[ திங்கட்கிழமை, 30 மார்ச் 2015, 01:46.33 AM GMT ]
புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டதனைத் தொடர்ந்து அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்ட தூதுவர்கள், உயர்ஸ்தனிகர்கள் மீள அழைக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறு மீள அழைக்கப்பட்ட 28 நாடுகளுக்கான இலங்கைத் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் பதவிகள் இன்னமும் வெற்றிடமாக காணப்படுகின்றன.
குறித்த வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்றக் குழு ஒன்றின் மூலமே ராஜதந்திரிகளுக்கான அனுமதி வழங்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
ரஷ்யக் கடற்படைக் கப்பல்கள் மூன்று கொழும்புத் துறைமுகத்தில்
[ திங்கட்கிழமை, 30 மார்ச் 2015, 02:19.25 AM GMT ]
அட்மிரல் பன்ரெலீவ், பெசெங்கா, எஸ்.பி-522 ஆகிய கப்பல்களே, கடந்த 28ம் நாள் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளன.
மாலுமிகள் ஓய்வெடுப்பதற்காகவும், விநியோகத் தேவைகளுக்காகவுமே, இவை கொழும்பு வந்துள்ளதாக, இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இந்தக் கப்பல்கள் வரும் ஏப்ரல் 1ம் நாள் வரை கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, திருக்கோணமலைத் துறைமுகத்தில் இந்தியக் கடற்படையின் நான்கு கப்பல்கள் தரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் படையினர் வலுப்படுத்தப்பட வேண்டும்: பிரதமர்
[ திங்கட்கிழமை, 30 மார்ச் 2015, 02:37.46 AM GMT ]
வடக்குக்கான விஜயத்தின்போது பலாலியில் வைத்து அவர் இதனை வலியுறுத்தினார்.
இந்த அடிப்படையில் தரைப்படை, விமானப்படை மற்றும் கடற்படை என்பன நவீனமயப்படுத்தப்பட வேண்டும் என்று ரணில் குறிப்பிட்டார்.
ஆசிய பிராந்தியத்தில் 2025ஆம் ஆண்;டளவில் ஏற்படப்போகும் அச்சுறுத்தல்களை சமாளிக்க புதிய திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
படையினரை வலுப்படுத்தும் அதேநேரம் இலங்கையில் பொருளாதார வளர்ச்சியும் முன்னோக்கிச்செல்லவேண்டும் என்றும் ரணில் கேட்டுக்கொண்டார்.
எனவே பழையவற்றை பார்க்காமல் எதிர்காலத்தை பற்றி சிந்திக்க வேண்டும் என்று அவர் படையினரிடம் கோரிக்கை விடுத்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyDQUSUlx1B.html
Geen opmerkingen:
Een reactie posten