[ வியாழக்கிழமை, 05 மார்ச் 2015, 01:53.05 PM GMT ]
பஸ்களில் அழைத்து வரப்பட்டவர்களை கழித்தால் கூட்டத்திற்கு வந்த உண்மையான எண்ணிக்கை இதுதான் எனவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக நுகேகொடையில் நடந்த கூட்டத்திற்கு 5 லட்சம் மக்கள் வந்தாக விமல் வீரவன்ஸ உள்ளிட்டவர்கள் கூறி வருகின்றனர்.
எனினும் வேலைகளுக்கு சென்றவர்கள், வேறு தேவைகளுக்காக வந்தவர்கள் நுகேகொடை நகரில் இருந்து செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டதால், கூட்டத்திற்கு வந்த மக்களாக அவர்களும் கருதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை நபர்களால் பிடிக்கப்பட்ட 7 தமிழக மீனவர்கள் விடுவிப்பு!
[ வியாழக்கிழமை, 05 மார்ச் 2015, 01:10.14 PM GMT ]
நாகை மாவட்டம், கோடியக்கரையில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை 200க்கும் மேற்பட்ட மீனவர்கள் நாட்டுப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
இவர்கள் மீன்பிடித்து விட்டு நேற்று புதன்கிழமை கோடியக்கரை கடற்கரை பகுதிக்கு திரும்பினர். இதில் பாம்பனை சேர்ந்த மைக்கேல் என்பவரது நாட்டுப்படகு மட்டும் கரை திரும்பவில்லை.
இந்த நாட்டுப்படகில் பாண்டி, செல்வம், மாரிசெல்வம், மாணிக்கம், முனியசாமி, அகஸ்டின், பூரணம் ஆகிய 7 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.
இவர்கள் கரை திரும்பாத நிலையில் மீனவர்கள் கொண்டு சென்ற செல்போனுக்கு படகின் உரிமையாளர் மைக்கேல் தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது எதிர்முனையில் இருந்து இலங்கை நபர் ஒருவர் பேசியிருக்கிறார். அந்த நபர் ‘‘உங்க படகை நாங்கதான் பிடிச்சு வச்சிருக்கோம். பணம் கொடுத்தால் மட்டுமே விடுவிப்போம். காலை 10 மணிக்கு வங்கி கணக்கு எண்ணை சொல்வோம். நீங்கள் பணம் போட்ட பின்புதான் படகையும், மீனவர்களையும் விடுவிப்போம்’’ எனக் கூறியுள்ளார்.
இதனால் பதட்டமடைந்த படகின் உரிமையாளர், இது குறித்து காவல்துறை மற்றும் புலனாய்வு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், இலங்கை நபர்களால் பிடித்து செல்லப்பட்ட 7 மீனவர்களும் விடுவிக்கப்பட்டு விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.
மீனவர்களிடம் இருந்த வலைகளை பறித்து கொண்ட அவர்கள், மீன்பிடி சாதனங்கள் மற்றும் வழிகாட்டும் கருவிகளை சேதப்படுத்தியதுடன், 7 மீனவர்களையும் தாக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும், விடுவிக்கப்பட்ட மீனவர்கள் கோடியக்கரைக்கு திரும்பி கொண்டிருப்பதாக பாம்பன் நாட்டுப்படகு மீனவர் சங்க நிர்வாகி எஸ்.பி.ராயப்பன் தெரிவித்துள்ளார்.
தொடர்புபட்ட செய்தி - தமிழக மீனவர்களை சிங்கள மீனவர்கள் சிறைப்பிடித்துள்ளதாக தகவல்: மறுக்கும் கடற்படை
http://www.tamilwin.com/show-RUmtyDTZSUmq0H.html
Geen opmerkingen:
Een reactie posten