தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 3 maart 2015

ஆட்சி மாற்றம் தமிழர்களுக்கு ஆபத்தா? பிரித்தானிய தமிழர் பேரவையின் தலைவர் கருத்து



கிழக்கு மாகாண சபையில் மீண்டும் அமைச்சு மாற்றம்
[ செவ்வாய்க்கிழமை, 03 மார்ச் 2015, 08:21.54 AM GMT ]
கிழக்கு மாகாண சபையில் ஏற்பட்டிருந்த குழப்பமான சூழ்நிலை நீங்கி இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் புதிய அமைச்சுக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
இன்று செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்றின் பெர்னாண்டோவின் காரியாலயத்தில் இடம்பெற்ற அமைச்சுக்கள் பொறுப்பேற்கும் நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் , ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு  ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதில் அமைச்சர்களாக: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பாக எம்.ஐ.எம்.மன்சூர் மீண்டும் சுகாதார அமைச்சராகவும்,
தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி சார்பாக வீ.தண்டாயுதபானி கல்வி அமைச்சராகவும், துரைராஜசிங்கம், விவசாய அமைச்சராகவும்,
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கட்சி சார்பாக, ஆரியபதி கலபதி வீதி அபிவிருத்தி அமைச்சராகவும் பதவியேற்றுக்கொண்டனர்.
மாகாண சபையின் தவிசாளராக ஐக்கிய தேசிய கட்சியின் சார்பாக சந்திரதாச கலபதியும்,
பிரதித் தவிசாளராக தமிழ் விடுதலைக் கூட்டணி சார்பாக பிரசன்னா ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.
http://www.tamilwin.com/show-RUmtyDTXSUmo4E.html


ஜனாதிபதி, தமிழில் பேச வேண்டும் - தமிழ் மக்களின் காணிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை: மாவை
[ செவ்வாய்க்கிழமை, 03 மார்ச் 2015, 08:29.43 AM GMT ]
வடக்கில் மக்களின் காணிகளை விடுவித்து கடற்பகுதியை அபிவிருத்தி செய்து பலாலியில் விமான நிலையம் மற்றும் துறைமுகம் என்பனவற்றை அபிவிருத்தி செய்ய புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராசா கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் இன்று இடம்பெற்ற வடக்கு மாகாண ஒருங்கிணைப்பு கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இந்தக் கோரிக்கையினை விடுத்திருந்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது பிரதேசம் நீண்ட கால போரினால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைத்தையும் இழந்தவர்களாக உள்ளனர். அபிவிருத்தி செய்ய வேண்டிய பல தேவைகள் உள்ளன.
எனவே இவற்றைக் கருத்திற் கொண்டு அமைச்சரவையில் விசேட நிதி ஒதுக்கீடுகளை வட பகுதிக்கு ஏற்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் போரினால் விதவைகளாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்கள் இங்கு உள்ளனர். அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இங்கு பட்டங்களைப் பெற்று பல ஆண்டுகளாகியும் வேலை வாய்ப்பு இன்றி இளைஞர், யுவதிகள் உள்ளனர். எனவே அவர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொடுக்க புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேணடும்.
மேலும் தமிழர்களது நிலப்பரப்புக்கள் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. எனவே அவற்றை விரைவில் விடுவித்து மக்களை மீள்குடியேற்றத்தினை மேற்கொள்ள வேண்டும்.
பலாலியில் விமான நிலையத்தினை அமைத்து ஏனைய நாடுகளுக்கு போக்குவரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல துறைமுகத்தையும் அபிவிருத்தி செய்ய வேண்டும்.
இந்த அபிவிருத்திகள் அனைத்தும் மக்களது நிலங்களை விடுத்து கடற்பகுதியை அபிவிருத்தி செய்து அவற்றில் அமைக்க புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெளிநாடுகளுடன் பேசி பணத்தைப் பெற்று வடக்கு மாகாணத்தில் அபிவிருத்திகளை மேற்கொள்ள அரசு ஆதரவு வழங்க வேண்டும். என அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி, தமிழில் பேச வேண்டும்
அநுராதபுரம், பொலநறுவை ஆகிய இடங்களில் நாங்கள் உரையாற்றும் போது சிங்களத்தில் உரையாற்றுவது போன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடமாகாணத்தில் தமிழில் உரையாற்ற வேண்டும்.
நல்லிணக்கம் என்பது அதனூடாகவே ஏற்படும் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyDTXSUmo4F.html


ஆட்சி மாற்றம் தமிழர்களுக்கு ஆபத்தா? பிரித்தானிய தமிழர் பேரவையின் தலைவர் கருத்து
[ செவ்வாய்க்கிழமை, 03 மார்ச் 2015, 07:22.09 AM GMT ]
இலங்கையில் தற்போது வந்துள்ள ஆட்சியாளர்கள் மகிந்தவை விட கெட்டித்தனமானவர்கள் என   பிரித்தானிய தமிழர் பேரவையின் தலைவர் ரவி தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28வது கூட்டத் தொடர் நேற்று ஆரம்பமானது. இது தொடர்பாக லங்காசிறிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது தவிர்க்கப்பட முடியாதது. முக்கியமான சக்திகள் அதற்குப் பின்னால் இருந்ததுண்டு. அதேபோல் மகிந்த ராஜபக்சவின் கொடுமை தாங்க முடியாமல் எங்கள் மக்கள் வாக்களித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
தற்போது இலங்கையில் ஆட்சிக்கு வந்தவர்கள், சர்வதேசத்துடன் ஒத்துச் சென்று அதனை நீர்த்துப் போகச்செய்யக் கூடிய வல்லமை அவர்களிடம் உண்டு. ஏனென்றால் மகிந்த தலைகீழாக நின்றும் நிறுத்த முடியாத சர்வதேச சுயாதீன விசாரணைகளை இவர்கள் ஆட்சிக்கு வந்த உடனேயே பிற்போடச் செய்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து சர்வதேச நாடுகள் ஐ.நா சபையில் புதிய ஆட்சியாளர்களுக்கு அவகாசம் கொடுக்க வேண்டுமென்பதை தொட்டுச் சென்றார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDTXSUmo3G.html

Geen opmerkingen:

Een reactie posten