தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 22 maart 2015

காணாமற்போனோர்கள் தொடர்பான அறிக்கையை ஜனாதிபதியிடம் ஒப்படைப்போம்! ஊடகத்திற்கு வெளியிடமாட்டோம்!



தமிழர்களின் பெரும் கடமையாளன் அமரர்.இராமலிங்கம் நாகலிங்கம் அவர்கள்: பா.உறுப்பினர் சி.சிறீதரன்
[ ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2015, 06:28.00 AM GMT ]
தமிழர் விடியலுக்காய் பாடுபட்ட இராமலிங்கம் நாகலிங்கம் அவர்களின் மறைவையொட்டி தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களின் பா.உறுப்பினர் சி.சிறீதரன் கிளிநொச்சி அறிவகம் செயலகம் ஊடாக வணக்கத்தை தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் புலம்பெயர் வாழ்வில் மிக உயர்ந்த மனிதர்களாய் தங்கள் கடமையை தான் பிறந்த மண்ணுக்காக சேவை ஆற்றியவர்களில் அமரர்.இராமலிங்கம் நாகலிங்கமும் மிக உயர்ந்தவர்.
நீண்ட புலம் பெயர் வாழ்வு அவருடையது அதனால் இந்த மண் பற்றிய ஏக்கமும் தாகமும் அவருக்கு அதிகம்.
இந்த மண்ணுக்கு தான் ஆற்ற வேண்டிய கடமையை இந்த மண்ணின் வேர்களோடும் விழுதுகளோடும் சேர்ந்து ஆற்றினார்.
ஒரு இனத்தின் அடையாளத்தில் மிக முக்கியமானது மொழி என்பதை உணர்ந்திருந்த அவர் தமிழ் மொழியை புலம்பெயர் தேசத்தில் குறிப்பாக ஜேர்மனியில் ஒரு அமைப்பினுடாக இளைய சமுதாயத்திடம் வளர்தெடுப்பதற்கு எடுத்த முயற்சியில் வெற்றிகண்டார்.
இளைய சமுதாயத்திடமும் புலம்பெயர் தமிழ் மக்களிடமும் தமிழ்மொழி தாயகம் உரிமை சுதந்திரம் பற்றிய விழப்புணர்வின் வடிவமாக அமரர்.இ.நாகலிங்கம் அவர்கள் இருந்துள்ளார்.
அவரது சேவையை தமிழர்களின் தன்னிகரில்லா தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்கள் மதிப்பளித்துள்ளார். அதன் மூலம் அமரர்.நாகலிங்கம் அவர்களின் கடமையின் உயர்வு அறியப்பட்டுள்ளது.
ஒரு மாமனிதர் அமரர்.நாகலிங்கம் அவர்கள் இன்று பல விருட்சங்களுக்கு விதையூன்றியவர், உலக தமிழ்மக்களின் மனங்களில் என்றும் அழியாப்புகழ்பெற்ற அவரின் மறைவுக்கு தாயக மக்களின் சார்பில் எமது வணக்கத்தை பகிர்ந்து கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyDRWSUlsyE.html


மகிந்த ராஜபக்சவின் அடுத்த இலக்கு
[ ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2015, 06:45.36 AM GMT ]
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த அதிகளவானோரை பிரித்தெடுத்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் வேறு கட்சியில் போட்டியிட வைக்க முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட குழுவினர் ஏற்கனவே விரிவான வேலைத்திட்டங்களை உருவாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் சர்வாதிகார அதிகாரங்களை நீக்கி, சுயாதீன ஆணைக்குழுக்களை ஸ்தாபிக்கும் 19 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவை வழங்குவதில்லை எனவும் மகிந்த குழுவினர் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அதிகாரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதிப்படுத்திக்கொள்ள சந்தர்ப்பம் கொடுக்காது, அதன் ஊடாக தற்போதைய அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்கவும் இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதித் தேர்தலில் தோற்ற பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவியை உடனடியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்தார்.
எனினும் அவர் தற்போது, கட்சியின் கீழ் மட்ட பிரதிநிதிகளை ஒன்றிணைத்து கொண்டு தன்னை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என கட்சியின் தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்.
மாவட்ட மட்டத்தில் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைகளில் உறுப்பினர்கள் உட்பட சுதந்திர கட்சியின் கீழ் மட்ட பிரதிநிதிகளுடன் சந்திப்புகளை நடத்தி, அவர்கள் ஊடாக அறிக்கைகளை வெளியிட்டும் வருகிறார்.
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் அவரை சுற்றியிருந்த, ஊழல் அமைச்சர்கள் இந்த சூழ்ச்சியான வேலைத்திட்டத்தை வழிநடத்தி வருகின்றனர்.
இந்த முயற்சி தோல்வியடைந்தால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்சியில் இருந்து வெளியேற செய்து, வேறு கட்சி ஒன்றில் அவர்களை பொதுத் தேர்தலில் போட்டியிட வைக்கவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திட்டங்களை வகுத்துள்ளதாக தெரியவருகிறது.
மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமானவரும், நைஜீரியாவுக்கான இலங்கையின் தூதுவராக பணியாற்றியவருமான ஏ.எஸ்.பி. லியனகே என்பவர் பதிவு செய்துள்ள தொழிலாளர் கட்சியின் ஊடாக மகிந்த தலைமையில், சுதந்திர கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்களை பொதுத் தேர்தலில் நிறுத்த திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தொழிலாளர் கட்சியின் சின்னத்தை மாற்றும் விண்ணப்பமும் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக மகிந்த ராஜபக்ச ஊடகங்களிடம் பொய்யான தகவலை வெளியிட்டு வருகிறார்.
எனினும் சுதந்திரக் கட்சியின் கீழ் மட்ட பிரதிநிதிகளை தனது திட்டத்திற்காக ஒன்று திரட்டி வருகிறார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கை மன்றக் கல்லூரியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை அழைத்து நடத்திய பேச்சுவார்த்தையின் போது, கட்சியை ஒப்படைத்தால், அதனை முன்னெடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
கட்சியை ஒப்படைத்துள்ள மகிந்த ராஜபக்ச, கட்சி விடயத்தில் தலையீடு செய்யக் கூடாது என்று மறைமுகமாக கூறியிருந்தார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஒப்படைத்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, கட்சியில் தலையீடுகளை மேற்கொள்ளவில்லை எனவும் எந்த விடயத்திலும் அவர் சம்பந்தப்படவில்லை என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தார்.
எவ்வாறாயினும் இதற்கு பதிலளித்திருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தான் தோல்வியடைந்து 72 மணிநேரத்திற்கு முன்னர், கட்சியை மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்ததாகவும் தான் கட்சியின் தலைமை பதவியை பெற ஆறு மாதங்கள் ஆனதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மகிந்த ராஜபக்ச சூழ்ச்சிகளை செய்வதில் திறமைகளை கொண்டுள்ள நபர். 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கிளைகள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஆட்சியில் இருந்த பிரதேச சபைகளை பயன்படுத்தி தன்னை பிரதமராக்குமாறு அழுத்தும் கொடுக்கும் வகையில் யோசனைகளை நிறைவேற்றிருந்தார்.
அதனூடாக கட்சியின் தலைமைக்கு பெரும் அழுத்தங்களை கொடுத்து வந்தார். இதே விதமாக கட்சியின் கீழ் மட்ட பிரதிநிதிகளை பயன்படுத்தி யோசனைகளை நிறைவேற்றி வருவது மகிந்த ராஜபக்சவின் முந்தைய செயற்பாடுகளை மேலும் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

