தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 11 maart 2015

இலங்கையில் நடக்க வேண்டியதை இந்தியா, அமெரிக்காவே தீர்மானிக்கின்றன: பேராசிரியர் நளின்

மொஹான் பீரிஸ் மற்றும் சேனாதிபதியின் கடவுச்சீட்டை முடக்க நீதிமன்றம் மறுப்பு
[ புதன்கிழமை, 11 மார்ச் 2015, 11:04.43 AM GMT ]
முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸின் கடவுச்சீட்டை முடக்குமாறு வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு என்பவரினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மொஹான் பீரிஸ் பிரதம நீதியராசாக இருக்கும் போது வழங்கிய உத்தரவுகளினால் அரசாங்கத்திற்கு 619 மில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளதினால் விசாரணைகள் நிறைவு பெறும் வரை மொஹான் பீரிஸின் கடவுச்சீட்டை முடக்குமாறு சட்டத்தரணி மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் செய்த முறைப்பாடு குறித்து விவாதிக்க மேன் முறையீட்டு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை எனவும்,
உயர் நீதிமன்றத்திற்கு மாத்திரமே அவ் அதிகாரம் காணப்படுகின்றது எனவும் அரச சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளதுடன், சட்டத்தரணி கொடித்துவக்குவின் மனுவிற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அரச சட்டத்தரணியின் வாதத்தை ஏற்று கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்குவின் மனுவை நிராகரித்துள்ளது.
எவன்காட் தலைவரின் கடவுச்சீட்டை முடக்க நீதிமன்றம் மறுப்பு
எவன்காட் கடல் பாதுகாப்பு சேவை தலைவர் மற்றும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நிஷ்ஷங்க சேனாதிபதியின் கடவுச்சீட்டை முடக்குமாறு குற்றத் தடுப்புப் பிரிவு நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் கோரிய போதும் நீதிமன்றம் அதனை நிராகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மிதக்கும் ஆயுத கப்பல் களஞ்சியம் குறித்த நீதிமன்ற நடவடிக்கையில் சேனாதிபதியின் பெயர் சந்தேகநபர் பட்டியலில் இல்லாத காரணத்தால் கடவுச்சீட்டை முடக்க முடியாது என நீதிமன்றம் தெளிவுடுத்தியுள்ளது.
வழக்கின் பிரதிவாதியாக சேனாதிபதியை பெயரிடுவதா இல்லையா என்பது குறித்து நாளை தீர்மானிக்கப்படவுள்ளது. இதேவேளை எவன்காட் நிறுவனம் மோசடி செய்திருக்கவில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல ஆகியோர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு இரு யுத்தக் கப்பல்களை வழங்க இந்திய தீர்மானம்
[ புதன்கிழமை, 11 மார்ச் 2015, 11:00.41 AM GMT ]
இலங்கையின் கடலோரப் பாதுகாப்புக்காக இந்தியா இரண்டு யுத்த கப்பல்களை இலங்கைக்கு வழங்கவுள்ளதாக இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்திகளுக்கான இணையமைச்சர் ராவே இந்தெர்ஜித் சிங் குறிப்பிட்டுள்ளார்.
இரு கடலோர கண்காணிப்பு கப்பல்களை வழங்குமாறு இலங்கை கேட்டுக்கொண்டுள்ளதாக இணையமைச்சர் ராவே இந்தெர்ஜித் சிங் தெரிவித்துள்ளார்.
கோவாவில் இடம்பெற்ற மொறிசியசிற்கு யுத்தக் கப்பல் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர், யுத்தகப்பல்களை தற்போது தயாரித்துக் கொண்டிருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
குறித்த யுத்த கப்பல்களை இந்தியா உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுவதாகவும், வெளிநாடு எதனுடனும்,தொழில்நுட்ப ஓத்துழைப்பு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் நடக்க வேண்டியதை இந்தியா, அமெரிக்காவே தீர்மானிக்கின்றன: பேராசிரியர் நளின்
[ புதன்கிழமை, 11 மார்ச் 2015, 10:47.13 AM GMT ]
மகிந்த ராஜபக்சவை அரசியலில் இருந்து முற்றாக நீக்கவே தேசிய அரசாங்கம் என்ற எண்ணக்கரு முன்வைக்கப்படுவதாக பேராசிரியர் நளின் டி சில்வா தெரிவித்துள்ளார்.
குருணாகலையில் அண்மையில் நடைபெற்ற மகிந்த இல்லாத நாடு என்ற தலைப்பிலான கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டுக்கு என்ன நடக்க வேண்டும் என்பதை தற்போது இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் தீர்மானிக்கின்றன.
விசேடமாக ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி எடுக்கும் இப்படியான தீர்மானங்கள் குறித்து ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எமக்கு சில தகவல்களை வழங்குகிறார். அப்படி அறிந்து கொள்வதற்காவது அவர் அங்கு இருப்பது நல்லது.
ரணில் விலகப் போகிறார் என்ற சிறிய செய்தி ஒன்று அண்மையில் வந்தது. அந்த நேரத்தில் தான் ரணில் விலக வேண்டும் என்று அநுரகுமார திஸாநாயக்க கூறினார். இப்படித்தான் இன்று இந்த நல்லாட்சி அணி வகுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மைத்திரி கைப்பற்றவே இந்த தேசிய அரசாங்கம் பற்றி பேசப்படுகிறது. அந்த அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை எதிர்பார்த்திருப்பவர்கள் அது பற்றி வாய்திறப்பதில்லை.
இந்த தேசிய அரசாங்கம் என்ற எண்ணக்கருவில் எந்த நோக்கத்தையும் நாங்கள் காணவில்லை எனவும் நளின் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSVSUmu5B.html

Geen opmerkingen:

Een reactie posten