கடந்த தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான ஆதரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கிய போது எழுத்து மூல ஒப்பந்தத்திற்கு மைத்திரி தரப்புச் சம்மதித்திருந்தது, எனினும் அதனை கூட்டமைப்பின் தலைவர் திரு.இரா.சம்பந்தன் அவர்கள் மறுத்திருந்தார்.
அதன்போது அந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட மைத்திரிபாலா சிறிசேனா, சந்திரிகா குமாரதுங்க மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் திரு. இரா. சம்பந்தனின் செயலால் அதிர்ச்சியடைந்தனர். 60 ஆண்டுகள் இங்கே சிங்கள இனம் உங்களை ஏமாற்றிய பின்புமா நீங்கள் ஒரு எழுத்து மூல ஒப்பந்தத்தை தவிர்க்கிறீர்கள் என திரு. இரா. சம்பந்தனை சந்திரிகா குமாரதுங்க வினாவியுள்ளார்.
இவ்வளவு காலமும் எழுத்தில் போடப்பட்ட எந்த ஒப்பந்தமும் நடக்காதபோது இப்போது மட்டும் ஏன் எழுத்தில் ஒப்பந்தங்கள் தேவைப்படுகின்றது? என்ற கேள்வியை தலைவர் சம்பந்தன் அவர்கள் எழுப்பியதோடல்லாம், நீங்கள் நாட்டில் மாற்றங்களைக் கொண்டு வாருங்கள், நாங்கள் உங்களுக்கு ஆதரவு தருகிறோம்.
நாங்கள் இப்போது உங்களுடன் ஒப்பந்தம் செய்துக்கொண்டால், அது மகிந்தவால் வேறு விதமாகப் பிரச்சாரம் செய்யப்பட்டு அவர் வென்று விடுவார். எனவே நம்பிக்கையோடு செயற்படுவதைத் தான் நாங்கள் விரும்புகின்றோம், எழுத்தில் இருப்பதை விட உங்களின் மனதில் நாங்கள் செய்த உதவியிருந்தால் போதும் எனத் திரு. இரா. சம்பந்தன் அவர்கள் தெரிவித்ததாக கனடாவில் வைத்து கூட்டமைப்பின் வெளிவிவகாரத் தொடர்பாளரான திரு.மா. ஏ. சுமந்திரன் அவர்கள் வெளிப்படையாகத் தெரிவித்தார்.
சுமந்திரன் அவர்களின் கனடா விஜயத்தின் போது கனடாவின் இலங்கை விவகாரம் தொடர்பாக முடிவெடுக்கும் 9 துணையமைச்சு மற்றும் அதிகார வட்டத்திலுள்ள உயர் அதிகாரிகளோடு சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தார்.
மிகவும் காத்திரமாக நீடித்த, திரு. ஏகாம்பரம் சுமந்திரன் அவர்களுடனான கனேடிய அரசின் சந்திப்பில் வட-கிழக்கு வாழ் தமிழர்களின் இனப் பிரச்சினைத் தீர்வில் என்ன நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள் என்ற விடயம் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டிருந்தது.
கனேடிய அரசு தமிழ்த் தலைமைகளுடன் நடத்திய பேச்சுக்களில் வலுவானதாகவும், கனதியானதாகவும் திரு. .ஏ. சுமந்திரன் அவர்களுடனான சந்திப்பு இடம்பெற்றிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyDRZSUlt6J.html
Geen opmerkingen:
Een reactie posten