலி.வடக்கில் உறுதி அளிக்கப்பட்டது போன்று தமிழ் மக்களது காணிகள் விடுவிக்கப்படவில்லை.அத்துடன் மக்களது காணிகளை விடுவிப்பதாக கூறிக்கொண்டு சத்தமின்றி ஆலயங்கள்,பாடசாலைகள்,தேவாலயங்கள் மற்றும் மக்களது குடியிருப்புக்கள் இடிக்கப்படுகின்றன என்று அவர் பேசி முடிக்க , பெரும் கைதட்டல் கிடைத்தது. இதனை நன்றாக அவதானித்துக்கொண்டு இருந்த சந்திரிக்கா தனது உதவியாளரிடம் ஏதோ கூறினார். அவர் உடனே சென்று , மைத்திரி காதில் ஏதோ ஓதினார். இதனை அடுத்து பேச எழுந்த மைத்திரிபால சிறிசேன, தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் பயம்,பீதி, சந்தேகம் என்பவற்றை நீக்குவதன் மூலமே இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் ஏற்படுத்தமுடியும் என்றார்.
மேலும் விக்கினேஸ்வரன் ஐயா பேசியதற்கு பதில் வழங்கும் வகையில் மைத்திரியின் பேச்சு அமைந்திருந்தது குறிப்பிடத்தக்க விடையம் என்று , இதனை நேரில் பார்த்த அதிர்வின் யாழ் நிருபர் மேலும் தெரிவித்தார். விக்கினேஸ்வரன் இவ்வாறு ஒரே மேடையில் வைத்து குறிப்பிட்டது , சந்திரிக்கா அன் கோவை சற்று அதிருப்த்திக்கு உள்ளாக்கியுள்ளது. கொழும்பு செல்லும் அவர்கள் நிச்சயம் சம்பந்தனுடன் இது தொடர்பாக பேசி விக்கினேஸ்வரனை அடக்கி வாசிக்குமாறு கூறச் சொல்வார்கள் என்று பலரும் பேசிக்கொள்கிறார்கள்.
http://www.athirvu.com/newsdetail/2656.html

Geen opmerkingen:

Een reactie posten