[ செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015, 01:00.00 PM GMT ]
இது தொடர்பாக தெரிய வருவதாவது,
நீண்டகாலமாக தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றியும் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை என்றும். தமக்கு நிரந்தர நியமனம் கிடைக்க வேண்டும் என்று கோரியே இன்று காலை கிழக்கு மாகாண சபை முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்ட தொண்டர் ஆசிரியர்களை கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், மாகாண சபை உறுப்பினர் துரைரெட்ணமும் சென்று அவர்களுடன் உரையாடியதுடன், அவர்களின் கோரிக்கைகளை ஏற்று ஒரு மாத காலத்துக்குள் நிரந்தர தீர்வொன்றினை பெற்றுத் தருவதாக தெரிவித்துள்ளனர்.
கிண்ணியா பாடசாலையில் மாடிக் கட்டடத்திற்கான அடிக்கல் மாகாண முதல்வரால் நாட்டி வைப்பு
இதேவேளை கிண்ணியா முஜாஹிதா வித்தியாலயத்தின் வருடாந்த விளையாட்டுப்போட்டி நேற்று மாலை 30 கல்லூரியின் அதிபர் எஸ்.எம்.நஜீம் தலைமையில் இடம்பெற்றது.
இவ்விளையாட்டுப் போட்டியில் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் மற்றும் போக்குவரத்து பிரதி அமைச்சர் எம்.எஸ்.தெளபீக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமத், பிரதி அமைச்சர் எம்.எஸ். தெளபீக் ஆகியோரிடம் பாடசாலையின் அதிபர் மற்றும் அபிவிருத்திக் குழுவினர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக பாடசாலையின் தேவை கருதி முதல் கட்டமாக 50 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மூன்று மாடி கட்டிடம் ஒன்றுக்கான அடிக்கல் இடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பாடசாலை மாணவ, மாணவிகளுக்கான பரிசில்களும் பிரதம அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வுக்கு கல்வி அதிகாரிகள் உலமாக்கள் ஊர் பிரமுகர்கள், பொதுமக்கள், பெற்றோர்கள் என்று பலரும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பிரிக்க விடமாட்டோம்: பா.சத்தியலிங்கம்
[ செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015, 01:31.57 PM GMT ]
தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் ஜனன தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகரான தந்தை செல்வாவின் 117 ஆவது ஜனன தினம் இன்று வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் வட மாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகதாரலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர்,
தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பிரிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. ஆனால் மக்களை பல கூறுகளாகப் பிரிப்பதன் மூலம் தங்களுடைய எண்ணங்களை நிறைவேற்றுவதற்கு ஆளும் தரப்பினர் அன்றிலிருந்து இன்று வரை செயற்பட்டு வருகின்றனர். இதன் மூலம் தமது குறிக்கோள்களை இலகுவில் நிறைவேற்றிக்கொள்ள நினைக்கின்றனர்.
எம்மை கூறுபோடும் வேலைத்திட்டத்திற்கு இடமளிக்காது மக்களுக்கான வேலைத் திட்டத்தை தாம் தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளோம் என்று குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmtyDQVSUko3I.html
Geen opmerkingen:
Een reactie posten