தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 18 maart 2015

பெரும் குழப்பத்தோடு இந்தியா திரும்பிய மோடி: இது உலக மகா ஜில்பா போல இருக்கே ?

ஆரம்பித்தது "அக்கப் போர்" மனக்கசப்புடன் திரும்பிச் சென்றார் ரணில் விக்கிரமசிங்க !

[ Mar 18, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 19455 ]
கடந்த வருடம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ,மகிந்தரை தோற்கடிக்கவேண்டும் என்றும் ,புதிய ஆட்சி ஒன்று வரவேண்டும் என்று எதிர்கட்சியில் இருந்த மைத்திரி ரணில் கட்சியுடன் கூட்டுவைத்துக்கொண்டார். ஆனால் அது 100 நாட்கள் கூட நீடிக்குமோ என்று தெரியவில்லை. காரணம் என்னவென்றால் சிறிய விடையங்களுக்கு கூட ரணில் விட்டுக்கொடுப்போடு நடந்துகொள்கிறார் இல்லை என்பது தான் பெரியவிடையமாக உள்ளது என்கிறார்கள். மைத்திரி கொண்டுவரும் சில நல்ல விடையங்களுக்கு ரணில் தொடர்ந்தும் முட்டுக்கட்டை போட்டு தடுத்துவருகிறார்.
அதாவது "உத்தேச தேர்தல்" திட்டம் தொடர்பாக அனைத்துக் கட்சிகளும் , மைத்திரியை சந்தித்து கலந்துரையாடினார்கள். இதில் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. அதுபோக இச்சந்திப்பு நேற்று மீண்டும் நிகழ்ந்துள்ளது. தேர்தல் முறைமையை வரும் தேர்தலுக்கு முன்னதாக மாற்றியமைக்கவேண்டும் என்று மைத்திரி கூற ,ரணில் உள்ளிட்ட தரப்புகள் இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டார்கள். இறுதியாக ஒரு கட்டத்தில் ரணில் பெரும் மனக்கசப்போடு எழுந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. ரணில் மற்றும் மைத்திரிக்கு இடையே ஏற்பட்டுள்ள சீர்கேடு , மகிந்த காதில் தேன் பாயும் செய்தியாக உள்ளது. மகிந்த ராஜபக்ஷ காலில் சலங்கை கட்டி ஆடாத குறையாக தற்போது இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தப் பிரச்சனை எங்கே கொண்டுபோய் விடும் என்று தெரியவில்லை. மைத்திரிபால தேர்தல் தொடர்பாக ஒரு புதிய முறையைக் கொண்டுவர நினைக்கிறார். ஆனால் அதற்கு கடும் எதிர்ப்பு இருக்கிறது. இதனை எவ்வாறு ஊதிப் பெரிசாக்கலாம் என மகிந்தரின் ஆதரவாளர்கள் திட்டம் தீட்டி வருகிறார்கள்.
http://www.athirvu.com/newsdetail/2610.html

மங்களவின் கறுப்பு புத்தகம் இதுதான்: சிங்கள ராணுவத்தினர் பலர் பதவி நீக்கம் !

