தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 3 maart 2015

கிழக்கு மாகாண சபையில் மீண்டும் அமைச்சு மாற்றம்



சர்வதேச சமூகத்தை கையாள்வதில் இலங்கை பெற்ற வெற்றியே மங்களவின் ஐ.நா உரை: ஊடகவியலாளர் நிராஜ் டேவிட்
[ செவ்வாய்க்கிழமை, 03 மார்ச் 2015, 08:11.26 AM GMT ]
தமிழர் தரப்பு மிக முக்கியமாக காய் நகர்த்த வேண்டிய யதார்த்தத்தை இந்த மனித உரிமைகள் கூட்டத் தொடர் வெளிப்படுத்தி நிற்கின்றது என சிரேஸ்ட ஊடகவியலாளர் நிராஜ் டேவிட் தெரிவித்துள்ளார்.
நேற்று ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28வதுகூட்டம் தொடர்பாக லங்காசிறிக்கு வழங்கிய விசேட நேர்காணலிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பாக தெரிவிக்கையில்,
இந்தக் கூட்டத் தொடர் பல எதிர்பார்ப்புக்களைப் பொய்யாக்கி விட்ட நிலையில் தான், தற்போது காரியங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
அதேவேளை, இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர முதல் நாள் ஆற்றிய உரையில், சர்வதேச சமூகத்தைக் கையாள்வதில் இலங்கை அரசாங்கம் பெற்றிருக்கின்ற வெற்றியையும் இனி அவர்கள் எப்படி சர்வதேச சமூகத்தை கையாளப் போகிறார்கள் என்பதை கட்டியங்கூறும் விதமாகவும் அமைந்திருக்கின்றது.
சீனாவின் பக்கம் மகிந்த ராஜபக்ச நின்றதன் காரணமாக மனித உரிமைகள் என்ற ஆயுதத்தை கையில் எடுத்த அமெரிக்காவுக்கு தற்போது அந்த தேவை இல்லை.
இன்று இலங்கையின் ஆட்சி அதிகாரம் அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாக மாறியிருப்பதன் நிலையில் மனித உரிமைகள் என்ற ஆயுதத்தைப் பாவித்து இலங்கையைத் தாக்க வேண்டிய தேவை அமெரிக்காவுக்கு இல்லை எனத்தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyDTXSUmo4C.html


கிழக்கு மாகாண சபையில் மீண்டும் அமைச்சு மாற்றம்
[ செவ்வாய்க்கிழமை, 03 மார்ச் 2015, 08:21.54 AM GMT ]
கிழக்கு மாகாண சபையில் ஏற்பட்டிருந்த குழப்பமான சூழ்நிலை நீங்கி இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் புதிய அமைச்சுக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
இன்று செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்றின் பெர்னாண்டோவின் காரியாலயத்தில் இடம்பெற்ற அமைச்சுக்கள் பொறுப்பேற்கும் நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் , ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு  ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதில் அமைச்சர்களாக: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பாக எம்.ஐ.எம்.மன்சூர் மீண்டும் சுகாதார அமைச்சராகவும்,
தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி சார்பாக வீ.தண்டாயுதபானி கல்வி அமைச்சராகவும், துரைராஜசிங்கம், விவசாய அமைச்சராகவும்,
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கட்சி சார்பாக, ஆரியபதி கலபதி வீதி அபிவிருத்தி அமைச்சராகவும் பதவியேற்றுக்கொண்டனர்.
மாகாண சபையின் தவிசாளராக ஐக்கிய தேசிய கட்சியின் சார்பாக சந்திரதாச கலபதியும்,
பிரதித் தவிசாளராக தமிழ் விடுதலைக் கூட்டணி சார்பாக பிரசன்னா ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.
http://www.tamilwin.com/show-RUmtyDTXSUmo4E.html

Geen opmerkingen:

Een reactie posten