[ வியாழக்கிழமை, 05 மார்ச் 2015, 10:13.49 AM GMT ]
இந்திய பிரதமரின் இவ்விஜயத்தின் போது இராணுவ உதவிகள் உள்ளிட்ட பலவகையான உதவிகளை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 வருடங்களின் பின்னர் இலங்கைக்கு இந்திய பிரதமர் ஒருவர் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சீனா இந்த சிறிய தீவுகளில் துறைமுகங்கள், மின்நிலையங்கள், வீதிகளை அமைத்துள்ளதுடன் அதன் கடற்படையும் இந்து சமுத்திரத்திற்குள் தனது சுயலாபம் கருதி ஆழமாக ஊடுருவியுள்ளது.
இந்நிலையில் கடந்த வருடம் இலங்கை துறைமுகத்திற்குள் சீனாவின் நீர்மூழ்கி கப்பல்கள் நங்கூரமிட்டமை இந்தியாவை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதனால் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் தொடர்ந்தும் விரிசல் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியா இந்த தீவுகளுடன் பாதுகாப்பு உறவுகளை நெருக்கமாக்குவதினால் அவற்றை தனது அரவணைப்பிற்குள் கொண்டு வர தீர்மானித்துள்ளது என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது இலங்கையுடன் பாதுகாப்பு ஒத்துழைப்புக்களை தீவிரப்படுத்துவார் எனவும், திருகோணமலையில் ஏற்படுத்தப்படவுள்ள மின் நிலையத்திற்கான இறுதி அங்கீகாரத்தை வழங்குவார் எனவும் குறித்த செய்தி சேவை தெரிவித்துள்ளது.
அத்துடன் இலங்கைக்கு வழங்கப்படும் இராணுவ பயிற்சியை மேலும் தரமுயர்த்துவது குறித்தும் இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
ரணிலுக்கு 100 நாட்கள் மட்டுமே பிரதமராக இருக்க முடியும்: ஜே.வி.பி
[ வியாழக்கிழமை, 05 மார்ச் 2015, 12:15.26 PM GMT ]
மகரகம நகரில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ரணில் அரசாங்கத்தை அமைக்க மக்கள் வாக்களிக்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சு பதவிகளை பெற மக்கள் ஆணை வழங்கவில்லை.
தேர்தல் நேரத்தில் வழங்கிய வாக்குறுதியின்படி கூடியளவில் ரணில் விக்ரமசிங்கவுக்கு 100 நாட்கள் மாத்திரமே பிரதமராக பதவி வகிக்க முடியும்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் 41 உறுப்பினர்கள் மாத்திரமே உள்ளனர். குறைந்த உறுப்பினர்களை வைத்து கொண்டு ரணில் விக்ரமசிங்க பிரதமராக முடியாது. ரணில் – மைத்திரி இணக்கமே இந்த இடத்தில் உள்ளது.
100 நாட்களின் பின்னர் நாடாளுமன்றத்தை கலைக்கவில்லை என்றால் ரணி்ல் விக்ரமசிங்க பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
2010 ஆம் ஆண்டில் மக்கள் வழங்கிய ஆணையின்படி இந்த நாடாளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை செயற்பட முடியுமா?. 2010 ஆம் ஆண்டு வழங்கிய ஆணை தற்போது செல்லுபடியாகாது.
தற்போதைய நாடாளுமன்றம் நேர்மையானது அல்ல. 2010 ஆம் ஆண்டில் எதிர்க்கட்சியில் போட்டியிட்டு அரசாங்கத்திற்கு சென்ற ஹக்கீம் போன்றவர்கள் இந்த நாடாளுமன்றத்தில் உள்ளனர்.
2010 ஆம் ஆண்டு ரணிலுக்கு பிரதமராகும் மக்கள் ஆணை கிடைக்கவில்லை. 2010 ஆம் ஆண்டு மக்கள் வழங்கிய ஆணை திரிபுபட்டுள்ளது. இதனால், புதிய நாடாளுமன்றத்தை தெரிவு செய்ய மக்களுக்கு சந்தர்ப்பத்தை கொடுக்க வேண்டும்.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ 2010 ஆம் ஆண்டு சாராய முதலாளி அல்ல. ஆனால் தற்போது சாராய முதலாளி. ஜகத் புஷ்பகுமாரவை மாட்டுத் திருடன் என்று அப்போது கூறவில்லை, ஆனால் தற்பொழுது கூறுகின்றனர்.
2010 இல் ஹெரோயினை கொண்டு வராத நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது அதனை நாட்டுக்குள் கொண்டு வருகின்றனர். அன்று மேர்வின் சில்வா அரச ஊழியர்களை மரத்தில் கட்டவில்லை. இன்று அரச ஊழியரை மேர்வின் மரத்தில் கட்டிவைத்தவர்.
