[ செவ்வாய்க்கிழமை, 24 மார்ச் 2015, 04:05.55 AM GMT ]
சீனாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் லீயூ ஜியான்கோ அந்நாட்டு ஊடகமொன்றிற்கு இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை சீனாவிற்கு விஜயம் மேற்கொள்வதின் ஊடாக இருநாடுகளின் நட்புறவிலும் புதிய கட்டடத்திற்கு செல்லும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் சீனாவின் முதலீட்டினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் இரு நாடுகளின் பொருளாதார அபிவிருத்தியிலும் முக்கிய பங்கு வகிப்பதாகவும், சீன நிறுவனங்களின் தரத்தை கவனத்திற் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்வேலைத்திட்டங்கள் இரு நாடுகளின் சட்டத்திட்டங்களுக்கும் அமைவாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன அவர் தெரிவித்தார்.
ஆனால் சில பாரிய அபிவிருத்தி திட்டங்கள் குறித்து மீள்பரிசீலனை செய்ய புதிய அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை அவர் வரவேற்றுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சீன விஜயத்தின் போது இலங்கையில் சீனாவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள் குறித்து கலந்தாலேசிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இலங்கையில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் நாட்டின் முதலீட்டு கொள்கையின் நடவடிக்கைகள் கவலையளிப்பதாக தெரிவித்தனர் என சீன பிரதி வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளதுடன், முதலீட்டு கொள்கை சீரானதாக அமைய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRYSUltzG.html
ஐ.நா மனித உரிமைகளின் அறிக்கை ஓகஸ்ட்டில் சமர்ப்பிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 24 மார்ச் 2015, 05:12.28 AM GMT ]
ஜெனீவா மனித உரிமைகள் பேரவை அமர்வின் போது ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் இளவரசர் செய்யத் ராத் அல் ஹுசைன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்த குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணை அறிக்கையை சமர்பிப்பதற்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை கால அவகாசம் வழங்குமாறு தற்போதைய அரசாங்கம் கேட்டு கொண்டிருந்தது.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையமும் இதனை ஏற்றுக்கொண்டு எதிர்வரும் செப்டெம்பரில் சமர்பிப்பதற்கு தீர்மானித்தது.
எனினும் பல்வேறு அரசசார்பற்ற அமைப்புக்கள் மற்றும் மனித உரிமைகள் அமைப்புக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மனித உரிமைகள் பேரவையில் கலந்து கொண்ட அரச சார்பற்ற நிறுவனங்களுடனான கலந்துரையாடலின் போது எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் குறித்த விசாரணை அறிக்கை கையளிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRYSUltzI.html
இலங்கையிலிருந்து தப்பியோடிய பாதாள உலக குழு உறுப்பினர்கள் நாடு திரும்பினர்
[ செவ்வாய்க்கிழமை, 24 மார்ச் 2015, 07:08.35 AM GMT ]
குறித்த பாதாள உலக குழுவினர், பிரபல அரசியல்வாதியின் உதவியுடன் மீண்டும் இலங்கை வந்தடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டுபாய், பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளுக்கு தப்பியோடியிருந்த குறித்த பாதாள உலக குழுவினர்களே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிரபல அரசியல்வாதி ஒருவரின் உதவியுடன் இலங்கை வந்தடைந்து நாட்டிற்குள் பல பிரதேசங்களில் தஞ்சம் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதாள உலக குழுவின் தலைவர், மேல் மாகாண சபை உறுப்பினர் ஒருவரை கொலை செய்வதற்காக திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக அவர் இலங்கை வருவதற்கு குறித்த அரசியல்வாதியின் உதவிகளை இந்நாட்களில் பெற்றுக்கொள்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த கொலைத்திட்டத்திற்காக மேல் மாகாண சபையின் பிரபல அரசியல்வாதி ஒருவர் ஆதரவு வழங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இவர்கள் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடையவர்கள் என்றும் கொலை, குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்றும் குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவிக்கின்றது.
