[ செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015, 02:52.58 PM GMT ]
ஐனாதிபதி மைத்திரிபாலவை இன்று சந்தித்த இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர், இதனைத் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டேவிட் டேலி இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார்.
இதன் போதே இது தொடர்பாக பேசப்பட்டுள்ளது.
மேலும் அங்கு இலங்கை மீன்கள் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை நீக்குதல் மற்றும் ஜிஎஸ்பி சலுகையை மீண்டும் வழங்குவது தொடர்பாக கூடிய அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தூதுவர் டேவிட் டேலி இதன்போது ஐனாதிபதியிடம் உறுதியளித்துள்ளார்.
இலங்கை அரசாங்கமானது மனித உரிமைகளை உறுதிப்படுத்தல் மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பல் போன்றவற்றிற்கு முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் இதன் போது இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் பாராட்டுகளைத் தெரிவித்ததாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
தமது ஆதரவாளர்களுக்கு எதிராக அரசியல் பழிவாங்கல்: மஹிந்த
[ செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015, 04:37.48 PM GMT ]
நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் பி பி ஜெயசுந்தர இன்று பல மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
ஹெட்ஜிங் என்ற எரிபொருள் உடன்படிக்கை மூலம் முன்னைய அரசாங்கத்துக்கு சுமார் 200 மில்லியன் ரூபாய்கள் நட்டம் ஏற்படுத்தியமை தொடர்பிலேயே இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
நேற்று மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
அத்துடன் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் அசந்தா டி மெல்லும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
இந்தநிலையில் அரசாங்கம் அரசியல் பழிவங்கலை மேற்கொள்வதாக மஹிந்த ராஜபக்ச, சமய நிகழ்வு ஒன்றின் போது செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
வங்கிக்கணக்குகள் மற்றும் ஊழல்கள் யாவுமே பொய்யான கதைகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல்போன படையினரை மீட்டுக்கொடுங்கள்: சிங்கள உறவுகள்
[ செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015, 04:55.26 PM GMT ]
இது தொடர்பாக தெரியவருவதாவது,
காணாமற்போயுள்ளதாகக் கூறப்படுகின்ற நான்கு கடற்படை சிப்பாய்களைக் கண்டுபிடித்துத் தருமாறு வலியுறுத்தி அவர்களின் உறவினர்கள் இன்று கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் திகதியிலிருந்து முல்லைத்தீவு மற்றும் சுண்டிங்குளம் ஆகிய கடற்படை முகாம்களில் கடமையாற்றிய நிலையில், இந்த கடற்படை சிப்பாய்கள் காணாமல் போயிருந்தனர்.
இதேவேளை, அநுராதபுரம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் S.W.M.சேனாரத்ன முல்லைத்தீவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு அனுப்பியதாகக் கூறப்படும் கடிதம் ஒன்றையும் இதன் போது உறவினர்கள் ஊடகங்களுக்குக் காண்பித்தனர்.
பொலிஸ் மா அதிபரின் வேண்டுகோளுக்கினங்க கெப்பித்திகொல்லேவ உதவி பொலிஸ் அத்தியட்சகர் இது குறித்து விசாரணை செய்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனாலும் கடற்படை சிப்பாய்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அதனை உறுதிப்படுத்துவதற்கு எவ்விதமான சாட்சியங்களும் காணப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு சென்று சிரேஷ்ட உதவி செயலாளரை சந்தித்து காணாமற்போயுள்ள கடற்படை சிப்பாய்கள் தொடர்பில் பொலிஸ் விசாரணை முன்னெடுக்குமாறு எழுத்து மூல வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடந்த 4 ஆண்ட காலமாக காணாமற்போன அதிகாரிகளைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரியபோதிலும் எவ்விதமான பலனும் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyDQVSUko4F.html
Geen opmerkingen:
Een reactie posten