[ செவ்வாய்க்கிழமை, 03 மார்ச் 2015, 08:46.37 AM GMT ]
கடந்த மார்ச் மாதம் முதல் நாள் வவுனியாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில்,
தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வு தொடர்பில் இலங்கையின் புதிய அரசு தாமதமின்றி விரைந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் உட்பட அனைத்து தீர்மானங்களையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு (கனடா) முழுமனதுடன் வரவேற்று தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.
(1) இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை முன்னெடுக்கும் நடவடிக்கைகளை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு ஏற்றுக் கொள்வதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வரவேற்கிறோம்.
(2) தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவித்தல், அரசியல் கைதிகளை விடுவித்தல், காணாமல் போனவர்கள் தொடர்பில் நடடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுதல், தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் அரசை வலியுறுத்தும் தீர்மானங்களை வரவேற்கின்றோம்.
(3) கடந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் வடக்கு மற்றும் கிழக்கில் சிவில் நிருவாகப் பதவிகளுக்கு இராணுவத்தின் முக்கிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.
அவர்களை அகற்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கைப்படி வட மாகாண சபையின் ஆளுநர் ஓய்வுபெற்ற இராணுவ தளபதி ஜி.ஏ. சந்திரசிறி, கிழக்கு மாகாணசபை ஆளுநர் ஓய்வுபெற்ற கடற்படைத்தளபதி மொகான் விஜயவிக்கிரம, திருகோணமலை அரசாங்க அதிபர் ஓய்வுபெற்ற இராணுவ தளபதி இரஞ்சித் சில்வா ஆகியோர் விடுவிக்கப்பட்டு அவர்களது இடத்தில் சிவில் நிருவாகிகள் நியமிக்கப்பட்டதை வரவேற்கிறோம்.
(4) வட மாகாண சபையின் முதலமைச்ரோடு முரண்பட்டுக் கொண்டு மோதல் போக்கைக் கடைப்பிடித்து வந்த விஜயலட்சுமி ரமேஷ் இடமாற்றம் செய்யுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கைப்படி அவரை இடமாற்றம் செய்யப்பட்டதை வரவேற்கிறோம்.
(5) புலம்பெயர் தமிழர்கள் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்களை மீள்கட்டியெழுப்பவும் கைத்தொழில், விவசாயம் போன்ற துறைகளில் முதலீடு செய்யவும் ஒரு பொறிமுறையை விரைவாக உருவாக்குமாறு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
(6) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் தமிழ் மக்களது உரிமைகளை வென்றெடுப்பதற்கு பற்றுதியோடு ஆற்றிவரும் பாரிய பணிகளை முழுமனதாக வரவேற்பதோடு அவர்கள் மீதான முழு நம்பிக்கையையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
(7) எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய சகல ஆயத்தங்களை துரிதமாக எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறது.
மேற்காட்டிய தீர்மானங்கள் 2015 மார்ச்சு மாதம் முதல்நாள் கூடிய ததேகூ (கனடா) இன் சிறப்பு செயல்குழுக் கூட்டத்தில் ஒருமனமாக நிறைவேற்றப்பட்டன.
இவ்வாறு தமிழத் தேசியக் கூட்டமைப்பு- கனடா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
56, Littles Road, Scarborough, ON M1B 5C5
Canadiantna@gmail.com
Canadiantna@gmail.com
http://www.tamilwin.com/show-RUmtyDTXSUmo4H.html
ஸ்ரீ.சு.கட்சி பிரதிநிதிகள் தமது இஷ்டத்திற்கு கருத்து தெரிவிக்க வேண்டாம்: அநுர வேண்டுகோள்
[ செவ்வாய்க்கிழமை, 03 மார்ச் 2015, 09:52.50 AM GMT ]
கட்சியின் செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா இன்று விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சுதந்திர கட்சி பிரதிநிதிகள் தமது இஷ்டத்திற்கு செயற்படவும், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடவும் தடைவிதிக்க மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.
மேலும் மக்கள் பிரதிநிதிகள் தமது தனிப்பட்ட கருத்துக்களை ஊடகங்களுக்கு முன் வைப்பதினால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கொள்கைக்கு இழுக்கு ஏற்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்துள்ள ஏனைய கட்சிகளையும் ஒன்றிணைத்து எதிர்வரும் பொது தேர்தலில் வெற்றி பெறுவதே தமது பிரதான நோக்கம் எனவும்,
இத்திட்டத்தை சீர்குலைப்பதற்கு சில தரப்புக்கள் சதி முயற்சியில் ஈடுப்பட்டு வருவதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் புலிகளின் பெண் கடற்புலி தளபதிகளில் ஒருவர் மகளுடன் கைது.
[ செவ்வாய்க்கிழமை, 03 மார்ச் 2015, 10:13.28 AM GMT ]
முருகேசு பகீரதி என்ற பெண் புலிப் போராளியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், குறித்த பெண் புலி உறுப்பினரை கைது செய்துள்ளனர்.
பெண் உறுப்பினர் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பிரான்ஸ் நாட்டிலிருந்து அண்மையில் விடுமுறையில் இலங்கை சென்றிருந்த சிறுமியும் தாயும் திங்கட்கிழமை காலை பிரான்ஸ் நாட்டுக்கு திரும்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையம் சென்றிருந்தனர்.
குறித்த பெண் பிரான்ஸிற்கு செல்ல முயற்சித்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
2ம் இணைப்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பெண் ஒருவரும் அவரது 8 வயது மகளும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் பிரான்ஸ் குடியுரிமை பெற்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சியில் உள்ள தமது பெற்றோரை பார்க்கவென பிரான்ஸில் இருந்து வந்த ஜெயகணேஸ் பகீரதி என்ற பெண்ணும் அவரது 8 வயது மகளான ஜெயகணேஸ் பகலவி ஆகியோருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனினும் பகிரதி தனது மகளுடன் பிரான்ஸில் வசித்து வருவதாகவும் மகளின் பாடசாலை விடுமுறையை முன்னிட்டு கிளிநொச்சியில் உள்ள தனது பெற்றோரை பார்வையிட வந்து மீண்டும் பிரான்ஸ் செல்ல இருந்தபோதே கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை கைது செய்யப்பட்ட பகிரதியும் பகலவியும் தற்போது பயங்கரவாத தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்புட்ட செய்தி
http://www.tamilwin.com/show-RUmtyDTXSUmo5C.html
Geen opmerkingen:
Een reactie posten