[ சனிக்கிழமை, 28 மார்ச் 2015, 10:42.35 AM GMT ]
இந்தியாவிலிருந்து வெளிவரும் பத்திரிகையொன்றின் ஆசிரியர் தலையங்கத்திலேயே இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு ஒரு வாரத்திற்குள்ளேயே இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை இதனையே அறிவுறுத்துவதாக அப்பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வெற்றி பெற்ற மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் அண்மைக்காலமாக மேற்கொண்ட நடவடிக்கைகள் சீனாவுக்கு எதிரானவையாக காணப்பட்டன.
அதாவது 1.4 பில்லியன் டொலர் செலவில் சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்படும் கொழும்பு துறைமுக நகர் திட்டத்தின் நிர்மாண பணிகள் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டமை அதனை குறிப்பிடுகின்றது.
இந்நிலையில் இலங்கையின் புதிய அரசாங்கம் இந்தியாவுக்கு சமனாக சீனாவுடனும் உறவை பேணும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுப்பட்டு வருகின்றது என அப்பத்திரிகை மேற்கோள் காட்டியுள்ளது.
ஐ.நா மனித உரிமை கூட்டத் தொடருக்கு முன் பொதுத்தேர்தலை நடத்த அரசாங்கம் முயற்சி
[ சனிக்கிழமை, 28 மார்ச் 2015, 10:50.55 AM GMT ]
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டத் தொடருக்கு முன்னர் கட்டாயம் பொதுத் தேர்தலை நடத்துவது என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தொகுதிவாரி முறையில் இந்த பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ளதுடன் தொகுதிகளை நிர்ணயம் செய்யும் பணிகளை துரிதமாக முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தலை நடத்துவது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் புதிதாக, பதவியேற்றுக்கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களுக்கு இடையில் அண்மையில் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றது.
பொதுத் தேர்தலுக்கு முன்னர் நடத்தப்படும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலும் தொகுதிவாரி அடிப்படையில் நடத்தப்பட உள்ளது. உள்ளூராட்சி சபைகளுக்கான தொகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டு அது தொடர்பான அறிக்கை கடந்த அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்ட போதிலும் அது செயற்படுத்தப்படவில்லை.
எவ்வாறாயினும் பொதுத் தேர்தலுக்கான தொகுதிகளை நிர்ணயம் செய்வது தனியாக மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கு சுமார் இரண்டு மாத காலம் தேவைப்படும் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், புதிதாக பதவியேற்றுக்கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் தமது தொகுதிகளின் மறுசீரமைப்பு பணிகளை துரித்தப்படுத்த வேண்டிய தேவை குறித்தும் ஜனாதிபதியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
எது எப்படி இருந்த போதிலும் எதிர்வரும் ஜ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடருக்கு முன்னதாக பொதுத் தேர்தலை நடத்தி விட்டு அந்த மாநாட்டில் கலந்து கொள்வது அத்தியவசியாமானது எனவும் இதன் போது வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான நிலைமையில், எதிர்வரும் ஜூன் மாதத்திற்கு முன்னர் நாடாளுமன்றத்தை கலைக்க வாய்ப்பில்லை என சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRcSUlw0J.html
தேசிய நிறைவேற்றுச் சபையில் அங்கம் வகிப்பதா இல்லையா: ஜே.வி.பியின் தீர்மானம் 31 ஆம் திகதி
[ சனிக்கிழமை, 28 மார்ச் 2015, 10:52.27 AM GMT ]
நிறைவேற்றுச் சபையில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் எடுத்த தீர்மானங்கள் 19வது திருத்தச் சட்டத்தில் நீக்கப்பட்டுள்ளமை, தேர்தல் முறையிலும் அரசியலமைப்பிலும் திருத்தங்களை ஒரே நேரத்தில் மேற்கொள்ள வேண்டும் என்று முன்வைக்கப்படும் கோரிக்கைக்கு பின்னால், அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் இருப்பதாக ஜே.வி.பி சந்தேகம் வெளியிட்டுள்ளது.
இது குறித்து அடுத்த நிறைவேற்றுச் சபைக் கூட்டத்தில் ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கேள்வி எழுப்ப உள்ளார்.
அப்போது ஏற்படும் நிலமைகளுக்கு அமைய சபையில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் ஜே.வி.பி குறிப்பிட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைச்சபையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எதனை முதன்மைப்படுத்தியது?
[ சனிக்கிழமை, 28 மார்ச் 2015, 11:44.09 AM GMT ]
இராஜதந்திரத்தளம், மனித உரிமைத்தளம், மக்கள்தளம், பரப்புரைத்தளம், ஊடகத்தளம் என பன்முகத்தளத்தில் இதன் செயற்பாடுகள் அமைந்திருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் ஐ.நா மனித உரிமைச்சபை உரையின் பொய்மைத்தன்மையினை அம்பலப்படுத்தி, நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் வெளியிட்ட பதிலறிக்கை இக்கூட்டத் தொடரில் முக்கியமானதாக அமைந்திருந்நதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் ஐ.நாவை பாராப்படுத்தக் கோரும் வகையில் பத்து இலட்சம் கையெழுத்துக்களை திரட்டு இயக்கம், நியூயோhக்கில் உள்ள ஐ.நா தலைமையகத்துக்கு முன்னாலும், ஜெனீவா-ஐ.நா மனித உரிமைச்சபைக்கு முன்னாலும் தொடங்கி வைக்கப்பட்டது முக்கியமான செயல்முனைப்பாக அமைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைச்சபையில் ஒவ்வொரு கூட்டத் தொடரிலும் வெளியிடப்படுவது போல் இம்முறையும் *Refer Sri Lanka to International Criminal Court *எனும் தலைப்பில் கையேடு வெளிக்கொண்டு வரப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyDRcSUlw1G.html
Geen opmerkingen:
Een reactie posten