[ திங்கட்கிழமை, 09 மார்ச் 2015, 07:09.35 AM GMT ]
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தேவிகா டி லிவேரா தென்னகோன் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டை முறைப்பாட்டு தரப்பினர் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க தவறியுள்ளதாக நீதிபதி கூறியுள்ளார்.
இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற 10 பேருக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்கி சட்டவிரோத செயல்களுக்கு அவர்களை பயன்படுத்தியதாக பொன்சேகா மற்றும் சேனக்க சில்வா ஆகியோருக்கு எதிராக 41 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
சட்டமா அதிபர் தாக்கல் செய்த இந்த வழக்கில் முறைப்பாட்டு தரப்பினரின் சாட்சியங்கள் இன்று நிறைவடைந்தன.
எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக தாக்குதல் தொடுக்கும் மகிந்த ஆதரவாளர்கள்
[ திங்கட்கிழமை, 09 மார்ச் 2015, 07:11.21 AM GMT ]
நிமால் சிறிபால டி சில்வாவை அடுத்த பிரதமர் வேட்பாளராக நிறுத்தும் தயார்படுத்தல்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் மேற்கொள்ளப்படுவது தெரியவந்துள்ளதை அடுத்தே, மகிந்த ஆதரவாளர்கள் அவருக்கு எதிரான முனைப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில், நிமால் சிறிபால டி சில்வா பிரதிநித்துவப்படுத்தும் பதுளை மாவட்டத்தில் தோல்வியடைந்ததை காரணம் காட்டி அவருக்கு எதிராக இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
எது எப்படி இருந்த போதிலும், கடந்த ஜனாதிபதித் தேர்தல் மிகவும் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடத்தப்பட்டிருந்தால், மகிந்த ராஜபக்ச அம்பாந்தோட்டை மாவட்டத்தில் வெற்றி பெறுவதிலும் சவாலான நிலைமை ஏற்பட்டிருக்கும் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மகிந்த ராஜபக்ச, தனது நிறைவேற்று அதிகாரத்தையும், ஊடக அதிகாரத்தையும், முப்படை மற்றும் பொலிஸ் அதிகாரங்களையும் பயன்படுத்தி, மக்கள் பணத்தை முறைகேடாக செலவிட்டதன் காரணமாகவே சில மாவட்டங்களில் வெற்றிபெற்றார்.
இல்லாவிட்டால், அவரால் அந்த மாவட்டங்களையும் வென்றிருக்க முடியாது எனவும் அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
உண்மையான நிலைமை இப்படி இருக்க, எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வாவுக்கு சவால் விடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவுபடுத்த முயற்சிக்கும் நபர்கள் தற்போது நேரடியாகவே தமது செயற்பாடுகளை முன்னேடுக்க ஆரம்பித்துள்ளதாகவும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மகிந்தவால் கண்டிப்பாக வெற்றி பெற முடியாது: மேர்வின் சில்வா
[ திங்கட்கிழமை, 09 மார்ச் 2015, 07:25.43 AM GMT ]
தனியார் தொலைக்காட்சி ஒன்று வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.
சோதிடம் மீது தான் நம்பிக்கை இழந்து விட்டதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தமை குறித்து கருத்து வெளியிட்டுள்ள மேர்வின் சில்வா, சோதிடம் மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் தவறான மருத்துவரிடம் மருந்து எடுத்தால், மரணக்கவே வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்காதிருந்திருந்தால், தனது மகனை சிறையிலேயே கொன்றிருப்பார்கள் எனவும் தன்னை வெள்ளை வானில் கடத்தியிருப்பார்கள் எனவும் வெள்ளை வான் கலாசாரத்தின் ஸ்தாபகர் கோத்தபாய ராஜபக்ச எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மகிந்த ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வருவதை தான் விரும்பவில்லை எனவும் அவர் எதிர்வரும் தேர்தலில் போட்டியிட்டால் கண்டிப்பாக வெற்றி பெற முடியாது எனவும் மேர்வின் சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசின் ஊழல் மோசடிகளை விசாரணை செய்ய புதிய ஜனாதிபதி ஆணைக்குழு
[ திங்கட்கிழமை, 09 மார்ச் 2015, 08:08.31 AM GMT ]
குறித்த ஆணைக்குழுவில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளான பிரியசாத் டேப்த், அனில் குணரத்ன, உயர் நீதிமன்றம் நீதிபதி கிஹான் ஹமான்ஷீ குலதுங்க, முன்னாள் கணக்காய்வாளர் சரத் சந்திரசிறி மாயாதுன்ன, ஓய்வுபெற்ற சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி வழக்கறிஞர்கள் ஞானதாச ஆகியோர் குறித்த ஆணைக்குவின் அங்கத்தினர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
மேலும் இவ் ஆணைக்குழுவினால் ராஜபக்ச அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட பெரிய அளவிலான திட்டங்கள் மூலம் இடம்பெற்ற பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பாக அரச வளங்கள் மற்றும் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்தல் உட்பட பல காரணங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyDTdSUmtyI.html
மோடியின் இலங்கை விஜயத்தை இரத்து செய்யவும்: வீ.நாராயணசுவாமி வேண்டுகோள்
[ திங்கட்கிழமை, 09 மார்ச் 2015, 09:36.02 AM GMT ]
ரணிலின் இக்கருத்து தொடர்பாக இராஜதந்திர மட்டத்தில் பதில் பெற்று தருமாறு இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் காங்கிரஸ் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இப்படியான ஒரு சூழலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் தொடர்பாக மீண்டும் ஒரு முறை சிந்திக்குமாறு வீ.நாராயணசுவாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பாக தீர்வு வழங்காமல் மீனவர்களை சுட்டுதள்ளுவது தான் இலங்கை பிரதமரின் தீர்மானமா என வீ.நாராயணசுவாமி கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும் இந்திய காங்கிரஸ் ஆட்சியில் இலங்கை மீனவர்கள் பாதிக்கப்பட்ட அனைத்து சந்தர்ப்பங்களிலும் இந்தியா அவர்களை பாதுகாத்தது.
இலங்கை பிரதமரின் அவ்வாறான கருத்து இரு நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவை முறிக்கும் ஒரு செயலாகும். கடந்த காலங்களில் இலங்கை தமிழ் மக்கள் முகங்கொடுத்த சகல பிரச்சினைகள் தொடர்பாக தமிழ் நாட்டிலும் எதிர்ப்புகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அவரின் இந்த சர்ச்சைக்குரிய கருத்து இவ்வாறான எதிர்ப்புகளுக்கு பங்களிப்பு வழங்கும் வகையில் காணப்படுகின்றது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDTdSUmtzC.html
Geen opmerkingen:
Een reactie posten