தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 9 maart 2015

தமிழர் பகுதியில் படைகள் குறைப்பு இல்லை: ரணில் சுஷ்மா காதில் ஓதினார் !

கோத்தபாய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறத் தடை
[ திங்கட்கிழமை, 09 மார்ச் 2015, 06:16.51 AM GMT ]
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த தடையினை நீதிமன்றம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை முன்னாள் கடற்படை தளபதி சோமதிலக திஸாநாயக்கவிற்கும் வெளிநாடுக்கு பயணம் மேற்கொள்ள நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
காலி துறைமுகத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் தொடர்பான விசாரணைகளின்போதே, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்த மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்திலிருந்த ஆயுதங்களும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கிய இன்னொரு பாதுகாப்பு நிறுவனத்தின் ஆயுதங்களும் முன்னர் மகிந்த ராஜபக்ச அரசாங்க காலத்தில் அச்சுறுத்தும் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரரான கோத்தபாய ராஜபக்ஷ இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுக்கின்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyDTdSUms7J.html

ஸ்ரீ.சு.கவின் திட்டமிடல் குழுவின் தலைவியாக சந்திரிக்கா நியமனம்
[ திங்கட்கிழமை, 09 மார்ச் 2015, 08:17.22 AM GMT ]
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கொள்கை மற்றும் திட்டமிடல் குழுவின் தலைவியாக முன்னாள் ஜானாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
கொள்கை மற்றும் திட்டமிடல் குழுவின் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினராக விதுர விக்ரமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புதிய வடிவமைப்பின் கீழ் செயற்படுவதற்காகவே இக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி குறித்த குழுவின் தீர்மானத்திற்கமையவே எதிர்வரும் பொது தேர்தலில் செயற்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
சுதந்திரக்கட்சியினர் சிலர் யானைச் சின்னத்தில் போட்டியிட உள்ளனர்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக அந்த கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள முற்போக்கான அரசியல்வாதிகள் சிலர் தமக்கு ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் வாய்ப்பை கோரியுள்ளனர்.
இவர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்குவதுடன் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், படித்த இளையோர் மற்றும் பெண்களுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்

தமிழர் பகுதியில் படைகள் குறைப்பு இல்லை: ரணில் சுஷ்மா காதில் ஓதினார் !

[ Mar 09, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 12520 ]
இலங்கையில் தமிழர் பகுதிகளில் முகாமிட்டுள்ள ராணுவ படைகள் இப்போதைக்கு குறைக்கப்படாது என்று ,பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய வெளிவிகராக அமைச்சர் சுஷ்மாவைச் சந்தித்த பின்னர் , இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
இலங்கையில் 13-வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்துவது தொடர்பாக இலங்கை அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. ஆனால் சில விஷயங் களில் கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன. மாநில முதல்வர்களுக்கு தன்னாட்சி உரிமம் வழங்கினால், போலீஸ் துறை அவர்களின் சொந்த ராணுவமாகிவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதுகுறித்து விரிவான ஆலோசனை நடத்தப் பட்டு வருகிறது. இந்திய ராணுவ நடைமுறைகளைப் பின்பற்றியே இலங்கையில் ராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழர் பகுதிகளில் முகாமிட்டுள்ள ராணுவ படைகள் இப்போதைக்கு குறைக்கப்படாது. எதிர்காலத்தில் அங்கு நிலைமை மேம்பாட்டால் அதுகுறித்து பரிசீலிப்போம். நாடு முழுவதும் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் அப்பகுதி மக்களிடம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளன.
வடக்கு மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் அரசை விமர்சித்து வருகிறார். ஆனால் உண்மை என்னவென்றால் தமிழ் மக்கள் விக்னேஸ்வரனை அதிகமாக விமர்சித்து குற்றம் சாட்டி வருகின்றனர். வடக்கு, கிழக்கு மாகாணங் களை இணைப்பது குறித்து இரு மாகாணங்களிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதுகுறித்து முடிவு செய்ய பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும்.
http://www.athirvu.com/newsdetail/2511.html

Geen opmerkingen:

Een reactie posten