[ திங்கட்கிழமை, 23 மார்ச் 2015, 04:34.17 PM GMT ]
இதனைவிடுத்து ஏனைய அரசியல் கட்சியின்கீழ் தாம் போட்டியிடப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் பல அரசியல் கட்சிகள் தமக்கு அழைப்பை விடுத்துவருவதாக மஹிந்த சுட்டிக்காட்டியுள்ளார்.
நாரஹன்பிட்டியவில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் தற்போது தேசிய அரசாங்கம் அல்ல. கூட்டணி ஒன்றே ஆட்சி செய்கிறது. ஏனெனில் ஜேவிபியும் அதில் அங்கம் வகிப்பதாக மஹிந்த குறிப்பிட்டார்.
015இல் பொதுத்தேர்தல் இடம்பெறாமைக்கு அதிக வாய்ப்புக்கள்: ஜோன் செனவிரட்ன
[ திங்கட்கிழமை, 23 மார்ச் 2015, 04:11.53 PM GMT ]
இலங்கையின் செய்தித்தாள் ஒன்றுக்கு செவ்வியளித்துள்ள அவர்,
ஜனாதிபதி பெரும்பாலும் பொதுத்தேர்தல் ஒன்றை நடத்தமாட்டார் என்றே கருதப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். இதற்கு கட்சி என்ற ரீதியில் தாம் உடன்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
100 வேலைத்திட்டத்துடன் ஆட்சியை அமைத்த தேசிய அரசாங்கம் ஏப்ரலில் நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு செல்லப்போவதாக கடந்த ஜனவரியில் அறிவித்திருந்தது.
எனினும் 100 நாட்களுக்கு இன்னும் ஒருமாதமே இருக்கும் நிலையில் நேற்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினரும் அமைச்சரவையில் இணைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்தே பொதுத்தேர்தல் தொடர்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
எனினும் ஐக்கிய தேசியக்கட்சியை பொறுத்தவரை தேர்தல் ஏப்ரலில் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பில் இந்துக்களின் தொன்மையை அழிக்கும் முஸ்லிம் அமைப்புகள்! துணைபோகும் தமிழ் அதிகாரிகள்
[ திங்கட்கிழமை, 23 மார்ச் 2015, 03:49.22 PM GMT ]
இக்கோவிலானது 1697 இல் “அசவிடோ” என்ற போர்த்துக்கேய தளபதியினால் இந்த ஆலயம் முற்றாக அழிக்கப்பட்டதாக வரலாறு கூறுகின்றது.
1980 ஆம் ஆண்டில் மேற்படி ஆலயம் இருந்ததாக கூறப்படும் கோவில்குளம் பகுதியில் காணிகளை துப்பரவு செய்யும் பணிகளில் பொது மக்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது படிக லிங்கம், ஐந்து தலை நாகத்தின் கீழ் அமர்ந்திருக்கின்ற விஸ்ணு சிலை மற்றும் விளக்கின் பாகங்கள், மணி என்பன குழி ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டதனால் குறித்த பிரதேசமானது தொல்பொருள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட பிரதேசமாக பாதுகாக்கப்பட்டன.
ஆனால் குறித்த பிரதேசமானது, கடந்த 10.07.2014 இல் காத்தான்குடி முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் வேலிகள் போடப்பட்டு பள்ளிவாசல் உட்பட முஸ்லிம்களுக்கு 25 வீடுகள் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.
காத்தான்குடி முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் குறித்த நடவடிக்கையைக் கண்டித்தும் குறித்த பிரதேசத்தை தொல்பொருள் ஆய்வு மையமாக பிரகடனப்படுத்தக் கோரியும் ஆரையம்பதி சிவில் அமைப்பினால் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளருக்கு 12.09.2014 இல் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டதனால் முஸ்லிம் சம்மேளனத்தின் கட்டுமானப்பணிகள் நிறுத்தப்பட்டன.
இதன் பின்பு 11.12.2014 இல் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தினால் அரசாங்க அதிபருக்கு முகவரி இடப்பட்டு மண்முனைப்பற்று பிரதேச செயலாளருக்கு பிரதிகள் இடப்பட்டு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது.
குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டதன்படி, மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் நடவடிக்கை எடுக்காது முழுக்க முழுக்க முஸ்லிம் சம்மேளனத்திற்கு சார்பாக செயற்பட்டது மாத்திரமின்றி,
குறித்த பிரதேசத்தினை தொல்பொருள் ஆய்வுக்கு உட்படுத்துவதனை தவிர்ப்பதற்காகவும் மட்டக்களப்பில் இந்துக்களின் தொன்மையினை மறைப்பதற்குமான செயற்பாடுகளையுமே அவர் மேற்கொண்டுள்ளார்.
ஏனெனில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளுகின்ற மையப்பகுதியில் தொல்பொருள் ஆய்வுக்காக 40 பேர்ச் காணியை மாத்திரம் விடுத்து ஏனைய பிரதேசத்தில் தடையின்றி கட்டடங்கள் அமைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளமை அப்பகுதி வாழ் இந்து மக்களிடையே ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதைக் காண்கின்றோம்.
மட்டக்களப்பில் இந்துக்களின் தொன்மையினை உலகிற்கு பறைசாற்றுகின்ற தொழ்பொருள் மையங்களை அழிக்கும் செயற்பாட்டினை முஸ்லிம் சம்மேளனங்கள் உடனடியாகக் கைவிட்டு இந்து இஸ்லாம் மக்களிடையே ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்துவதற்கு முன்வர வேண்டுமென மத ஒற்றமையை வலியுறுத்துகின்ற தமிழ்- முஸ்லிம் அறிஞர்கள் வேண்டுகோள விடுக்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmtyDRXSUls7F.html
Geen opmerkingen:
Een reactie posten