http://www.tamilwin.com/show-RUmtyDRYSUlt0E.html
மக்கள் பிரதிநிதிகளுக்கான ஒழுக்கக் கோவையை ஜனாதிபதியிடம் கையளிக்க பெப்ரல் தீர்மானம்
[ செவ்வாய்க்கிழமை, 24 மார்ச் 2015, 07:55.28 AM GMT ]
மார்ச் 12 பிரகடனம் எதிர்வரும் இரு வாரங்களுக்குள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என அவ் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம், மாகாண சபை, உள்ளூராட்சி சபைகளுக்கு உள்வாங்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் கொண்டிருக்க வேண்டிய பண்புகள், தகைமைகள், பின்பற்ற வேண்டிய ஒழுக்கங்கள் தொடர்பிலான விடயங்கள் குறித்த பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இப்பிரகடனத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆதரவு வழங்குவார் எனவும் அவ் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் இந்த பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டு தேர்தல் சட்டமாக்கப்பட்டால் மாத்திரமே அது குறித்து கவனம் செலுத்த முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய முன்வைத்த கருத்து தொடர்பிலும் ஜனாதிபதிக்கு தெரிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மார்ச் 12 பிரகடனத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் எதிர்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, ஐக்கிய தேசிய கட்சி பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொது செயலாளர் சுசில் பிரேமஜயந்த,
தமிழ் தேசிய கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி இரா.சம்பந்தன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் இராஜாங்க அமைச்சர் ஹஸன் அலி, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஜாதிக ஹெல உறுமய சார்பில் அத்துரலிய ரத்ன தேரர், ஆகியோர் உள்ளிட்ட 15 அரசியல் கட்சிகள் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyDRYSUlt0H.html
19வது அரசியலமைப்பிற்கு சம்பிக்க எதிர்ப்பு - முன்னாள் பிரதமர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு
[ செவ்வாய்க்கிழமை, 24 மார்ச் 2015, 09:16.44 AM GMT ]
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
அதிகாரத்தை தக்கவைத்து கொள்ள முடியாத முதுகெலும்பு இல்லாமல் தேர்தலில் தோற்றுப்போன ஒருவரின் அரசியலமைப்பு சதியே 19வது அரசியலமைப்பு என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
19வது அரசியலமைப்பு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை பலவீனப்படுத்தி பிரதமருக்கு பலத்த அதிகாரத்தை வழங்குகின்றது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட கண்மூடித்தனமான அதிகாரங்களை கட்டுப்படுத்துவதற்காகவே மக்கள் வாக்களித்தனர்.
ஆனால் பிரதமரை நாட்டின் தலைவராக்குவதற்கோ, பாராளுமன்றம் ஜனாதிபதியை விட வலுவாக்குவதற்கோ மக்கள் வாக்களிக்கவில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் 19வது அரசியலமைப்பு திருத்த சட்டத்தில் திடீர் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், இவை மக்களின் தீர்ப்பிற்கு எதிரானவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளதுடன்,
ஜாதிக ஹெல உறுமய அனைத்து கட்சிகளுடனும் இணைந்து 19வது அரசியலமைப்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக வாக்களித்து தோற்கடிக்கும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உறுதிபட கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு
முன்னாள் பிரதமர்களுக்கு பல்வேறு வகையான கொடுப்பனவுகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும்,
இதன்படி அவர்களுக்கு உத்தியோகபூர்வ வாகனம், மற்றும் எரிபொருள் கொடுப்பனவும் வழங்கப்படவுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் இலங்கையின் முன்னாள் பிரதமர்களுக்கு மாதாந்தம் 25 ஆயிரம் ரூபா பணமும் வழங்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் இதன் போது குறிப்பிட்டார்.
எங்களுக்கு மேலே ஒரு குண்டைப் போட்டு கொன்று விடுங்கள்: கிளிநொச்சியில் கதறியழுத தாய்
[ செவ்வாய்க்கிழமை, 24 மார்ச் 2015, 09:52.22 AM GMT ]
காணாமல் போனோரின் உறவுகளால் கிளிநொச்சியில் நேற்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட தாயொருவர், எங்களுக்கு மேலே ஒரு குண்டைப் போட்டு கொன்று விடுங்கள் நாங்கள் எங்களுடைய பிள்ளைகளைத் தேடி வரமாட்டோம் முன்னர் குண்டு போட்டு எல்லாரையும் கொன்றது போல் எங்களையும் கொன்று விடுங்கள் என கதறி அழுதுள்ளார்.