ஸ்ரீ.சு.க அரசுடன் இணையும் வாய்ப்பு: ராஜித நம்பிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2015, 06:31.34 AM GMT ]
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்துடன் இணையக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அளுத்கமவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை அடிப்படையாக வைத்தே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்துடன் இணையும் வாய்ப்பு காணப்படுகின்றது என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை இன்று பிற்பகல் 2  மணியளவில் ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களின் சந்திப்பொன்றும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் சிலருக்கு அமைச்சு பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது எனவும் உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவித்துள்ளன.
ஸ்ரீ.சு.கவின் மே தின பேரணிகள் மூன்று
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரதான பேரணிக்கு மேலதிகமாக இந்த மூன்று பேரணிகளும் நடத்தப்பட உள்ளதாக கட்சியின் மே தினக் கூட்ட ஏற்பாட்டுக்குழு தலைவர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
குறித்த பேரணிகள் மூன்றிற்குமே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமைதாங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதான பேரணி கொழும்பு ஹய்டபாஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
குறித்த பேரணி ஏற்பாட்டுக்குழுவின் செயலாளராக மஹிந்தானந்த அலுத்கமகேவும், நிதி குழு செயலாளராக ப்லிப்ஸ் பெரேராவும் செயற்படவுள்ளாரென தெரிவிக்கப்படுகின்றது.

காணாமற்போனோர்கள் தொடர்பான அறிக்கையை ஜனாதிபதியிடம் ஒப்படைப்போம்! ஊடகத்திற்கு வெளியிடமாட்டோம்!
[ ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2015, 08:40.51 AM GMT ]
காணாமல் போனவர்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற அறிக்கை ஜனாதிபதியிடம் வழங்குவதற்கே எமக்கு பொறுப்பு உள்ளது, ஊடகங்களுக்கு வழங்குவதற்கு எங்களுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை.
ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியின் போது காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் கே.ரீ.கெலி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு பாரிய சேவையை செய்து வருகின்றது.
இதை அறியாது சில சிவில் அமைப்புக்கள் எமது ஆணைக்குழு முன் ஆர்பாட்டம் நடத்தியமை வருந்ததக்கதே, எனினும் இந்த சிவில் அமைப்புக்களை நாங்கள் கொழும்புக்கு அழைத்து எமது சேவைகள் குறித்து தெளிவாக விளக்கமளிக்கவுள்ளோம்.
2013 ஜனவரி முதல் பதிவு செய்யப்பட்டுள்ள சாட்சியங்களில் காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு பல சிபார்சுகளையும் செய்துள்ளோம்.
இதுவரை சுமார் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதுடன், மேலும் கிடைத்துக்கொண்டே இருக்கின்றது. எமது குழுவிற்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட குழுவிற்கும் எவ்வித தொடர்புகளும் கிடையாது.
சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான செயற்பாடுகள் குறித்து ஆராய்வதே அவர்களின் பொறுப்பாகவுள்ளது.
எமது ஆணைக்குழுவின் முக்கிய பொறுப்பு அறிக்கையை தயார் செய்து ஜனாதிபதிக்கு கொடுப்பதே அதை ஊடகங்களுக்கு வெளியிடுவதா இல்லையா என ஜனாதிபதியே தீர்மானிக்கவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRWSUlszA.html

Geen opmerkingen:

Een reactie posten