[ ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2015, 04:49.48 AM GMT ]
அத்துடன், தன்னை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாகவும் தாக்கப்பட்ட எஸ்.வனராஜா என்பவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விவசாய நிலம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு இலக்கான நபர் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பாக பொலிஸாரிடம் முறைபாடு சமர்ப்பித்துள்ளதாகவும் தாக்குதலுக்குள்ளான நபர் தெரிவித்துள்ளார்.
எனினும் சம்பவம் தொடர்பாக இதுவரை எவ்வித முறைபாடுகளும் பொலிஸாருக்கு கிடைக்கவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyDRWSUlr7F.html
ஜனாதிபதிக்கு அடுத்து சபாநாயகருக்கே அதிகாரம்!
[ ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2015, 10:40.56 AM GMT ]
இதுவரை காலமாக ஜனாதிபதி இல்லாத சந்தர்ப்பங்களில் அவரது பணிகளை நிறைவேற்றுவதற்காக அதிகாரம் பிரதமருக்கு வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 19ஆவது அரசியலமைப்பின் திருத்த சட்டத்தின் ஊடாக சபாநாயகருக்கு அவ்வதிகாரத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஜனாதிபதி தனது பதவி காலத்தில் இருக்கும் போது உயிரிழந்தாலே, சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலே அல்லது அவர் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளும் சந்தர்ப்பங்களில் ஜனாதிபதிக்கு பதிலாக நாட்டின் அரச தலைவராக சபாநாயகர் செயற்படுவார்.
குறித்த சந்தர்ப்பங்களில் சபாநாயகரும் இல்லை என்றால் பிரதி சபாநாயகருக்கு இவ் அதிகாரத்தை வழங்குவதற்கு அரசியலமைப்பு திருத்தத்தினூடாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyDRWSUlszF.html
Geen opmerkingen:
Een reactie posten