தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 6 maart 2015

புலிகளுக்கு பணம் கொடுத்து தேர்தலில் ஜெயித்த மகிந்த ராஜபக்ச:தமிழக ஊடகத்திற்கு தெரிவித்த ரணில்



சுஷ்மா சுவராஜ் இலங்கை வந்தார்- ஜனாதிபதி மைத்திரி- சுஷ்மா சந்திப்பு
[ வெள்ளிக்கிழமை, 06 மார்ச் 2015, 12:16.47 PM GMT ]
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கை வந்தடைந்துள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் இன்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக அங்குள்ள செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சுஷ்மா சுவராஜ், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின், முன் ஏற்பாடுகளுக்காகவே வெளிவிவகார அமைச்சர் தற்போது இலங்கை வந்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 13 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
இரண்டாம் இணைப்பு
இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.
இன்று  மாலை கொழும்பு விஜயராம மாவத்தையில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது..
http://www.tamilwin.com/show-RUmtyDTaSUmryA.html

புலிகளுக்கு பணம் கொடுத்து தேர்தலில் ஜெயித்த மகிந்த ராஜபக்ச:தமிழக ஊடகத்திற்கு தெரிவித்த ரணில்
[ வெள்ளிக்கிழமை, 06 மார்ச் 2015, 12:36.43 PM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு பணம் கொடுத்துதான் 2005 ஆம் ஆண்டு தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்றதாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழக தொலைக் காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது,
2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாண மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டிருந்தால் 2009-ல் நடந்த நிகழ்வுகளை என்னால் தடுத்திருக்க முடியும். மகிந்த ராஜபக்சேவை அதிபராக்கியது யார்? தென்னிலங்கை மக்கள் அல்ல.
3 முதல் 4 லட்சம் தமிழர்களை வாக்களிக்க விடாமல் தடுப்பது குறித்து ராஜபக்சவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே உடன்படிக்கை ஏற்பட்டிருந்தது.
ராஜபக்ச, விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்தார். பணத்தை எடுத்துச் சென்று கொடுத்த எமில்காந்தன் இன்றும் மத்திய கிழக்கு ஆசியாவில் எங்கோ இருக்கிறார். இது தெரிந்த விஷயம்தான்.
இதை ராஜபக்ச கூட மறுத்தது கிடையாது. பிரபாகரன் பணத்தைப் பெற்றுக் கொண்டார். தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்வோம் விடுதலைப் புலிகளுக்காக ஆயுதங்களைக் கடத்தியவர்களைத்தான் இலங்கை கடற்படை சுட்டுக் கொன்றுள்ளது.
எங்களது கடற்பகுதிக்கு தமிழக மீனவர்கள் ஏன் வரவேண்டும்? எங்கள் கடற்பரப்பை ஆக்கிரமித்தால் எங்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களை சுட்டுக் கொல்ல எங்களுக்கு அதிகாரம் இருக்கிறது. இவ்வாறு ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDTaSUmryC.html

Geen opmerkingen:

Een reactie posten