[ புதன்கிழமை, 11 மார்ச் 2015, 11:15.53 AM GMT ]
லண்டன் மெல்பரோ மாளிகையில் நேற்று பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் பிலிப் ஹம்மோண்டை சந்தித்து பேசிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தை பற்றி தகவல் வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர்,
தேசிய நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும் உத்தேச அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து கலந்துரையாடியதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர், பதவிக்கு வந்துள்ள புதிய அரசாங்கம் நல்லிணக்க செயற்பாடுகளை துரிதப்படுத்த மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை பாராட்டுவதாக பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் இதன் போது கூறியுள்ளார்.
அத்துடன் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி செயலணிக் குழுவை நியமிக்க பிரித்தானிய பக்கபலத்தை வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை தெற்காசியாவின் சிறந்த முதலீட்டு கிராமாக மாற முயற்சிக்கும் இலங்கையின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற நேரடியான வெளிநாட்டு முதலீகள் அவசியம் என்பதை வெளிவிவகார மங்கள சமரவீர பேச்சுவார்த்தையின் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
மே மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு பின்னர் இலங்கைக்கு உயர்மட்ட விஜயம் ஒன்றை மேற்கொள்ள உத்தேசித்திருப்பதாக பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல இலங்கை அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSVSUmu5E.html
நாம் சூழலியல் அகதிகளாக இடம்பெயர்ந்து விடக்கூடாது: பொ.ஐங்கரநேசன்
[ புதன்கிழமை, 11 மார்ச் 2015, 11:49.31 AM GMT ]
இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தால் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் பல்வேறு கடற்கரை சார் சூழலியல் திட்டங்கள் பற்றிய முன்னேற்ற மீளாய்வு நிகழ்ச்சி இன்று யாழ் பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் உரையாற்றுகையில்,
யாழ்ப்பாணத்தின் தரை மயோசின் காலத்துச் சுண்ணாம்புப் பாறைகளால் ஆனது. நொய்தலான இந்தச் சுண்ணாம்புத்தரை காரணமாகவே பெய்கின்ற மழைநீர் முற்றாகக் கடலுக்குள் வடிந்தோடிவிடாமல் நிலத்தடி நீராகக் கீழே தேங்குகின்றது.
யாழ்ப்பாணத்தில் எமது இருப்புக்கு, இந்த நிலத்தடி நீர்தான் காரணம். ஆனால், வரப்பிரசாதமாக அமைந்த சுண்ணாம்புப் பாறைகள் அதன் நுண்துளைகளினூடாக மாசுக்களையும் கீழே கசிய விடுகின்றது.
நாம் மேற்கொள்ளும் செறிவு வேளாண்மையில் அளவுக்கு அதிகமான இரசாயன உரங்களையும் பீடைகொல்லி நஞ்சுகளையும் பயன்படுத்தி வருகிறோம். இந்த நஞ்சுகள் கடைசியில் நிலத்தடி நீரைச் சென்றடைகின்றன.
முறையான கழிவகற்று வசதிகள் இல்லாததால் மலக்கிருமிகள் நிலத்தடி நீரில் குடியேறுகின்றன. இவை போதாது என்று இப்போது தண்ணீரில் எண்ணெய் மாசும் பூதாகரமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
ஒருபுறம் நிலத்துக்குக் கீழே சூழலியல் அனர்த்தங்கள் நிகழ்ந்தேறும்போது, இன்னொருபுறம் நிலத்துக்கு மேலேயும் பெரும் சூழலியற் படுகொலைகள் நிகழ்ந்து வருகின்றன.
கரையோரத்தில் பாதுகாப்பு அரண்களாக விளங்கி வந்த மணல் மேடுகளில் பெரும் பங்கு கொள்ளையடிக்கப்பட்டு விட்டது. கடற்கோள் தடுப்புச் சுவர்களாக விளங்கும் கண்டல் காடுகளும், சவுக்குக் காடுகளும் விறகுத் தேவைகளுக்காகக் காணாமற் போய்க்கொண்டிருக்கின்றன.
யுத்த காலத்தில் இந்த அழிவுகளைத் தடுக்க முடியாது போயிருந்திருக்கலாம். ஆனால், இனிமேலும் இவை தொடர்ந்தால் நாம் சூழலியல் அகதிகளாக இடம் பெயர்வது தவிர்க்க முடியாததாகிவிடும்.
ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் புள்ளிவிபரங்களின்படி சூழல் அகதிகளாக உலகளாவியல் ரீதியில் தற்போது 10.2 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள்.
2020ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 50 மில்லியன்களாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குள் ஒருவராக நாம் அடங்கிவிடக் கூடாது.
சூழல்நெருக்கடிகள் வரும்போது அதற்குள் சில சமயங்களில் அரசியலும் ஒரு மாசாகக் கலந்துவிடும் அபாயம் உள்ளது. இதற்கும் நாம் இடமளித்துவிடக் கூடாது. சூழலில் அரசியல்மாசு நிலைமைகளை மேலும் விபரீதமாக்கி விடும்.
அரசியல்;வாதிகள், ஆய்வாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயற்படுவதன்மூலமே எமது இயற்கை வளங்களையும், அதன் பாதிப்புகளையும் சரியான முறையில் மதிப்பீடு செய்யமுடியும்.
இயற்கை வளங்களைப் பாதுகாத்து அதன் பயன்களை நுகரமுடியும். இதற்கான ஒரு முன்மாதிரியாகவே இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் இந்த முன்னேற்ற மீளாய்வு நிகழ்ச்சியில் நாம் அனைவரும் கலந்து கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSVSUmu5F.html
Geen opmerkingen:
Een reactie posten