[ செவ்வாய்க்கிழமை, 24 மார்ச் 2015, 01:10.23 AM GMT ]
ஹிக்கடுவையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்தே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தின் போது இருவர் காயமடைந்துள்ளனர்
இந்த சூட்டுச் சம்பவத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன.
மட்டு. பிரதான வீதி விபத்தில் வயோதிபர் பலி
மட்டக்களப்பு கொழும்பு பிரதான நெடுஞ்சாலையின் கிரான் கோரகல்லிமடு பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் வயோதிபர் ஒருவர் பலியாகியுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.
திங்கட்கிழமை இரவு 10.30 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் சித்தாண்டி முருகன் கோயில் வீதியைச் சேர்ந்த சின்னக்குட்டி காசிநாதன் (வயது 65) என்ற வயோதிபரே வானில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
ஓட்டமாவடியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்து கொண்டிருந்த வேன் ஒன்று முதியவரை மோதியதாலேயே இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
சடலம் பிரதேச பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmtyDRYSUltyF.html
தேசப்பற்று என்பது வென்றெடுக்கப்பட்ட சமாதானத்தை தக்க வைத்துக் கொள்வதே ஆகும்: ரவூப் ஹக்கீம்
[ செவ்வாய்க்கிழமை, 24 மார்ச் 2015, 01:42.23 AM GMT ]
தேசப்பற்று என்ற போர்வையில் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தக்கூடாது.
வென்றெடுக்கப்பட்ட சமாதானத்தை தக்க வைத்துக் கொண்டு அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டும்.
பல்வேறு நபர்கள் மொழி தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
இவ்வாறான பிரச்சினைகளை ஏற்படுத்துவது யார் என்பது அம்பலமாகியுள்ளது. இவர்கள் மீளவும் போர் தொடர்பிலான அச்சத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
தேசப்பற்றாளர் என தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் மோசடிகாரர்களின் இறுதி சரணாகதியிடம் தேசப்பற்றை முன்னிலைப்படுத்தி குழப்பங்களை ஏற்படுத்துவதாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது ரவூப் ஹக்கீம் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சி பதவி வழங்கக்கூடாது: கொந்தளிக்கும் இனவாதிகள்
[ செவ்வாய்க்கிழமை, 24 மார்ச் 2015, 01:24.11 AM GMT ]
முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்த்தன, வாசுதேவ நாணயக்கார மற்றும் மேல்மாகாணசபை உறுப்பினர் உதய கம்மன்பில ஆகியோர் கலந்துகொண்ட ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று தேசிய புத்தகசாலை கேட் போர்கூடத்தில் நடைபெற்றது.
இதில் கருத்துத் தெரிவிக்கும்போதே உதய கம்மன்பில இவ்வாறு கூறினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்குவது இனவாதத்தை தோற்றுவிக்கும். கடந்த காலத்தில் அமிர்தலிங்கத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கியதன் மூலம் ஏற்பட்ட விளைவுகள் பற்றி அறிவோம். அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது நல்ல விடயங்களை விட கெட்ட விடயங்களுக்கு கூடுதல் அளுத்தம் கொடுத்து பெரிதாக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கினால் பிரதமரை விட எதிர்க்கட்சித் தலைவரே பிரபலமடைவதுடன், சர்வதேச ரீதியில் எதிர்க்கட்சியின் பிரசாரம் வெற்றியளித் துவிடும். எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படக்கூடாது என அவர் வலியுறுத்தினார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் நிலையில் தினேஷ் குணவர்த்தனவுக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என விமல் வீரவன்ச மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் வலியுறுத்தினர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டாலும், அவர்கள் தேசிய நிறைவேற்று சபையில் அங்கத்துவம் வகிப்பதுடன், அரசாங்கத்துடன் இணைந்து தீர்மானங்களை எடுக்கின்றனர். எனவே இக்கட்சிகளுக்கு எதிர்க்கட்சித் தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டால் அரசாங்கத்தின் செயற்பாடுகளை இவர்கள் கொடுக்க மாட்டார்.
அதேநேரம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிலர் அரசாங்கத்தில் இணைந்திருப்பதால் அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருக்க முடியாது. அவ்வாறு இருந்தாலும் அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளையும் அவர்களால் விமர்சிக்க முடியாது. இரண்டு பக்கத்திலும் கால்களை வைத்துக்கொண்டிருக்க எவராலும் முடியாது. எனவே எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பு வழங்கக்கூடிய பொருத்தமான நபர் தினேஷ் குணவர்த்தனவே என விமல் வீரவன்ச மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் வலியுறுத்தினர்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் சர்ச்சை
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை யார் வகிப்பது என்பது தொடர்பில் பல்வேறு முரண்பாட்டு நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.
குறிப்பாக தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா பதவி வகிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என பல்வேறு கட்சிகள் தெரிவித்துள்ளன.
ஜே.வி.பி பிவித்துரு ஹெல உறுமய, புதிய இடதுசாரி முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இவ்வாறு எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதான கூட்டணி கட்சியான ஸ்ரீலங்கா சுத்நதிர கட்சி ஆளும் கட்சியில் இணைந்து கொண்டு அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அடுத்தபடியாக எதிர்க்கட்சியில் அதிகளவு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு காணப்படுகின்றது.
எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டுமென சில தரப்பினர் கோரியுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமது கட்சிக்கு வழங்குமாறு மஹஜன கட்சி ஜே.வி.பி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கோரியுள்ளனர்.
இதேவேளை தமிழர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்படுவதனை அனுமதிக்க முடியாது என பிவித்துரு ஹெல உறுமய திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
எவ்வாறெனினும் நாடாளுமன்றில் எதிர்க்கட்சியில் பெரும்பான்மை பலத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக் கொண்டிருப்பதனால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் மாற்றம் இடம்பெற வாய்ப்பில்லை என தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmtyDRYSUltyG.html
Geen opmerkingen:
Een reactie posten