[ Mar 18, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 14460 ]
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் , மங்கள சமரவீர ஒரு கறுப்பு புத்தகத்தை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இப் புத்தகத்தில் உள்ள நபர்கள் மெல்ல மெல்ல பதவிகளை இழந்து வருகிறார்கள். இவர்கள் தொடர்பான விபரங்களை அதிர்வு இணையம் ஏற்கனவே வெளியிட்டு இருந்தது. கடந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை வெற்றிபெறச் செய்யும் நோக்கில் மோசடியான முறையில் இராணுவ அதிகாரத்தை பயன்படுத்திய அதிகாரிகளின் பெயர்களே அதுவாகும்.
அதில் முதன்மை வகிக்கும் கிழக்கு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரேரா, யாழ் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் மற்றும் மத்திய பிரதேச கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மனோ பெரேரா ஆகியோர் MSB/A/6/1(APPT) (43) மற்றும் 2015 பெப்ரவரி 15ம் திகதி இராணுவ தலைமையகத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் மூலம் உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என தற்போது அதிர்வு இணையம் அறிகிறது.
ஆனால் கடந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு மங்களவின் கறுப்பு புத்தகத்தில் பெயர் பதியப்பட்ட மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க முப்படைகளின் பிரதானியாகவும் மேஜர் ஜெனரல் மஹிந்த அம்பன்பொல பிரதி முப்படைகளின் பிரதானியாகவும் மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க நிறைவேற்று பணிப்பாளர் பதவியிலும் மேஜர் ஜெனரல் ரேனக உடவத்த நிதி நிர்வாக பணிப்பாளர் நாயகமாகவும் மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் முல்லைத்தீவு படை கட்டளைத் தளபதியாகவும் இன்னும் எவ்வித இடையூறும் இன்றி இருக்கின்றமை உண்மையான இராணுவ சிப்பாய்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.இருப்பினும் இவர்கள் மீதும் கை வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
http://www.athirvu.com/newsdetail/2613.html

பெரும் குழப்பத்தோடு இந்தியா திரும்பிய மோடி: இது உலக மகா ஜில்பா போல இருக்கே ?

[ Mar 18, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 20870 ]
இலங்கை சென்று சுற்றுப்பயணத்தை முடித்த நரேந்திர மோடி , மீண்டும் இந்தியா சென்றுவிட்டார். ஆனால் அவர் இலங்கை வரும்போது இருந்த தெளிவு திரும்பி இந்தியா செல்லும்போது இருக்கவில்லை என்கிறாகள் விடையம் அறிந்த வட்டாரத்தினர். தமிழர்களை பொறுத்தவரை அவருக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் சிங்கள ஆட்சியாளர்களை பார்த்து தான் அவர் குழம்பிப்போய் உள்ளாராம். பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் பத்தரமுல்ல 'வொட்டர்ஸ் ஏஜ்' இல் இடம்பெற்ற பகல் உணவு வேளையின்போது ஆளும் எதிர்கட்சி உறுப்பினர்களை சந்தித்தபோது நரேந்திர மோடி திணறிப்போனாராம்.
"இது மிகவும் குழப்பகரமானது" நீங்கள் அனைவரும் அனைத்து இடங்களிலும் உள்ளீர்கள். இது அரசாங்கம் ஒன்றை நிர்வகிக்கும் புதிய முறையா ? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மகிந்தரோடு நின்றவர்கள் ரணில் பக்கமும் , எதிர் கட்சியாக உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் , தலைவர் மைத்திரி ஜனாதிபதியாவும் உள்ளார். அத்தோடு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் மற்றும் எதிர்கட்சி தலைவர் ஆகியோர் ரணிலுடன் விருந்தில் கலந்துகொண்டு உள்ளார்கள். அவர்கள் ரணிலோடு உள்ள நெருக்கத்தைப் பார்த்து நரேந்திர மோடி மிரண்டுவிட்டாரா என்று தெரியவில்லை. ஆட்சி மாற்றம் ஒன்று தேவை என்று அமெரிக்காவிடம் இந்தியா கோரியது என்னவோ உண்மைதான்.
ஆனால் கிணறு தோண்ட பூதம் வெளியான கதையாக இது இருக்குமோ என்று மோடி தற்போது தான் நினைத்திருப்பார். ஆழும் கட்சி , எதிர் கட்சி , மகிந்தரின் அணி, எல்லாமே ஒரே இடத்தில் நின்று சந்தோஷமாக சாப்பிடுகிறார்கள். இதுவரை எந்த கைதுகளும் இடம்பெறவில்லை. என்ன தான் நடக்கிறது ? என்று அவர் நினைத்தபடி தான் இந்தியா கிளம்பிச் சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது.
http://www.athirvu.com/newsdetail/2614.html

Geen opmerkingen:

Een reactie posten