தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 18 maart 2015

பிரபாகரனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது !

புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது என்றும், பின் தலையில் சுடப்பட்ட காரணத்தால் தான் அவர் இறந்தார் என்றும் சனல் 4 கின் ஊடகவியலாளர் காலம் மக் ரே அவர்கள் தெரிவித்துள்ளதாக சில செய்திகள் வெளியாகிபரபரப்பை தோற்றுவித்துள்ளது.. மக்கள் மத்தியில் பாரிய குமுறல்களை ஏற்படுத்தக்கூடிய இவ்வாறான பெய்யான செய்திகளை , மேலும் சில இணையங்கள் எடுத்து வெளியிட்டுள்ளது. உண்மையில் நடந்தது என்ன என்று காலம் மக் ரே அவர்கள் அதிர்வு இணையத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.
லண்டனை தளமாக கொண்டு இயங்கும் , மற்றும் தனிப்பட்ட நபர் ஒருவரால் நடத்தப்படும் இணையத்தில் தான் இச்செய்தி முதலில் வெளியானது. லண்டனில் உள்ள சபா நாவலன் என்றும் நபர் , அடிப்படையில் ஒரு புலிகள் எதிர்ப்புவாதியாவர். விடுதலைப் புலிகளை தூற்றி எழுதினால் தான் அவரால் , காலையில் “அதுக்கு” கூட போக முடியும் என்ற நிலை உள்ளது. இவர் தற்போது காலம் மக் ரே அவர்களை பயன்படுத்தி தனது சொந்த காழ்ப்புணர்வை வெளிக்காட்ட ஆரம்பித்துள்ளார். தன்னை ஒரு இணையத்தின் ஊடகவியலாளர் என்று அறிமுகப்படுத்திய சபா நாவலன் தனக்கு தவறான தகவல்களை தந்துள்ளார் என்று காலம் மக் ரே தெரிவித்துள்ளார். இவர் எடுத்த பேட்டி , சிங்களவர்களால் நடத்தப்படும் சண்டே ஐலண் பத்திரிகையிலும் வெளியாகியுள்ளது. தேசிய தலைவரது உடல் என்று காட்டப்பட்ட புகைப்படத்தை , நான் தடயவியல் நிபுனர்களிடம் காட்டினேன். பின் தலையில் சுடப்பட்டதால் அப் படத்தில் உள்ளவர் இறந்து இருக்கலாம் என்று அவர்கள் கூறியுள்ளார்கள்.
அதனையே நான் எனது "நோ பயர் சூனில்" தற்போது வெளியிட்டு உள்ளேன். அதில் உள்ளது தலைவர் பிரபாகரன் தான் என்று என்னால் நிரூபிக்க முடியாது. இதனை தான் நான் நேர்காணலில் தெரிவித்தேன். ஆனால் எனது கருத்துக்கள் திரிவு படுத்தப்பட்டு வெளியாகியுள்ளது. இவ்வாறு காலம் மக் ரே அவர்கள் அதிர்வு இணையத்திற்கு மேலும் தெரிவித்துள்ளார். தலைவர் பிரபாகரனுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது , என்று சில இணையங்கள் தற்போது எழுதுவதில் பெரும் உள்ளர்த்தம் இருக்கிறது. முதலாவது விடையம் காலம் மக் ரே அவர்களை ஒரு தமிழின துரோகியாக காட்டுவது ! அதனூடாக அவருக்கு தமிழர்கள் செய்யும் உதவியை நிறுத்துவது. இப்படி நடந்தால் இனி வெளியாகவுள்ள ஆவணப்படங்களை நிறுத்த அது வாய்ப்பாக அமையும். மேலும் தேசிய தலைவர் சரணடைந்த பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டார் என்று சிங்களவர்களுக்கு கூறி , அதனை தமிழர்களுக்கும் கூறி தமிழர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்துவது.
இதனூடாக சிங்கள அரசுக்கு துணைபோவது. இது நன்றாக திட்டமிடப்பட்டு , காலம் மக் ரே போன்ற பிரபல்யமானவர்களை இணைத்து , ஊடக பரப்புரையாக எடுத்துச் செல்லப்படுகிறது. ஈழத்தில் போராட்டம் ஆரம்பித்தவேளை , தமது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடிவந்தவர்கள், தற்போது இதுபோன்ற செய்திகளை சற்றும் கூசாமல் எழுதிவருகிறார்கள். நாவலன் என்னும் நக்கிப் பிழைப்பு நடத்தும் இன் நபர் இனியாவது திருந்தட்டும். இல்லையேல் தமிழர்கள் அவரை திருத்துவார்கள் என நாம் நம்பலாம்.இதுபோன்ற பொய்யான கருத்துக்களை, ஏன் தமிழ் ஆராட்சி வட்டம் பரப்புரை செய்தது என்று , புரியவில்லை என்று பல தமிழர்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.
http://www.athirvu.com/newsdetail/2612.html

Geen opmerkingen:

Een reactie posten