[ செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015, 09:58.33 AM GMT ]
இந்த மனுக்களை விசாரிப்பதற்காக மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் பெயரிடப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன், இந்த குழுவின் தலைவராக செயற்படவுள்ளதுடன், சந்திரா ஏக்கநாயக்க மற்றும் பிரியசாத் டெப் ஆகியோரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
19வது அரசியலமைப்பு திருத்த சட்டம் அண்மையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இது நீதிக்கு முரணானது என தெரிவித்து இதுவரை 11 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் குறித்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்த தேவையில்லை என மேலும் நான்கு முனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த மனுக்களே நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன என உயர் நீதிமன்ற தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை 19வது அரசியலமைப்பு திருத்த சட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமானால் சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்த வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய இன்று உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளராக இந்திரகுமார் பிரசன்னா நியமனம்
[ செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015, 10:02.13 AM GMT ]
கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதி தவிசாளருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சபையில் இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எல்.தவம் சமர்ப்பித்தார்.
இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அடங்கலாக 19 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளார்கள்.
பிரேரணைக்கு எதிராக 11 வாக்குகள் கிடைத்துள்ளன. இதன்மூலம் கிழக்கு மாகாண சபையின் புதிய பிரதி தவிசாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்திரகுமார் பிரசன்னா நியமிக்கப்பட்டுள்ளார்
மீண்டும் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட யாழ் மாணவர்கள்
[ செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015, 10:04.58 AM GMT ]
நுண்கலைபீட துறை தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போதிலும் மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நிர்வாக குழு தவறியதையடுத்தே இறுதியாண்டு மாணவர்கள் மீண்டும் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பல்கலைக்கழக நுண்கலை பீடத்தை சேர்ந்த சித்திரமும் வடிவமைப்பும் துறை மாணவர்கள் மூன்றம்ச கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்தும் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாணவர்கள் இந்த மாதத்திலேயெ மூன்று தடவைகள் போராட்டம் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மாணவர்களின் பிரச்சினை தொடர்பில் உரியவர்களுக்கு கலைப்பீடாதிபதி ஊடாக கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ள போதிலும், அந்த கற்கைக்குரிய விரிவுரையாளர்கள் இதுவரை தமது பதிலை வழங்கவில்லை என நுண்கலை பீடத்தின் நடனத்துறை தலைவர் அருட்செல்வி தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDQVSUko2E.html
Geen opmerkingen:
Een reactie posten