ராஜபக்ச இருந்தார் அவரும் ஒரு முடிவு சொல்லேல்ல. இப்ப மைத்திரிபால வந்திருக்கிறார். அவரும் கூட எங்களுக்க ஒரு முடிவும் சொல்லேல்ல. பிள்ளையள் எங்க இருக்கின்றார்கள் என்று காட்டுங்கோ. நாங்கள் ஆர்ப்பாட்டங்களுக்கோ, கூட்டங்களுக்கோ வரமாட்டோம்.
ஆறு வருடமாக நாங்கள் கண்ணீர் வடித்து போகாத இடமில்லை, கும்பிடாத கடவுள் இல்லை. எங்களுக்கு ஒருவரும் இல்லை. நாங்கள் எல்லாம் அநாதைகளாகப் போய்விட்டோம். தேர்தலுக்கு வரமுதல் சொல்லுறீங்க முதலாவதா காணாமற்போன பிள்ளையள பெற்றோரிட்ட ஒப்படைக்கின்றோம் என்று. பிறகு அது பற்றிய ஒரு கதையும் கதைக்க மாட்டியளாம். எல்லாரும் ஒரே மாதிரித்தான் இருக்கிறீங்கள்.
எங்கட பிள்ளைகளைத் தேடித் தேடி எத்தனை வருசமா நடைபிணங்களாய் அலைஞ்சு திரியிறம். போட்டோ கொப்பி அடிச்சு அடிச்சு எத்தின இடத்தில குடுத்தாச்சு, முகாமில தந்த அரிசி பருப்பை வித்துப் போட்டுக்கூட எங்கட பிள்ளையள ஜோசப் காம்பில பாக்கப் போனனாங்க.
இப்ப எங்களுக்கு ஒண்டும் இல்ல. உழைச்சுத் தாறது அந்த பிள்ளையள் தான். அவங்களும் இல்லாட்டா நாங்கள் ஏன் இருப்பான்? எல்லாரையும் குண்டு போட்டு கொன்றது போல எங்களையும் குண்டு போட்டு கொன்று விடுங்கோ. நாங்கள் எங்கட பிள்ளையளத் தேடி வரமாட்டோம்.” என்று அந்தத் தாய் கதறி அழுதார். “எங்கட பிள்ளையள் வராததால நாங்கள் பயித்தியம் பிடிச்சு அலையிறம். எப்படியாவது சாகிறதுக்கு இடையில எங்கட பிள்ளையள மீட்டு ஒரு முடிவைத் தாங்கோ.” என்று யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக ஒன்று கூடி மனுகையளித்த காணாமற் போனவர்களின் உறவுகள் கதறி அழுதனர்.
“எவ்வளவு காலத்துக்கு இப்படி அலைந்து திரிகிறது. பிள்ளைகளைக் காணாமலேயே செத்துப் போவோமோ என்று பயமாக இருக்கிறது” என்று ஒரு தாய் கண்ணீருடன் கூறினார்.
அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை புலனாய்வாளர்கள் புகைப்படம் எடுத்திருந்தனர். அவ்வாறு எடுத்த ஒருவரை போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த தாயொருவர் ஏசிக் கலைத்தார். “நீயும் தமிழன்தானே.
எங்களை எடுத்து என்ன செய்யப்போகிறாய். அச்சுறுத் தவா பார்க்கிறாய்” என்று அவர் திட்டித்தீர்த்தார். அமைதிப் பேரணி என்று கூறிய போதும் இழப்பைத் தாங்க முடியாது உறவினர்கள் கதறி அழுததைக் காண முடிந்தது.
http://www.tamilwin.com/show-RUmtyDRYSUlt2A.html
Geen opmerkingen:
Een reactie posten