தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 6 maart 2015

பழிவாங்கலை நிறுத்திவிட்டு 100 நாள் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க கோரும் மகிந்த ராஜபக்ச



காணாமல்போன 15 வயது மாணவன் சடலமாக மீட்பு
[ வெள்ளிக்கிழமை, 06 மார்ச் 2015, 11:44.08 AM GMT ]
பதுளை – உடுவர தோட்டத்தில் இருந்து தமிழ் மாணவன் ஒருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மாணவர் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்தார் என அவரது பெற்றோரினால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் வலஸ்பெத்த தமிழ் மகா வித்தியாலயத்தில் 10ஆம் தரத்தில் கல்வி பயிலும் விஷ்வமூர்த்தி சத்தியாதரன் என்ற 15 வயதுடைய மாணவன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சடலம் மீட்கப்பட்ட இடத்திலிருந்து சந்தேகத்திற்கிடமாக சீமெந்து உறை ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக பதுளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


தேசிய அரசாங்கம் குறித்து முடிவு செய்வதற்கு நான்கு உறுப்பினர் கொண்ட குழு நியமனம்
[ வெள்ளிக்கிழமை, 06 மார்ச் 2015, 11:53.14 AM GMT ]
தேசிய அரசாங்கம் தொடர்பாக தீர்மானிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு நான்கு பேர் கொண்ட குழுவொன்றை நியமிக்க தீர்மானித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலேயே குறித்த குழு இயங்கவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கட்சி செயலாளர் அனுர பிரியதர்ஷன யாபா, தேசிய அமைப்பாளர் சுசில் பிரேம ஜயந்த மற்றும் எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் குறித்த குழுவில் இயங்கவுள்ளார்கள்.
ஒரு வாரத்திற்குள் அரசாங்கம் தொடர்பான தீர்மானத்தை அறிவிப்பதற்கு இக்குழு எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. எப்படியிருப்பினும் முன்னாள் அமைச்சர் குமார் வெல்கம தேசிய அரசாங்கம் உருவாக்கத்தை ஆட்சேபித்துள்ளார்.
தேசிய அரசாங்கம் குறித்து தற்பொழுது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பழிவாங்கலை நிறுத்திவிட்டு 100 நாள் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க கோரும் மகிந்த ராஜபக்ச
[ வெள்ளிக்கிழமை, 06 மார்ச் 2015, 12:03.22 PM GMT ]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வாக்களித்த சிலர் அரசாங்கத்தின் தொந்தரவுகளுக்கும் இடைஞ்சல்களுக்கும் உள்ளாகியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஹொரணை மதுராவல பிரதேச சபைக்கு முன்னால் கூடிய மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
திருமணம் ஒன்றுக்கு செல்லும் வழியில் அவர் பிரதேச சபைக்கு விஜயம் செய்தார்.
அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இவர்கள் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாகியுள்ளனர். அத்துடன் தொழில்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த அரசியல் பழிவாங்கல்கள் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் வெறுப்படைந்துள்ளனர்.
இந்த அரசியல் பழிவாங்கலையும், மக்களை பழிவாங்குவதையும் நிறுத்தி விட்டு செயற்படுமாறும் அவர்கள் எதிர்பார்த்த 100 நாள் வேலைத்திட்டத்தை செயற்படுத்துமாறு கோருவதாகவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக அங்கு பேசிய முன்னாள் ஜனாதிபதி, கண்டியில் நடைபெறுவது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவான மக்கள் கூட்டம் எனவும் அதனை மிரட்டல்கள் மூலம் நிறுத்த முடியாது எனவும் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்திற்கு எதிராக எவரும் தற்போது குரல் கொடுப்பதில்லை எனவும் அந்த கூட்டத்தை ஏற்பாடு செய்பவர்கள் மாத்திரமே அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDTaSUmq7J.html

Geen opmerkingen:

Een reactie posten