[ புதன்கிழமை, 18 மார்ச் 2015, 12:47.06 AM GMT ]
நாரஹேன்பிட்டியில் மேல் மாகாண உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களை நேற்று சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நான் எந்தக் காலத்திலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாத்தேன். எனினும் யதார்தத்திற்கு முகம் கொடுக்க வேண்டும்.
மக்களுடன் இருந்தால் மட்டுமே எந்தவொரு அரசியல் கட்சிக்கும் எதிர்காலம் உண்டு.
கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் கரிசனை கொள்ளாத அரசியல் கட்சிகளுக்கு எதிர்காலம் கிடையாது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை நான் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கினேன்.
எமது கட்சி உறுப்பினர்களுக்கு பல்வேறு வழிகளில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. சிலர் தொழில்களை இழந்துள்ளனர்.
நாடாளுமன்றில் பெரும்பான்மை உறுப்பினர்கள் எமது கட்சியைச் சேர்ந்தவர்களே. நாம் எதிர்க்கட்சிக்கு செல்ல வேண்டிய கட்சியொன்றல்ல.
கட்சியையும் கட்சி உறுப்பினர்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
நான் ஓர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்காரன். தேசிய நிறைவேற்றுப் பேரவை சட்ட ரீதியான ஒரு நிறுவனம் அல்ல.
எனக்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்ட போதிலும் மக்கள் என்னுடனேயே இருக்கின்றார்கள் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கட்சிகள் இணங்கிய விடயங்கள் 19வது திருத்தத்தில் இடம்பெறவில்லை: ரஜீவ விஜேசிங்க குற்றச்சாட்டு
[ புதன்கிழமை, 18 மார்ச் 2015, 01:21.50 AM GMT ]
இந்த விடயத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதிக கட்டுப்பாடுகளை தமது வசம் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
19வது அரசியலமைப்பு திருத்தம் இறுதிப்படுத்தப்படும் போது கட்சிகள் அனைத்தும் தமது கருத்துக்களை வெளியிட்டிருந்தன. எனினும் வெளியிடப்பட்டுள்ள வர்த்தகமானியில் பல விடயங்கள் இடம்பெறவில்லை.
19வது திருத்தத்தின்படி அரசாங்கத்தின், தலைவராகவும் படைகளின் பிரதானியாகவும் ஜனாதிபதி இருப்பார். எனினும் பிரதமர் அமைச்சரவையின் தலைவராக இருப்பார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது எவ்வாறு முடியும் என்று விஜேசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
இதன் காரணமாகவே தாம் எதிர்க்கட்சியில் அமர்ந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
புதிய தேர்தல் முறைமையை உடனடியாக அமுல்படுத்த முடியாது: மஹிந்த தேசப்பிரிய
[ புதன்கிழமை, 18 மார்ச் 2015, 01:50.44 AM GMT ]
புதிய தேர்தல் முறைமை ஒன்று அறிமுகம் செய்த உடனேயே அந்த முறைமையின் கீழ் தேர்தல் நடத்துவது ஜனநாயகமாகாது.
புதிய தேர்தல் முறைமை அறிமுகம் செய்யப்பட்டால் அது குறித்து மக்களை தெளிவுபடுத்த வேண்டும். இதற்கு குறைந்தபட்சம் ஒராண்டு காலமேனும் தேவைப்படும்.
புதிய தேர்தல் முறைமை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டால் அது குறித்து ஆராய்வதற்கு குறைந்த பட்சம் ஓராண்டு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.
புதிய தேர்தல் முறைமை அறிமுகம் செய்யப்பட்டால் அதனை அமுல்படுத்த எமது திணைக்களம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் நாடாளுமன்றில் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி வாக்குறுதியை நிறைவேற்றவில்லை: ஜயம்பதி விக்ரமரட்ன
[ புதன்கிழமை, 18 மார்ச் 2015, 02:08.00 AM GMT ]
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முற்று முழுதாக ரத்து செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தல் காலத்தில் உறுதியளித்திருந்தார்.
ஒரு சிலரின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி இவ்வாறு செயற்படுகின்றார்.
அமைச்சரவையின் ஊடாக நாடாளுமன்றத்துடன் தொடர்புடைய ஓர் ஆட்சிப் பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டும். இது குறித்து தேர்தல் காலத்தில் உறுதியளிக்கப்பட்டிருந்தது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் அதீத அதிகாரங்கள் மட்டும் குறைக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்படவில்லை.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்படாவிட்டால் அது தொடர்பான குற்றச்சாட்டுக்கள் ஜனாதிபதி மீதே சுமத்தப்படும்.
ஐக்கிய தேசியக் கட்சி அவசரமாக தேர்தலை நடாத்த முயற்சிக்கின்றது.
இவ்வாறு குறுகிய நோக்குடன் ஐக்கிய தேசியக் கட்சி செயற்படக் கூடாது என ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற கூட்டமொன்றில் நேற்று அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்பு மைத்திரியின் ஆட்சியில் அமுலுக்கு வருமா?
[ புதன்கிழமை, 18 மார்ச் 2015, 04:00.59 AM GMT ]
சம சமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் விக்ரமபாகு கருணாரத்னவினால் குறித்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
நேற்று ஜனாதிபதி செயலகத்தில் தேசிய நிறைவேற்று குழு கூடியுள்ளது. இதன் போது ஜனாதிபதியின் அதிகாரங்களை அகற்றுதல் உட்பட பல யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
19ஆம் திருத்தச்சட்டம், வர்த்தமானி மூலம் நேற்றுமுன் தினம் வெளியிடப்பட்டது.
எப்படியிருப்பினும் தற்போதைய ஜனாதிபதியின் 100 நாள் வேலைதிட்டத்தில் முன்வைக்கப்பட்ட நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்பு தற்போதைய ஜனாதிபதியிடமிருந்தே அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyDScSUlp1F.html
Geen opmerkingen:
Een reactie posten