ரோஹித்த அபேகுணவர்தன அப்போது இலஞ்சம் ஊழல் ஆணைக்குவிற்கு அழைக்கப்படவில்லை. தற்போது ஆணைக்குழுவிற்கு அழைத்ததால், அவர் பாம்பு தீண்டியவர் போலாகியுள்ளார். இதனால், புதிய நாடாளுமன்றத்தை தெரிவு செய்ய மக்களுக்கு உரிமை உள்ளது எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
ஈழப்பிரச்சினை! முன்பைவிட கொஞ்சம் கூடுதலாகத் துரோகம் செய்கிறது மோடி அரசு! வைகோ
[ வியாழக்கிழமை, 05 மார்ச் 2015, 11:19.59 AM GMT ]
இலங்கையில் புதிதாக வந்த சிறிசேன அரசோடு சேர்ந்துகொண்டு இந்த மோடி அரசாங்கம் செய்யும் பச்சைத் துரோகத்துக்கு உதாரணம்தான், இலங்கையில் நடந்த இனப்படுகொலை பற்றி, ஐ.நா சமர்ப்பிக்கும் அறிக்கையை ஆறு மாதங்கள் ஒத்திப்போட்ட விவகாரம் என வைகோ கொந்தளிக்கிறார்
இது குறித்து ஆனந்த விகடன் சஞ்சிகையில் வெளிவந்துள்ள சில முக்கிய பகுதிகள்
கேள்வி - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்திருக்கிறீர்களே..?
பதில் - மன்மோகன் சிங் இந்தியப் பிரதமராகக் கொண்டுவந்த திட்டங்கள் பலவற்றை நான் கடுமையாக விமர்சித்துள்ளேன்.
ஆனால், மன்மோகன் சிங் என்ற மனிதர் மீது எனக்கு அளவு கடந்த மரியாதை உண்டு.
அவர் கல்லூரிப் பேராசிரியராக இருந்தபோது, மாணவர்களை சைக்கிள் கேரியரில் வைத்து அழைத்துச்செல்வார்’ என்பார்கள். அப்போது முதலே அவர் எனக்கு ஆதர்சம்.
அதனால் அவரைச் சந்தித்தேன். 'இலங்கையில் இப்போது என்ன நடக்கிறது?’ என என்னிடம் கேட்டார். 'கொடுமைகள் இன்னும் அதிகரித்துள்ளன’ என்றேன்!''
கேள்வி - நரேந்திர மோடி பிரதமராக வரவேண்டும் என விரும்பி, அந்தக் கூட்டணியில் இடம்பெற்று, அதற்காகப் பிரசாரம் செய்தீர்கள். பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி எப்படி இருக்கிறது?
கேள்வி - நரேந்திர மோடி பிரதமராக வரவேண்டும் என விரும்பி, அந்தக் கூட்டணியில் இடம்பெற்று, அதற்காகப் பிரசாரம் செய்தீர்கள். பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி எப்படி இருக்கிறது?
பதில் - நரேந்திர மோடி அரசைப்போல மிக மோசமான அரசை இந்தியா இதுவரை சந்தித்தது இல்லை. அதை மக்கள் புரிந்துகொண்டுவிட்டனர். அதனால்தான், டெல்லி சட்டமன்றத் தேர்தலில், அந்த மக்கள் விளக்குமாற்றால் கூட்டிப்பெருக்கி பாரதிய ஜனதாவை வரலாற்றுக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டனர்.
கேள்வி - ஈழப் பிரச்சினையிலேனும் மோடி அரசாங்கத்தின் நிலைப்பாடு மாறியிருக்கிறதா?
கொஞ்சம் மாறி இருக்கிறது. முன்பைவிட கொஞ்சம் கூடுதலாகத் துரோகம் செய்கிறார்கள். அதுதான் அந்த மாற்றம்!
புதிதாக வந்த சிறிசேன அரசோடு சேர்ந்துகொண்டு இந்த மோடி அரசாங்கம் செய்யும் பச்சைத் துரோகத்துக்கு உதாரணம்தான், இலங்கையில் நடந்த இனப்படுகொலை பற்றி, ஐ.நா சமர்ப்பிக்கும் அறிக்கையை ஆறு மாதங்கள் ஒத்திப்போட்ட விவகாரம். எனபதிலளித்துள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் திரு வைகோ அவர்கள்.
http://www.tamilwin.com/show-RUmtyDTZSUmq0C.html
Geen opmerkingen:
Een reactie posten