தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 22 maart 2015

தமிழக மீனவர்கள் கைது: தமிழிசை கண்டனம்



மட்டக்களப்பில் இருந்து இடம்பெயர்ந்த சிங்கள மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கை!
[ ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2015, 09:11.24 AM GMT ]
மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து யுத்த காலத்திற்குள் இடம்பெயர்ந்த சிங்கள மக்களை மீளக் குடியமர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கிழக்கு மாகாண சபையின் ஆளுனர் ஒஸ்ரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்த சிங்கள மக்களுடனான சந்திப்பு நேற்று பிற்பகல் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் டேபா மண்டபத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண சபையின் ஆளுனர் ஒஸ்ரின் பெர்னாண்டோ தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட், மாகாண கல்வி மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் சி.தண்டாயுதபாணி, மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மத்திய மீள்குடியேற்ற அமைச்சின் உதவி செயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஜயந்திபுரம், கருவப்பங்கேணி ஆகிய பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து சென்றதாக கருதப்படும் 64 குடும்பங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதன்போது மீள்குடியேற்றப்பட வேண்டியதாக தெரிவிக்கப்படும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.
சட்ட பூர்வமான காணி உரிமையினைக் கொண்டுள்ளவர்களை மீள்குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் இங்கு உறுதியளிக்கப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmtyDRWSUlszC.html


ஒவ்வொரு உயிருக்கும் இன்றியமையாத அடிப்படை தேவை தண்ணீர்!
[ ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2015, 09:27.57 AM GMT ]
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உலக மக்கள் தொகையால் தண்ணீரின் தேவையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.  அந்த வகையில் உலகில் வாழும் ஒவ்வொரு உயிருக்கும் இன்றியமையாத அடிப்படை தேவை என்றால் அது தண்ணீர் தான்.
நாம் வாழும் பூமியானது சுமார் 70 சதவிகிதம் தண்ணீரால் சூழப்பட்டிருந்தாலும், வெறும் 2.5 சதவிகிதமே நிலப்பரப்பில் காணப்படுகிறது.
இதிலும் முக்கால் வாசி பயன்படுத்த முடியாத அளவில் பனிப்பாறைகளாக துருவ பகுதிகளில் உள்ளன, எஞ்சியுள்ள 0.26 விழுக்காட்டை மட்டுமே மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
அத்துடன் தொழிற்சாலைகளிலிருந்து வரும் கழிவு நீர், கடலுடன் கலக்கும் மழைநீர் என பலவழிகளில் தண்ணீர் மாசுபடுவதுடன் வீண் விரையமாகிறது.
எனவே நீர்வள பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும், அதை மக்களிடம் உணர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 1992ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் மார்ச் 22ம் திகதி உலக தண்ணீர் தினத்தை கொண்டாட ஐ.நா சபை முடிவு செய்து நடைமுறைப்படுத்தியும் வருகிறது.
உலக நாடுகளில் 40 சதவீத மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள், தினமும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சுகாதாரமற்ற தண்ணீரால் இறக்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிலும் குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளிலேயே இந்த அவலநிலை இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்கால சந்ததியினர் என்ன செய்வார்கள் என்ற கேள்வி நம் முன்னே பூதாகரமாக எழுந்து நிற்கிறது. தண்ணீரை சேமிக்க வேண்டிய கட்டாய சூழலில் இருக்கிறோம் என்பதை ஒவ்வொரு நபரும் உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே இதற்கு தீர்வு நிச்சயம்.

World Water Day Public Opinion von cineulagam
http://www.tamilwin.com/show-RUmtyDRWSUlszD.html
காணிப் பிரச்சினைத் தீர்வுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் ஏறாவூர் விஜயம்
[ ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2015, 09:49.52 AM GMT ]
கிழக்கு மாகாணத்தில் கடந்த கால யுத்தம் மற்றும் அனர்த்தங்களின்போது தங்களின் சொந்த இடங்களை விட்டு வேறிடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றிருந்தவர்களின் காணிகளை உரியவர்களிடம் பெற்றுக்கொடுப்பது தொடர்பான நிகழ்வு இன்று காலை ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்றின் பெர்ணாண்டோ கலந்து கொண்டார்.
மேலும், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபானி, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் அமைச்சர் ஹக்கீமின் இணைப்புச் செயலாளருமான முபீன் உள்ளிட்ட பல அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் காணிப் பிரச்சினை தொடர்பில் மிக விரிவான கலந்துரையாடல் ஒன்றை நடாத்தி அதற்கான தீர்வினை எட்டித்தருவதாக இதன்போது தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRWSUlszE.html

தமிழக மீனவர்கள் கைது: தமிழிசை கண்டனம்
[ ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2015, 10:46.53 AM GMT ]
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது கண்டிக்கத்தக்கது.
பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று இந்திய ஊடகங்களுக்கு செய்தி வெளியிட்டுள்ளார்.
இந்திய பிரதமரும், வெளிவிவகார அமைச்சரும் இரு நாட்டு மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண முனைந்து வரும் நிலையில் இலங்கை கடற்படையினர் இச்செயல் கண்டிக்கத்தக்கது.
இலங்கை அதிகாரிகள் ஒரு சிலரின் இவ் நடவடிக்கைகள் மிகவும் வருத்தமளிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.
இருநாட்டு மீனவர்கள் பிரச்சினை என்பது தற்காலிகமானதே விரைவில் இதற்கு நிரந்தர தீர்வு எட்டப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இருநாட்டு மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அதிக கவனம் செலுத்தி வருகின்றார் என இந்திய மத்திய அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் இன்று இந்திய ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRWSUlszG.html

Geen opmerkingen:

Een reactie posten