[ திங்கட்கிழமை, 09 மார்ச் 2015, 05:41.15 AM GMT ]
குறித்த சந்திப்பில் இலங்கையின் நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பாக பிரித்தானியாவின் ஆதரவை பெற்றுக்கொள்வது தொடர்பாக கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
ஜனாதிபதி, எதிர்வரும் 11ஆம் திகதி பிரித்தானியாவின் 2ஆம் எலிசபெத் மகா ராணியை பகின்ஹெம் மாளிகையில் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை புதிய அரசாங்கம் போர்க் குற்ற விசாரணைகளை ஒத்திவைப்பது தொடர்பாக லண்டன் தமிழ் புலம்பெயர்ந்தோர் குற்றம் சுமத்துவதோடு இரு போராட்டங்களில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவேன் அதிக வாக்குகளால் வெற்றி பெறுவேன்: விநாயகமூர்த்தி
[ திங்கட்கிழமை, 09 மார்ச் 2015, 06:16.03 AM GMT ]
நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு கூறியுள்ளார்.
தான் தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பொது தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு அதிக வாக்குகள் பெற்று தரும் பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாக மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDTdSUms7I.html
மழைவிட்டாலும் தூறல் நிற்கவில்லை: கருணாநிதி ரணிலுக்கு கண்டனம்
[ திங்கட்கிழமை, 09 மார்ச் 2015, 07:07.02 AM GMT ]
அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழர்களின் வாழ்வை சூறையாடிய ராஜபக்ச வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு பாரிய தோல்வியை தழுவியுள்ளார்.
அவரை தோல்வியடைய செய்து ஆட்சிக்கு வந்துள்ள மைத்திரிபால சிறிசேன, தமிழர்கள் இழந்த உரிமைகளை மீண்டும் பெறுவார்களா என்பது தற்போது கேள்விக்குறியாகவே அமைந்துள்ளது.
இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் தாய்நாட்டை வந்து சேர்வதற்குள் மீனவர்கள் மீதான தாக்குதல் மற்றும் கைதுகள் தொடர்கின்றன.
இது இவ்வாறிருக்க இலங்கை பிரதமர் இந்திய ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வி பெரிதும் துன்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மீனவர்கள் வங்கக்கடலில் மீன்பிடிக்க செல்லும் போது இலங்கையின் எல்லை இங்கிருந்து தான் என அறிவதற்கு எவ்விதமான தடயங்களோ, அடையாளங்களோ இல்லாத நிலையில் அப்பாவித்தனமாக மீன்களை பிடிக்கும் போது இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு அவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்கின்றது.
மீனவர்கள் தம் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிப்பதை இலங்கை பிரதமர் அவரது வீட்டில் கொள்ளையடிப்பதற்கு ஒப்பிட்டு கருத்து தெரிவித்திருப்பது எவ்வாறு சாத்தியமாகும் என அவர் கேள்வியெழுப்பியுள்ளதுடன்,
கடலில் மீன்பிடித்தால் அவர்களை சுடலாம் என்பது எவ்வாறு நீதியாகும், அதற்கு சட்டம் அனுமதி வழங்குகிறதா எனவும் கேட்டுள்ளார்.
இது போல் கச்சதீவை நாங்கள் விட்டுக்கொடுக்க போவதில்லை, ஒப்பந்தத்தில் கொடுக்கப் போவதுமில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது இலங்கை பிரதமர் இவ்வாறு முகத்திலடித்தாற் போல் செவ்வி வழங்கியிருப்பது கண்டனத்திற்குரிய ஒன்றாகும்.
மீனவர்கள் பிரச்சினையை சுமூகமாக தீர்ப்பதற்கு முனையாமல் இலங்கை பிரதமர் இவ்வாறு தெரிவித்து மேலும் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளமை மனவருத்தம் அளிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்திய பிரதமர் தனது இலங்கை விஜயத்தின் போது வெறுமனே 13வது சீர்திருத்த சட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தாமல் வட, கிழக்கு மாகாணங்களிலுள்ள இராணுவத்தை திரும்ப பெறுதல், சுவீகரிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகளை மீள வழங்குதல், மாகாண சபைக்கு காவல்துறை நில நிர்வாகம், நில வருமானம், மீன்பிடி தொழில் தொடர்பான அதிகாரங்கள் அனைத்தையும் பெற்றுத்தரும் வரையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கலைஞர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க தமிழர்களையும், விடுதலை புலி இயக்கத்தினரையும் தற்போது குற்றம் சுமத்தியுள்ளார், ஆனால் அவர் இதே போராளிகளை சந்தித்து தான் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை திரும்ப பெறுவோம், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம், என வாக்குறுதியளித்து அவர் பிரதமரானார்.
ஆனால் பதவிக்கு வந்த பின்னர் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாது தமிழர்களையும், விடுதலை புலி இயக்கத்தினரையும் குறை சொல்வதில் சற்றும் நியாயம் இல்லை என தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை ஜனாதிபதி இந்தியாவுடனான நட்பினை விரும்புவதால், இலங்கை தமிழர்களின் நல்வாழ்வுக்கான உரிமைகளை இந்திய பிரதமர் இச்சந்தர்ப்பத்தில் பெற்று தரமுடியும். இதுதான் உலக வாழ் தமிழர்கள் அனைவரினதும் எதிர்பார்ப்பு என மு.கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDTdSUmtyC.html
Geen opmerkingen:
Een reactie posten