தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 31 maart 2015

ரணிலின் துப்பாக்கி சூட்டு கருத்தை இலங்கை மீனவர் தலைவர் வரவேற்பு - இந்தியாவின் யாழ், துணைத்தூதர் நடராஜன் மீனவர்கள் சந்திப்பு



பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பு பேரணி மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்
[ செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015, 12:12.02 PM GMT ]
பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட எதிர்ப்பு பேரணி மீது பொலிஸார் கண்ணீர்புகைக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இருந்து இப் பேரணி ஆரம்பிக்கப்பட்டு கொள்ளுப்பிட்டி சந்தியை அடைந்த வேளை பொலிஸார் தண்ணீரை பீச்சியடித்தும், கண்ணீர்ப்புகை பிரயோகம் செய்தும் பேரணியை கலைக்க முற்பட்டுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இதேவேளை கொழும்பு - கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைதிப் பேரணியில் ஈடுபட்டிருந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் 5 மாணவர்கள் காயமடைந்துள்ளதுடன், நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலைமையை அடுத்து தற்போது இந்தப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் தற்போதும் 500ற்கும் மேற்பட்ட மாணவர்கள் அங்கு கூடியிருப்பதாகவும், கலகத் தடுப்பு காவற்துறையினர் அந்த பகுதியில் குவிக்கப்பட்டிருப்பதாகவும் கொழும்பிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmtyDQVSUko3D.html


ரணிலின் துப்பாக்கி சூட்டு கருத்தை இலங்கை மீனவர் தலைவர் வரவேற்பு - இந்தியாவின் யாழ், துணைத்தூதர் நடராஜன் மீனவர்கள் சந்திப்பு
[ செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015, 01:41.14 PM GMT ]
இலங்கை கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்படுவதை நியாயப்படுத்திய இலங்கை மீனவர்கள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கருத்தை வரவேற்றுள்ளனர்
சட்டத்தின் அடிப்படையிலேயே இலங்கை கடற்படையினர், இலங்கை கடற்பரப்பில் நுழையும் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதாக ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டிருந்தார்.
யாராவது எனது வீட்டை உடைக்க முற்பட்டால் என்னால் சுட முடியும். சட்டம் அதற்கு என்னை அனுமதித்துள்ளது என்பதே ரணிலின் தர்க்கமாக அமைந்திருந்தது.
இந்தநிலையில் இலங்கை பிரதமரின் கருத்தை தாம் வரவேற்பதாக வடமாராட்சி மீனவர் சம்மேளன தலைவர் வி அருள்தாஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைத்துள்ள அவர்,
இந்திய அரசாங்கம் தமது கடற்பகுதியில் 40 நாள் மீன்பிடித்தடையை அறிவித்துள்ளது.
இந்தநிலையில் இந்ததடையின் பின்னர் இந்திய மீனவர்கள் தமது கடற்பகுதியில் இழுவைப் படகுகளை கொண்டு மீன்பிடியில் ஈடுபடமுடியும்.
இதனைவிடுத்து அவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் வந்து மீன்வளங்களை நாசமாக்குகின்றனர் என்று அருள்தாஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தநிலையில் தொடருமானால் இலங்கையின் வடக்கில் உள்ள மீனவர்கள் தற்கொலை செய்துகொள்ள நேரிடும் என்றும் அருள்தாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை கடந்த வாரம் சென்னையில் இடம்பெற்ற இரண்டு நாட்டு மீனவர்கள் சந்திப்பின்போது வருடத்தில் 83 நாட்கள் இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் தொழிலில் ஈடுபட இலங்கை பிரதிநிதிகள் இணக்கம் வெளியிட்டிருந்தனர்.
எனினும் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டால் அதனை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் பாரிய இழுவைப் படகுகளை கொண்டு இலங்கையின் மீன்வளங்களை அழித்து விடுவார்கள் என்று அருள்தாஸ் அச்சம் வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் யாழ்ப்பாணத் துணைத்தூதர் நடராஜன்  கட்டைக்காடு மீனவர்கள் சந்திப்பு
இந்தியாவின் யாழ்ப்பாணத் துணைத்தூதர் நடராஜன் கடந்த ஞாயிற்றுக்கிழமை கட்டைக்காட்டிற்கு, அப்பகுதி கடற்றொழிலாளர்களின் அமைப்புக்கள் வேண்டிக்கொண்டதற்கு இணங்க விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் பா.உறுப்பினர் சி.சிறீதரனின் ஒழுங்குபடுத்தலில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இந்த விஜயத்தின் பொழுது துணைத்தூதர் நடராஜன் கட்டைக்காடு கடற்பரப்புக்களை அவதானித்ததுடன், தாழையடி தொடக்கம் கட்டைகாடு வரையான வீதிகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தியுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் இந்திய இழுவைப்படகுளால் வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கள், சிரமங்கள் குறித்து நட்பு அடிப்படையில் வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகளால் எடுத்துக் கூறப்பட்டது.
இதற்கு பதிலளித்த இந்த விடயங்கள் தொடர்பாக தமிழ்நாட்டு மீனவர் சங்க பிரநிதிகளுடன் கலந்துரையாடப்படும் என நம்பிக்கை வெளியிட்டார்.
இந்தச் சந்திப்பின் போது பா.உறுப்பினர் சி.சிறீதரன், கட்டைக்காடு கிழக்கு கடற்றொழிலாளர் சங்க சமாச தலைவர் பிறேம்குமார், கட்டைக்காடு பங்குத்தந்தை,  கட்டைக்காடு  கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் எட்வேட், வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகள், வடமாகாண சபை உறுப்பினர் ஆனல்ட், பருத்தித்துறை பிரதேசபை தலைவர் சஞ்சீவன், பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் மாலினி, வடமராட்சி கிழக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு அமைப்பாளர் சூரியகாந், கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணி தலைவர் சுரேன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmtyDQVSUko3J.html

Geen opmerkingen:

Een reactie posten