[ சனிக்கிழமை, 28 மார்ச் 2015, 12:22.09 AM GMT ]
வடக்கு கிழக்கு போரை முடிவுறுத்திய போது கடமையில் ஈடுபட்டிருந்த கடற்படை மற்றும விமானப்படை தளபதிகளுக்கு இராணுவத் தளபதிகளுக்கு வழங்கப்பட்டதனைப் போன்றே உயர் பதவி வழங்கப்படுவது சரியானதே.
முன்னாள் கடற்படைத் தளபதியும், விமானப்படைத் தளபதியும் போரை முடிவுக்குக் கொண்டு வர பங்களிப்பு செய்துள்ளார்கள் என்பதனை நாம் மறந்துவிடக் கூடாது.
முன்னாள் கடற்படைத் தளபதியும், விமானப்படைத் தளபதியும் போரை முடிவுக்குக் கொண்டு வர பங்களிப்பு செய்துள்ளார்கள் என்பதனை நாம் மறந்துவிடக் கூடாது.
இதன்படி, முன்னாள் விமானப்படைத் தளபதி ரொசான் குணதிலக்கவிற்கு மார்ஸல் ஒப் த எயார்போஸ் மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு அட்மிரால் ஒப் த பீல்ட் பதவிகள் வழங்குவது பொருத்தமானது என ஜோன் அமரதுங்க கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRcSUlv6F.html
இரத்தினபுரி கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு எதிராக தற்போதைக்கு நடவடிக்கை இல்லை!– அனுர பிரியதசன யாபா
[ சனிக்கிழமை, 28 மார்ச் 2015, 12:31.01 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்குமாறு கோரி இரத்தினபுரில் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்கக் கூடாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. எனினும் உத்தரவினை மீறி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
கூட்டத்தில் பங்கேற்கக் கூடாது என சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்திருந்தது. இந்த தீர்மானம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.
கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானம் ஒன்றை எடுத்தால் அதன் அடிப்படையில் செயற்பட வேண்டியது அனைத்து உறுப்பினர்களினதும் கடமையாகும்.
மத்திய செயற்குழுவின் தீர்மானத்திற்கு விரோதமான முறையில் செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும் என அனுர பிரியதர்சன யாப்பா, கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRcSUlv6G.html
Geen opmerkingen:
Een reactie posten