தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 28 maart 2015

மைத்திரி – சந்திரிக்கா தொடர்பாக எஸ் . பியின் லேட்டஸ்ட்.

தோற்போமென அண்ணாவும் தம்பியும் நம்பல்ல..?

மகிந்த ராஜபக்ச தோல்வியடைவார் என்பது முன்னரே தெரிந்திருந்தது. அதனை அவர்களிடம் சொன்னேன். எனினும், மகிந்தவும், அவரது தம்பி பசிலும் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களிற்கு யதார்த்தம் புரியாமல் இருந்தது.
கடந்த அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் தொடர்பில் பல காலமாக அவர்களிற்கு சுட்டிக்காட்டியபடி இருந்தேன். அதனை திருத்திக் கொள்ள எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
அப்படியிருந்தும், அவர்களுடன் இணைந்து தேர்தல் பிரசாரம் செய்ததன் ஒரே நோக்கம், கட்சியை விட்டு விலக வேண்டாம் என மக்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்றுத்தான் என கூறியுள்ளார்.

தம்பி இறந்தும் நாடு திரும்பாத மைத்திரி.

அவருடைய பூதவுடல், எத்துகல்பிட்டியவில் உள்ள அன்னாரது வீட்டில் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது.
தனது நண்பரொருவரினால் கடந்த 26ஆம் திகதி, கோடாரி தாக்குதலுக்கு இலக்கான இவர், இன்று சனிக்கிழமை காலை மரணமடைந்தார். இவர், மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
1972ஆம் ஆண்டு டிசெம்பர் 12ஆம் திகதி, பொலன்னறுவையில் பிறந்த இவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் குடும்பத்தில் இளைய சகோதரராவார்.
பொலன்னறுவை லக்ஷ உயன கனிஷ்ட வித்தியாலத்தில் ஆரம்ப கல்வியை பயின்ற இவர், கம்பஹா உடபில மகா வித்தியாலத்தில் சாதாரண தரம் வரையிலும் பயின்றார்.
அத்துடன் கம்பஹா கலஹிடியாவ மத்திய மகா வித்தியாலயம் மற்றும் பொலன்னறுவை நொபாவௌ மகா வித்தியாலயம் ஆகியவற்றியில் உயர் தரம் பயின்றுள்ளார்.
பொலன்னறுவை ரஜரட்ட பில்டர்ஸ் மற்றும் சில மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட ரஜரட்ட ஹால் தனியார் நிறுவனம் ஆகியவற்றின் உரிமையாளராவார்.
வர்த்ததுறையில் பேசப்படும் ஒருவரான இவர், சமூக சேவையாளர் மட்டுமன்றி ஒரு கொடையாளியாவர்.
அதேவேளை இன்று வெளியான ஜனாதிபதியின் நிகழ்வுகளில் தம்பியின் மரணத்தால் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக இதுவரை தெரியவில்லை..Ms Brother 02Ms Brother 03
சற்றுமுன் வெளியான ஜனாதிபதியின் நிகழ்சிகளின் படி, 
இன்று (சனி) சீனாவில் நடைபெறவுள்ள ஆசியாவின் வருடாந்த போஆ மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஷேட உரையாற்றவுள்ளார்.
ஆசியாவின் அபிவிருத்தி தொடர்பில் அன்னியோன்ய கருத்துக்கள் பரிமாற்றத்தின் மேடையாக கருதப்படும் போஆ மாநாடு சீனாவின் ஹய்னான் பிராந்தியத்தில் இன்று நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் 15 நாடுகளின் அரச தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். மாநாட்டின் தலைவர் முன்னாள் ஜப்பானிய பிரதமரான யஷூவோ புகுடா மாநாட்டை ஆரம்பித்து வைக்கவுள்ளதுடன், பிரதான உரையை சீன ஜனாதிபதி ஷீ ஜின் பின் நிகழ்த்தவுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன சுவீடன் பிரதமரை சந்தித்து கலந்துரையாட உள்ளார்.Ms Brother 01
http://www.jvpnews.com/srilanka/102967.html

மைத்திரி – சந்திரிக்கா தொடர்பாக எஸ் . பியின் லேட்டஸ்ட்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மைதேரிபால சிறிசேன மற்றும் சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோருக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்த எஸ் பி தற்போது ஜனாதிபதி மைத்ரி பால சிறிசேன அவர்களின் நடவடிக்கைகளுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் சேலையை கழட்டி ஓடவிடுவதாக கூறி சர்சையை கிளப்பிமை தொடர்பில் விளக்கம் அளித்துள்ள அவர் சந்திர்க்க தொடர்பான சர்சைகளை  வெளியிட போவதாக குறிப்பிடுவதையே நிர்வனப்படுத்துவ்தாக கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/102970.html

Geen opmerkingen:

Een reactie posten